Sunday, March 30, 2008

கள்ளஉறவுக்கு தயார் ஆகும் ஜெயலலிதா !!!!!!!!!

கள்ளஉறவுக்கு தயார் ஆகும் ஜெயலலிதா !!!!!!!!!
தமிழர்களை ஏமாற்றி தனது அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கும் கன்னடக்காரி வந்தேறி ஜெயலலிதா இப்பெழுதும் மற்றொரு ஏமாற்று வேளையை ஆரம்பித்துள்ளார். சுத்தமான குடிநீர் இன்றி நச்சுக்கலந்த நிலத்தடி நீரைக் குடித்துக்கொண்டு வாழ்கின்ற லட்சகணக்கான தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான ஒகெனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தி அத்திட்டத்தை துவங்கியது தமிழக அரசு.திட்டம் தொடங்கிய ஒரு வாரத்திற்குள் ஒகெனக்கல் தங்களுக்கு சொந்தம் என்று எ(இ)டியுரப்பா என்ற தேச துரோகி தமிழக எல்லைக்குள் தனது நச்சு விதைகளை கக்கிச்சென்றுள்ளன். இந்த தேச துரோகியின் பா.ஜ.க கட்சியுடன் தான் தமிழின விரோதி ஜெயலலிதாவின் அ(அம்மா)தி.மு.க வருகின்ற கர்னாடகா சட்டமன்ற தேர்தலில் உறவு கொள்ள தயாராகி வருகின்றது. இந்த செய்தியை இது வரை அவர் மறுக்கவில்லை. இந்த கள்ளஉறவை மறைத்து ஒகெனக்கலில் மக்களை ஏமாற்ற கர்னாடகாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.இந்த இரண்டு மக்கள் விரோத கட்சிகளையும் தமிழக மக்கள் புறக்கனிக்க வேண்டும்.ஜெயலலிதாவிற்கு தமிழின விரோதி என்ற பட்டத்தை கலைஞர் கொடுக்கவேண்டும் என்று நமது வலையுலக பதிவர் ஒருவர் எழுதினார், கலைஞர் தான் கொடுக்கவேண்டும் என்றல்ல இனஉணர்வு உள்ள ஒவ்வொரு தமிழனும் தமிழின விரோதி ஜெயலலிதா என்றே அழைக்கவேண்டும்.தமிழர்களை ஏமாற்றும் இந்த தமிழின விரோதியை தமிழகத்தை விட்டே வெளியேற்ற வேண்டும்.

Monday, March 3, 2008

சிவனடியார் ஆறுமுகசாமி மீது பார்பணர்கள் கொலை வெறி தாக்குதல்....................

சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாட சிவனடியார் ஆறுமுகசாமி சென்ற போது போலீசாருக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. தாக்கப்பட்டார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாட சிவனடியார் ஆறுமுகசாமி முயன்றார். அதற்கு இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தடை பிறப்பித்தார். ஆனால் ஆறுமுகசாமி தரப்பில் இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில் பூஜை காலங்களைத் தவிர பிற நேரங்களில் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அறநிலையத் துறை செயலரிடம் தீட்சிதர்கள் மீண்டும் மேல் முறையீடு செய்தனர். நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடலாம் என்று கடந்த 29ம் தேதி அறநிலையத் துறை செயலர் சந்தானம் உத்தரவிட்டார். தீர்ப்பின்படி சிவனடியார் ஆறுமுகசாமி நேற்று தமிழில் பாட தயாரானார். அவருடன் மாவட்ட மனித உரிமை கழகத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் நேற்று தெற்கு வீதியில் கூடினர்.

இதனால் கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப்குமார் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆறுமுகசாமி தெற்கு வீதியில் இருந்து யானை மீது அமர்ந்தபடி நடராஜர் கோவிலின் பாரம்பரிய இசை முழங்க அழைத்து வரப்பட்டார். கோவிலுக்குள் நுழைய முயன்ற ஆறுமுகசாமியைப் போலீசார் தடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக 3 பேர் மட்டுமே கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க முடியும் என்றனர்.

இதனால் போலீசாருக்கும் ஆறுமுகசாமி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஆறுமுகசாமி தரப்பினர் தெற்கு சன்னதி கோவில் நுழைவு வாயிலில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். 30 நிமிடம் தர்ணா போராட்டத்திற்கு பிறகு 25 பேர் செல்லலாம் என போலீசார் கூறினர். அதனைத் தொடர்ந்து காலை 11.25 மணிக்கு ஆறுமுகசாமி வக்கீல்கள் ராஜி செந்தில் உள்ளிட்ட 25 பேர் கோவிலுக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

ஆறுமுகசாமி தமிழில் தேவாரம் பாடுவதை காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவிலுக்குள் குவிந்திருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் ஆறுமுகசாமி கோவிலில் உள்ள திருச்சிற்றம்பல மேடைக்கு நுழைய முயன் றார். அப்போது தீட்சிதர் தரப்பு வக்கீல்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். போலீசார் அரசு ஆணையை வக்கீல் களிடம் காட்டினர். அதனை தொடர்ந்து வக்கீல்கள் ஆறுமுகசாமி உள்ளே செல்ல ஒப்புக்கொண்டனர். ஆனால் ஆறுமுக சாமி மற்றும் போலீசாரை தீட்சிதர்கள் தடுத்தனர். அவர்களை எஸ்.பி. பிரதீப்குமார் விலக்கி விட்டார். அப்போது எஸ்.பி. பிரதீப்குமாரை தீட்சிதர்கள் சட்டையைப் பிடித்து கீழே தள்ளினர். இதனால் போலீசாருக்கும்- தீட்சிதர் களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் தீட்சிதர்களை அப்புறப்படுத்தினர்.தொடர்ந்து ஏ.எஸ்.பி. செந்தில்வேலன் மற்றும் போலீசார் கோவில் சம்பிரதாயப்படி சட்டையை கழற்றிவிட்டு ஆறுமுகசாமியை கோவிலுக்குள் மதியம் 12.04 மணிக்கு அழைத்து சென்றனர். அதனை 50க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மீண்டும் தடுத்தனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தடுக்க வந்த தீட்சிதர்கள் அனைவரையும் போலீசார் குண்டுகட்டாக வெளியேற்றினர். தீட்சிதர்கள் போலீசாரை தாக்கி கடித்து குதறினர். இதில் சில போலீசார் காயம் அடைந்தனர். இந்த சம்பவங்களால் சிதம்பரம் நடராஜர் கோவில் போர்களம் போல காட்சியளித்தது.

சிற்றம்பல மேடைக்கு சென்ற ஆறுமுகசாமி தேவாரம் பாடிவிட்டு மீண்டும் பகல் 12.14 மணிக்கு வெளியே வந்தார். அப்போது கோவிலுக்குள் கூடியிருந்த மக்கள் தமிழுக்குக் கிடைத்த வெற்றி என்று கோஷங்கள் எழுப்பினர். ஆறுமுகசாமி தமிழில் தேவாரம் பாடுவதற்கு முன் கோவிலுக்குள் செல்லும் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் பலத்த சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். மூன்று முறை கீழே விழுந்த எஸ்.பி.திருச்சிற்றம்பல மேடையில் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.பி. பிரதீப்குமாரை தீட்சிதர்கள் பலவந்தமாக தள்ளி விட்டனர். இதில் அவர் மூன்று முறை படிகட்டில் இருந்து கீழே விழுந்தார். ஆனால் அருகில் இருந்து அவரது பாதுகாவலர் மற்றும் போலீசார் எஸ்.பி. தரையில் விழுந்துவிடாமல் தாங்கி பிடித்துக் கொண்டனர்.தீட்சிதர்களின் செயலைப் பார்த்த போலீசார் தனது உயர் அதிகாரியைப் பிடித்துத் தள்ளும் தீட்சிதர்களை ஒவ்வொருவராக குண்டுகட்டாக தூக்கி வந்து வெளியேற்றினர். எஸ்.பி.யைக் காப்பாற்ற சென்ற போலீசாரையும் தீட்சிதர்கள் கீழே தள்ளிவிட்டனர்.

தீட்சிதர்கள் மீது வழக்கு: விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. வன்னியப்பெருமாள் சிதம்பரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆறுமுகசாமி உள்ளே செல்ல தீட்சிதர்கள் ஆட்சேபணை தெரிவித்தனர்.ஆறுமுகசாமி மற்றும் ஐந்து பேரை மிக வலுவோடு தீட்சிதர்கள் எதிர்த்தனர். அதனால் எஸ்.பி. மற்றும் ஏ.எஸ்.பி. தலைமையிலான போலீசார் ஆறுமுக சாமியைப் பாதுகாப்புடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். அதனை தீட்சிதர்கள் தடுத்ததால் சிறு கைகலப்பு ஏற்பட்டது. ஆறுமுகசாமி 15 நிமிடம் தேவாரம் பாடிவிட்டு வெளியே வந்தார். இதன்மூலம் அரசாணையை நிறைவேற்றியுள்ளோம். சிறப்பான போலீஸ் பாதுகாப்பால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அரசு பணியை செய்யவிடாமல் குறுக்கிடுதல் பலபிரயோகம் செய்தல் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரிந்த 10 தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல தீட்சிதர்கள் மீது வழக்கு தொடரப்படும். அரசு உத்தரவுபடி மீண்டும் தமிழில் தேவாரம் பாட சட்டம் ஒழுங்கு சாதகமாக உள்ள சூழ்நிலையில் பாதுகாப்பிற்கான அனுமதியை போலீசார் வழங்குவர்.இவ்வாறு வன்னியப்பெருமாள் கூறினார்.

தேவாரம் பாடவில்லை ஆறுமுகசாமி பேட்டி: ஹசிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடவில்லை' எனஇ ஆறுமுகசாமி கூறினார்.சிதம்பரம் நடராஜர் கோவிலில் போலீசாருக்கும் - தீட்சிதர்களுக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவுக்கு இடையில் தேவாரம் பாடிய பின்னர் வெளியே வந்த ஆறுமுகசாமி கூறியதாவது:அரசு உத்தரவுபடி தமிழில் தேவாரம் பாட இன்று (நேற்று) நான் சென்றேன். ஆனால்இ எம்பெருமானை என்னால் பார்க்க முடியவில்லை. 20க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் வெள்ளி மேடையில் நின்று கொண்டு சாமி தரிசனம் செய்யவிடாமல் தடுத்துவிட்டனர். தீட்சிதர் தரப்பு வக்கீல்இ இங்கு வந்து தான் பாட வேண்டுமா என்று திட்டினார்.

தமிழை வளர்ப்போம்இ பாதுகாப்போம் என்று முதல்வரும் அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றனர். ஆனால்இ சிதம்பரத் தில் அரசு உத்தரவை செயல்படுத்த முடியவில்லை. நான் உள்ளே சென்று தேவாரம் பாடவில்லை. இது வெட்க கேடாக உள்ளது.என்னை தேவாரம் பாட தீட்சிதர்கள் விடவில்லை. உயிர் பிழைத்து வெளியே வந்துள்ளேன். போலீஸ் பாதுகாப்பு சரியில்லை. என்னை தீட்சிதர்கள் அடித்து என் மூக்கு கண்ணாடியைப் பிடுங்கிக் கொண்டனர். என் மக்களுடன் சென்று நான் தேவாரம் பாட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆறுமுகசாமிஆதரவாளர்கள் மீது போலீஸ் தடியடி:ஆறுமுகசாமி தரப்பினர் நேற்று பிற்பகல் முதல் மாலை வரை தெற்கு வீதிஇ கோவில் நுழைவு வாயிலில்இ கூட்டமாக நின்றிருந்தனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால்இ அவர்கள் கேட்கவில்லை. அப்போதுஇ போலீசார் மீதுஇ ஆறுமுகசாமி தரப்பினர் கல் வீசினார். இதில்இ போலீஸ்காரர் ஒருவரின் மண்டை உடைந்தது. இதனால் ஆவேசமடைந்த போலீசார்இ ஆறுமுகசாமி தரப்பினர் மீது திடீரென தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால்இ தெற்கு வீதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


செய்தி நன்றி :www.dinamalar.com

Sunday, March 2, 2008

சொஹ்ராபுதீன் கொலையில் வன்சாரா முக்கிய குற்றவாளி - விசாரணை குழு அறிக்கை!


காந்திநகர்: சொஹ்ராபுதீனை போலி மோதல் நாடகம் நடத்தி சுட்டுக் கொலை செய்த வழக்கில் குஜராத் முன்னாள் காவல்துறைத் துணை இயக்குனர் D.G.வன்சாராவை முக்கியக் குற்றவாளி எனக் கூறி விசாரணைக் குழு உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. இக்கொலைக்கான சதி ஆலோசனையில் முக்கிய பங்கு வகித்தது வன்சாரா என விசாரணை குழுவின் வாக்குமூலம் தெரிவிக்கின்றது. மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் ஹாதிய்யா விசாரணை அறிக்கையினை வாக்குமூலமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சொஹ்ராபுதீன் கொலை வழக்கில் கடந்த ஏப்ரல் 2007 ல் கைது செய்யப்பட்ட வன்சாராவிற்கு உறவினரின் திருமணத்தில் பங்கெடுப்பதற்காக மூன்று தினங்களுக்குள் கட்டாயம் திரும்ப வேண்டியக் கடும் நிபந்தனையில் கடந்த பிப்ரவரி 24 அன்று ஜாமீன் வழங்கப்பட்டது. முழுப்பிணைக்கு வன்சாரா மனு அளித்திருந்தப் போதிலும் இவ்வழக்கை விசாரிக்கும் மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறை (குற்றவியல் பிரிவு) அதனை எதிர்த்திருந்தது. "தீவிரவாத எதிர்ப்புப் படையின் தலைவராக இருந்த வன்சாரா,
சொஹ்ராபுதீனைக் கொலை செய்ததற்கும் அவரின் மனைவி கௌசர்பீயைக் கொன்று குற்றத்தின் ஆதாரங்களை அழித்ததற்கும் தலைமையாக இருந்துச் செயல்பட்டவர் எனவும் அவரை ஜாமீனில் விட்டால் விசாரணையைப் பாதிக்கும் விதத்தில் அவரின் நடவடிக்கைகள் அமைவதற்கு வாய்ப்பாக இருக்கின்றது" எனவும் மத்தியப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் அதற்குக் காரணம் கூறியது. நீதிமன்றத்தில் வன்சாராவின் ஜாமீனுக்கு எதிராக வாக்குமூலம் சமர்பித்த CID இன்ஸ்பெக்டர் ஹாதியா, "சொஹ்ராபுதீனைப் போலி என்கவுண்டர் மூலம் 2005 நவம்பரில் கொலை செய்தனர். அதற்கு இரு தினங்களுக்குப் பின் அவரின் மனைவி கௌசர்பீயையும் கொலை செய்தனர். இது அதிகாரத்தின் துர்நடத்தை அல்லாமல் வேறொன்றும் இல்லை" என நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் வேளையில் கூறினார். இதனால் வன்சாராவுக்கு ஜாமீன் வழங்குவதில் எவ்வித நியாயமும் இல்லை எனவும் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் அவர் வாதிட்டார்."விசாரணை வேளையில் கிடைத்த ஆதாரங்கள் வன்சாராவின் சதி ஆலோசனையையும் இவ்வழக்கில் அவரின் பங்கினைக் குறித்தும் தெளிவாகத் தெரிவிக்கின்றன. சுக்ராபுதீன் கொலை செய்யப்பட்ட விபரமறிந்த அவரின் மனைவி கௌசர்பீயை உயிரோடு விட்டால் அது அவர்களுக்குப் பாதகமாக அமையும் என்பதை வன்சாரா நன்றாக அறிந்திருந்தார். வன்சாராவின் கட்டளைப் படி காந்திநகரில் உள்ள ஒரு தோட்ட வீட்டில் வைத்து கௌசர்பீ கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரின் உடலை வன்சாராவின் பிறந்த இடமான சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள இலோளில் புதைத்தனர். இலோளில் வன்சாராவுக்கு எதிராக எவரும் சப்தமுயர்த்தமாட்டார்கள் என்ற நம்பிக்கையிலேயே கௌசர்பீயின் உடலை அங்குக் கொண்டு சென்று புதைக்கத் தீர்மானித்தனர்" என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கௌசர்பீயின் உடலைப் புதைத்தது தொடர்பான காவல்துறை வாகன ஓட்டுனரின் வாக்குமூலம் நீதிபதியின் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சாட்சி பின்னர் நீதிமன்ற விசாரணை வேளையில் சாட்சியம் மாற்றிக் கூறினாலும் சாட்சியின் வாக்குமூலம் நிலைபெறும். அதே சமயம் இவ்வழக்கில் இணைக்கப்பட்டுள்ள மற்ற இரு குற்றவாளிகளும் காவல்துறை அதிகாரிகளுமான எம்.என். தினேஷ் மற்றும் என்.கே. அமின் ஆகிய இருவரின் ஜாமீன் மனுவின் மீதான விசாரணையை அடுத்த மார்ச் 25 அன்று எடுத்துக் கொள்ள உச்சநீதி மன்றம் தீர்மானித்துள்ளது. ராஜஸ்தான் பிரிவில் உள்ள IPS அதிகாரியான M.N. தினேஷ், சொஹ்ராபுதீனைப் போலி மோதலில் கொலை செய்ய உதவி செய்ததாகவும் குஜராத்திலுள்ள காவல் துணைக் கண்காணிப்பாளர் (DSP) அமின் கௌசர்பீயின் உடலை மறைக்க உதவி செய்ததாகவும் விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.விசாரணைக் குழுவின் அறிக்கையின் மூலமாகவும் மற்றொரு முறை சதிச்செயல் என நிரூபிக்கப்பட்டச் சொஹ்ராபுதீன் கொலை விவகாரத்தைத் தான், கடந்த குஜராத் தேர்தலின் பொழுது, குஜராத் இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி "தீவிரவாதியைக் கொலை செய்வதுத் தவறா?" என நிறைந்திருந்தத் தனது ஆதரவாளர்களின் முன்னிலையில் கேட்டு சொஹ்ராபுதீனைக் கொலை செய்ததற்கு மக்கள் அங்கீகாரம் பெற முயற்சி செய்தார் என்பதும் அதனையே தனது தேர்தல் வெற்றிக்குப் பிரதான பகடைக்காயாக உபயோகித்து மக்களிடம் இன வெறுப்பைத் தூண்டி வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி:www.satyamargam.com

Friday, February 29, 2008

திருகுர்ஆனில் வரும் சில வசனங்கள்...........

திருகுர்ஆனில் வரும் சில வசனங்கள்...........

நம் வாழ்வில் அன்றாடம் பெற்றோர் குழந்தைகள் அன்டைய வீட்டார் நன்பர்கள் தொழில் கூட்டாளிகள் வழிப்போக்கர்கள் என பலரை சந்தித்து பேசுகின்றோம்.இவ்வாறு நாம் சந்திக்கின்ற நபர்களிடம் எவ்வாறு பேசவேண்டும் என்று வகுத்துக்கொடுத்துள்ளது குர்ஆன்.பேசுகின்ற போது உண்மையை நேர்மையாக அழகாக கனிவாக நியாயமாக அன்பாகவும் பேச சொல்கின்றது.அதை போல் வீண்பேச்சை தவீர்க்கவும் பொய் பேசாதீர் எனவும் புறம் பேசாதீர் எனவும் ஆதாரமின்றி பேசாதீர் எனவும் அவதூறு பேசாதீர் எனவும் கன்டிக்கின்றது. அவற்றில் பின்வரும் குர்ஆன் வசனங்கள் காணவும்.


உண்மை பேசுக!
அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119

நேர்மையாக பேசுக!
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அழகானதைப் பேசுக!பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83

கனிவாகப் பேசுக!
உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8
நியாயமாகப் பேசுக!நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152

அன்பாகப் பேசுக!
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36

வீண் பேச்சை தவிர்த்துடுக!
நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68

பொய் பேசாதீர்!
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116

புறம் பேசாதீர்!
உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12

ஆதாரமின்றி பேசாதீர்!
யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35

அவதூறு பேசாதீர்!
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23

Tuesday, February 26, 2008

சரியும் அமெரிக்கப் பொருளாதாரம், உலகம் அமைதியை நோக்கி... ...


ஏழை, நடுத்தர நாடுகளின் பொருளாதாரத்தைப் பல்வேறு வழிகளிலும் சுரண்டி அதன் மூலம் தனது இராணுவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொண்டு இன்று உலகின் மிகப்பெரிய தலைவலியாக மாறியிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த ஓரிரு வருடங்களில் மிகப் பெரியச் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே! பொருளாதாரத்தின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு உலகின் ஏழை மற்றும் நடுத்தர நாடுகளைப் பயமுறுத்திக் கொண்டிருந்த அமெரிக்கா இன்று சிறிது சிறிதாக அதே பொருளாதாரத்தின் மூலம் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகின் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத்தை அமெரிக்க டாலர்கள் ஆக்ரமித்து வந்ததற்கு 21 ஆம் நூற்றாண்டு விடை கூற நெருக்கிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் ஏகாதிபத்தியச் செயல்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்த அமெரிக்கப் பொருளாதாரம், உலக வர்த்தகத்தின் பெரும்பங்கு அமெரிக்க டாலரை அடித்தளமாகக் கொண்டு இயங்குவதின் மீதே கட்டமைக்கப்பட்டிருந்தது. 2000 நூற்றாண்டின் 80, 90கள் வரை உலக வர்த்தகத்திற்கு மற்றொரு நாணயத்தைக் குறித்து உலகம் சிந்திக்காமல் இருந்ததே அமெரிக்காவின் இடைப்பட்ட கால இமாலய எழுச்சிக்கு அடிப்படைக் காரணமாகும். இதற்கு யூரோவின் மூலம் முதல் அடியைக் கொடுத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். உலக வர்த்தகத்திற்கு மற்றொரு நாணயம் என்பதே அப்பொழுது வரை எவரும் மனதில் நினைத்துக் கூடப் பார்க்காத விஷயமாக இருந்தக் கால கட்டம் அது. அன்று விழுந்த முதல் அடியிலிருந்து எழுந்து நிற்க "தீவிரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பொய்யான முகமூடியுடன் களமிறங்கிய அமெரிக்காவிற்கு அதுவே நினைத்துப் பார்க்காத பதிலடியைத் திரும்பக் கொடுத்தது எனலாம். இப்பொழுது வரை பின்னணியில் இயங்கியது யார்? என்பதில் எவ்விதத் தெளிவான முடிவுக்கும் வர இயலவில்லை. வெள்ளை மாளிகையின் தற்போதையக் காவலாளி ஜார்ஜ் புஷ் கூட இதன் பின்னணி கதாநாயகனாக இருக்கலாம். 2001 செப்டம்பர் 11 நிகழ்வைக் காரணம் காட்டி, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் எண்ணெய் வளம் மிக்க நாடுகளைக் கபளீகரம் செய்வதோடு, இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளையும் சின்னாபின்னப்படுத்துவதுமே அதன் முக்கியக் குறிக்கோளாய் இருந்தது. அதன் பின்னணியில் சரிந்து வரும் தனது பொருளாதாரத்தைக் குவிந்துக் கிடக்கும் அரபு எண்ணெய் வளம் மூலம் நிமிர வைப்பதைத் தனது மறைமுக நோக்கமாகவும் கொண்டு, தான் வளர்த்து விட்ட உசாமா, சதாம் போன்றவர்களை எதிரிகளாகச் சித்தரித்துக் களமிறங்கிய புஷ்ஷின் அமெரிக்காவிற்குத் தற்பொழுது அதுவே தாங்கவொண்ணாச் சரிவைப் பரிசாக அளித்துள்ளது. சரிந்த அமெரிக்கப் பொருளாதாரத்தால் மத்தியக் காலகட்டத்தில் அமெரிக்க டாலரை அடித்தளமாக வைத்துத் தங்களின் நாணய மதிப்பையும் வியாபாரத்தையும் அமைத்துக் கொண்ட நாடுகளுக்கு இப்பொழுது அமெரிக்க டாலர் மிகப்பெரிய தலைவலியாகவும், தாங்கவொண்ணா சுமையாகவும் மாற ஆரம்பித்துள்ளது. இதனை நன்றாக உணர்ந்து கொண்ட அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கழுகுக் கண்களுக்கு இரையாகக் குறிவைக்கப்பட்டிருக்கும் வெனிசுவேலா, ஈரான் போன்ற நாடுகள் நிலைமையைப் புரிந்துக் கொண்டு உடனடியாகத் தங்களின் அனைத்துப் பண்டமாற்று, உலக வர்த்தக முறைகளையும் அமெரிக்க டாலரிலிருந்து 90-களில் மாற்றாக வெளிவந்த யூரோவிற்கு மாற்றி விட்டன. அத்தோடு அமெரிக்காவின் சுரண்டலுக்கு இலக்கான அனைத்து நாடுகளையும் தங்கள் வர்த்தகப் பரிமாற்றத்தை டாலரிலிருந்து மாற்றக் கோரிக்கை விடுத்தன. எனினும் அப்பொழுது அதன் அவசியத்தை உணர்ந்துக் கொள்ளாத கத்தர், சவூதி, அமீரகம் போன்ற அரபு நாடுகள் கடந்த 6 மாத கால அளவில் வரலாறு காணாத அளவில் தங்களின் நாணயமதிப்பில் வீழ்ச்சியையும், வளைகுடா நாடுகளில் கேள்வியே பட்டிராதப் பெரும் பணவீக்கத்தையும் சந்தித்தன. கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்க டாலரின் மூலதனம் 16.2 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலர் எவ்வளவு வீழ்ச்சியைச் சந்தித்ததோ, அதே அளவிற்கான வீழ்ச்சியை அமெரிக்க டாலர் மூலம் வர்த்தகம் அமைத்துக் கொண்ட மற்ற நாடுகளின் நாணயங்களும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இந்நிலையில் உலக கரட்டு எண்ணெய் (Crude Oil) வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஓபெக் தற்பொழுது ஈரான் மற்றும் வெனிசுவேலாவின் அழைப்பை ஏற்றுக் கொண்டுத் தங்களின் வர்த்தகத்தை அமெரிக்க டாலரிலிருந்து மாற்றுவதற்கான ஆலோசனை செய்ய முன் வந்துள்ளன. ஈரான் மற்றும் வெனிசுவேலாவின் கோரிக்கையைக் குறித்து விவாதிக்க ஓபெக் உறுப்பினர் நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு உடன் கூடும் என ஓபெக் தலைவர் ஷகீப் கலீல் கூறியுள்ளார். உலக எண்ணெய் வியாபாரத்தில் 40 விழுக்காடு பங்கு வகிக்கும் ஓபெக்கின் இம்முடிவு நினைத்தது போல் அமெரிக்க டாலரிலிருந்து மற்றொரு நாணயத்திற்குத் தனது வியாபாரத்தை மாற்றும் எனில் அது அமெரிக்காவை எழுந்து நிற்க இயலாத நிலைக்குத் தள்ளிவிடும் என்பதில் மாற்றமில்லை. ஏற்கெனவே அமெரிக்க டாலர் மூலமான தனது அனைத்து உலக வியாபாரத்தையும் மாற்றியிருந்த ஈரானைப் பின்பற்றி இன்னும் ஆறு மாத காலத்தில் கத்தரும் தனது எல்லாவிதமான வணிகப் பரிமாற்றத்தை மற்றொரு நாணயத்திற்கு மாற்றும் என கத்தர் பிரதமர் ஷேக் ஹமத் பின் ஜாஸிம் அல்-தானி கூறியிருந்தார். அதே போன்று குவைத்தும் அமீரகமும் இதே திசையில் பயணிக்கவிருப்பதைக் குறித்த அறிகுறிகளைத் தெரிவித்திருந்தன. உலக வர்த்தகத்தின் மிகப் பெரும்பங்கை நிர்ணயிக்கும் அரபு நாடுகளும் உலக எண்ணெய் உற்பத்தியின் 40 விழுக்காட்டை நிர்ணயிக்கும் ஓபெக்கும் தங்களின் இம்முடிவுகளில் எவ்வித மாற்றமும் இன்றி அமெரிக்க டாலரிலிருந்து மாறும் எனில் அது அமெரிக்கப் பொருளாதாரத்தில் சீரழிவை ஏற்படுத்துவதோடு உலக நலனுக்குத் தீங்கான அதன் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் நிச்சயம். அது உலகின் தற்போதைய உறுதியற்ற நிலையையும் மாற்றியமைக்கும் என்பதில் ஐயமில்லை.


நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Thursday, February 14, 2008

இந்த இழி நிலை போக்க நம்மிடையே பெரியார் இல்லையோ!!!

கடந்த இரண்டு வாரங்களாக மும்பையில் நடைபெறும் தேசவிரோதிகளின் கூக்குரல் மற்றும் கெலை வெறி தாக்குதல்கள் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ராஜ் தாக்கரே என்ற மனித குல விரோதி தனது நவநிர்மான் சே என்ற குண்டர் படையை வைத்து கொண்டு வெளிமாநிலத்தவர்களை மராட்டிய மண்ணில் இருந்து விரட்டியடிக்க தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.இதன் காரணமாக மும்பை நகர காவல்துறை அவன் மீது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டனர். வழக்கு பதிவு செய்து விட்ட காரணத்தல் கடந்த நான்கு நாட்களாக கைது செய்யப்படுவான் என்று பத்திரிக்கைகளிலும் தொலைகாட்சியிலும் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வந்தனர்.ஆனால் நடந்தது என்ன? நேற்று பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் கைது செய்யப்பட்ட ஒருவன் கைது செய்த ஒரு சில மணி நேரத்தில் பிணையில் வெளிவருகிறான்.இந்த கேலி கூத்திற்கு யார் காரணம். சட்டமா ? ஆட்சியாளர்களா ? இல்லை உயர் ஜாதி பார்பணர்களா ? வழக்கு பதிவு செய்யப்பட்டதோ பிணையில் வெளிவர முடியாத பிரிவுகள் ஆனால் கைது செய்யபட்டு நிதீபதியின் முன் நிறுத்தய உடன் பிணை ! என்ணே ஒரு அரசியல் சட்டம் !! இங்கே ஒரு சம்பவம் இதில் இருந்து தெரியும் பார்பண அதிகாரம்.கடந்த 2001 ஆம் ஆண்டு ஜீன் 31 அன்று நள்ளிரவு ஒரு சூத்திரன் கைது செய்யபடுகிறான் 6 கோடி திராவிடதமிழர்களின் தலைவன் முன்னால் முதல்வர் 75 வயது நிரம்பிய பெரியவர். ஒரு ஆதாரமற்ற வழக்கிற்காக .அவரது வயதை கணக்கில் கொண்டு பிணை மறுக்கபடுகிறது.வழக்கு ஒன்றும் இனகலவத்தையே மத கலவரத்தையே தூண்டிய வழக்கும் அல்ல ஆனால் பிணை மறுக்கபடுகிறது.ஏன் தெரியுமா ? இங்கு அப்போது ஒரு பார்பண சனாதன ஆணவகாரி ஜெயலலிதாவின் ஆட்சி. ஆனால் இன்று மும்பையில் ஒரு உயர்ஜாதி பார்பணன் கைது செய்தஉடன் பிணை, இங்கு நடைபெறுவது அம்பேத்கார் இயற்றி சட்டமா ? இல்லை பார்பண வறுணாசிர சட்டமா? இந்த இழி நிலை போக்க நம்மிடையே பெரியார் இல்லையோ

போராளி

அதிகாரிகள் மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்ற இந்து பயங்கரவாதி

நமக்குச் சொந்தமான நம் வீட்டு முற்றத்தில் மாற்றான் ஒருவன் காயலான் கடை வைத்து வியாபாரம் செய்தால் நாம் என்ன செய்வோம்? அதே வேலையை அரசுக்குச் சொந்தமான இடத்தில் ஒருவன் செய்தால் அரசு என்ன செய்யும்? செய்ய வேண்டும்? அனைவரும் ஒருமித்தக் குரலில் ஏற்றுக் கொள்வது, அரசு இடத்தைக் கள்ளத்தனமாக ஆக்ரமித்தவனை சட்டத்தின் முன் நிறுத்தி சட்டப்படியான தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டும்; ஆக்கிரமிப்பை முறையாக அகற்ற வேண்டும் என்பதாகத் தான் இருக்கும். அதுவே அரசு இடத்தில் கள்ளத்தனமாகப் பள்ளிவாசல், சர்ச், கோயில் இன்னபிற வழிபாட்டுத் தலங்களை யாராவது எழுப்பி விட்டால் என்ன செய்வது? சாதாரணமாக அரசு செய்யும் காரியம், சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலத்துக்கு யாராவது பொறுப்பாளர் இருப்பின் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விட்டு சம்பந்தப்பட்ட இடத்திலிருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றி அவ்விடத்தை மீட்பதாகும். அவ்வாறு ஒரு நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு என்னுமிடத்தில் நடந்தது. அத்துடன் சம்பந்தப்பட்ட இடத்தை நீதிமன்ற ஆணையுடன் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அரசு அதிகாரிகளையும் உலகிலிருந்தே "அகற்றும்" பணி சுற்றிக் கூடியிருந்த மக்கள் முன்னிலையில் பட்டப்பகலிலேயே நடைபெற்றது. சம்பவம் என்னவெனப் பார்ப்போம்: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகேயுள்ள உடையார்விளையில் சாலையோரம் நாராயணசாமி கோயில் என்றொரு கோயில் அரசு நிலத்தில் உள்ளது. இந்த கோயில் அரசின் புறம்போக்கு நிலத்தில் அமைந்திருப்பதாகவும் அதனால், கோயிலுக்குப் பின்புறம் உள்ள வீட்டுக்கு செல்ல கோயிலை இடித்து பாதை வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள், "அரசு நிலத்தில் உள்ள கோயிலின் சுவரை இடித்துப் பாதை அமைத்துக் கொடுக்க" உத்தரவிட்டனர். இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழக நெடுஞ்சாலைத்துறை தக்கலை உதவிக் கோட்ட அலுவலர் எல்.அந்தோணி சேவியர், இளநிலை அலுவலர் சி.சுந்தரம் மற்றும் அதிகாரிகள் காவல்துறைப் பாதுகாப்புடன் கோயில் சுவரை இடித்துக் கொண்டிருந்தனர். இதற்குக் கோயில் தர்மகர்த்தா அர்ஜுனன், அவருடைய மனைவி அனிஷ்பாய், மகன் செந்தில்குமார் மற்றும் அவர்களின் வழக்கறிஞர் அவ்விடத்தில் நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் தங்களுக்கு உயர்நீதிமன்றம் கட்டளையிட்ட பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். உதவிக் கோட்டப் பொறியாளர் அந்தோணி சேவியர், இளநிலை பொறியாளர் சுந்தரம் மற்றும் திருவட்டாறு காவல் சரகத்தைச் சேர்ந்த தலைமைக்காவலர் எட்வின் ஆகிய 3 பேரும் சாலையோரம் நின்று, இடிப்புப் பணியைக் கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு கார் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக வந்து அவர்கள் 3 பேரையும் இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பொறியாளர் அந்தோணி சேவியர் படுகாயம் அடைந்துச் சிகிச்சைக்காக நாகர்கோயிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அதிகாரிகளைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே அவர்கள் மீது காரை மோதவிட்டதாகவும், அந்தக் காரை ஓட்டியவர் கோயில் தர்மகர்த்தா அர்ஜுனனின் மகன் செந்தில்குமார் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக திருவட்டாறு காவல்துறையினர் அர்ஜுனன், அவருடைய மனைவி அனிஷ்பாய், மகன் செந்தில்குமார், அவரது வழக்கறிஞர் ரசல்ராஜ் உள்பட 6 பேர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் அர்ஜுனனும், அவருடைய மனைவியும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர். இந்நிகழ்வு நடைபெற்ற இடத்தில் ஆக்ரமிப்பை அகற்றிக் கொண்டிருந்த அதிகாரிகள் அரசு ஆவணத்திற்காக ஆக்ரமிப்பு அகற்றும் பணியினை வீடியோவில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த வீடியோ பதிவில் அதிகாரிகள் மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்றக் காட்சியும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
தங்களின் பணியினைச் செய்யச் சென்ற அரசு அதிகாரிகளின் மீது கார் ஏற்றும் கண்கொள்ளாக் காட்சியினை இங்கே கண்டு களியுங்கள்.

http://ibnlive.com/videos/58815/officials-want-security-after-highway-murder-attempt.html

Friday, February 8, 2008

அமெரிக்கா நடத்துவது இஸ்லாத்திற்கு எதிரான போர்: முன்னாள் US அட்டர்னி ஜெனரல்


ராம்சே கிளார்க்’ அமெரிக்க முன்னாள் அட்டர்னி ஜெனரல் (அரசாங்க தலைமை வழக்குரைஞர்) ஆவார். அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்ததோடு, சதாம் ஹுஸைனுக்காக வாதாட முன்வந்த சர்வதேச வழக்கறிஞர்களின் குழுவிலும் முக்கிய அங்கம் வகித்துள்ளார் ராம்சே கிளார்க். சமீபத்தில் கொல்கத்தா வந்த போது அவர் அளித்த நேர்காணலிலிருந்து சில பகுதிகள்….


"சர்வதேச சமூகம்" என சமகால அரசியலில் பரவலாக பயன் படுத்தப் படுகின்ற சொற்றொடர், அமெரிக்காவின் "புதிய உலக நியதி"யை பரப்பவும், அதன் நலனை மேம்படுத்தவும் பயன் படுத்தப்படும் மாற்றுப் பெயர் என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா?
பரவலான உலகமயமாக்கலையும், பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதையும் நோக்கமாக கொண்டு, செயல்படக் கூடியவர்கள், உலகம் உளரீதியாக ஒருங்கிணைந்த சமூகமாக உணர்வதை விரும்புகிறார்கள். ஏனெனில் அது அவர்களது செயல் திட்டத்தை எளிதாக்கி விடுகிறது.

படு வேகமாகப் பரவி வரும் உலகமயமாக்கலும் அதனோடு வலுவாகப் பிணைக்கப்பட்டுள்ள அமெரிக்க ரீதியிலான முதலாளித்துவம், உலகம் நெடுக புதிய ஏற்றத்தாழ்வுகளைப் பல்கிப் பெருக வைத்துள்ளன. இந்தச் சூழல் குறித்து தங்கள் கருத்து…?

இதனை உலக நாகரீகத்திற்கும், மனிதத்துவத்திற்கும் எதிரான மிகப் பயங்கரமான அபாயமாக நான் கருதுகிறேன். இந்த அபாயம் அரசியல் ரீதியானது மட்டுமல்ல, பொருளாதார ரீதியானதும் கூட என்பது வெளிப்படை. இவற்றையெல்லாம் விட அடிப்படையாக சாதாரண மட்டத்தில் சொல்லப்போனால், ஒரே விதமான தொழில்நுட்பம், ஒரே விதமான பொழுது போக்கு தனித்துவம் கொண்ட ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் பேராபத்தாகும். தனது பொருளாதார சக்தியின் மூலம் உலகில் மூலை முடுக்குகளிலெல்லாம் அமெரிக்கா சித்தாந்த ஊடுருவல் செய்கிறது. "வியாபாரமயமாக்கல்" மற்றும் 'பொருள் முதல் வாதம்' முதலியவை மிகப் பெரும் சக்திகளாக உருப்பெற்றுள்ளன. இதற்கு பலிகடாவாக ஆக்கப்படுவது சாதாரண மக்களது வாழ்வின் அம்சங்களான வலி, துயரம், அவர்களது வரலாறு மற்றும் அவர்களது கூட்டு கற்பனையின் வடிவமாகத் திகழும் 'கலாச்சாரம்' ஆகியவைதான்.

ஆனால் வளர்ச்சியின் பெயரால் உலகில் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முயலும் அமெரிக்க திட்டத்துக்கு எதிராக மாற்று வளர்ச்சித் திட்டங்கள் உலகின் பல பாகங்களில் உருக்கொள்கின்றனவே…..

'உலகமயமாக்கலின்' தீங்குகள் குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே வேகமாக அதிகரித்து வருவதை நான் காண்கிறேன், உலகமயமாக்கலின் வீச்சு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும் என்று நான் நம்புகிறேன். அதிலும் குறிப்பாக, உலகமயமாக்கலின் உண்மையான முகம் குறித்த அறிவு, அதனால் தனிப்பட்ட சமூகங்களுக்கு விளையக் கூடிய தீங்குகள் குறித்த விழிப்பு உணர்வு ஆகியவை இத்தகைய மாற்றங்களுக்கு வித்திடும் எனக் கருதுகிறேன்.

புதிய காலனித்துவத்தின் மற்றொரு வடிவாக உலகமயமாக்கல் பலராலும் கருதப்படுகிறது. இதனை நீங்கள் ஒத்து கொள்கிறீர்களா?

பழைய ஏகாத்தியபத்தியத்திற்கும் நவீன உலகமயமாக்கலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இந்தியச் சூழலில் தெளிவாக காண முடியும். இந்த தேசம் அன்னிய ஆதிக்கத்தின் கொடூரங்களையும், சுரண்டல்களையும், அதனால் விளைந்த வறுமையையும் கண்டிருக்கிறது, ஆனால் படுவேகமாகப் பரவி வரும் உலகமயமாக்கல் வாழ்வின் எல்லா அம்சங்களையும் ஊடுருவி வரும் புதிய மேலாதிக்கமாக உருக் கொண்டுள்ளது.

உதாரணமாக, இந்தியத் திரைப்படத் துறையை எடுத்துக் கொண்டால், முன்பெல்லாம் திரைப்படங்களின் தோற்றத்தில் இந்தியத் தன்மை எடுப்பாகத் தெரிவதைப் பார்க்க முடியும். இப்பொழுதோ நகைச்சுவை, குணச்சித்திரம், இசை என எல்லாமே உலகமயமாக்கலுக்கு ஏற்ப மாறி வருகின்றன. இந்தப் போக்கு வியாபாரமயமாக்கலையும், பொருள் முதல் வாதத்தையும் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை விட பயங்கரமானதாக ஆக்கி விட்டது என்றே சொல்லவேண்டும்.

பழைய காலனித்துவத்தில், குறைந்தபட்சம் நமது எதிரி யார் என்பது குறித்த தெளிவு இருந்தது. முதுகுக்குப் பின்னால் பதிக்கப்பட்டிருந்த கத்தி நம்மை உறுத்திக் கொண்டே இருந்தது. நமது வாழ்வை சீராக்கி என்ன செய்யவேண்டும் என்ற அறிவு நமக்கு இருந்தது. புதிய வியாபாரமயமான உலகில் நாம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஆனால் அதைக் குறித்த உணர்வு நமக்கு முற்றுமாக இல்லை. அடிமைப்படுத்தப்பட்டிருப்பவனுக்கு, தன்னைப் பிணைத்திருக்கும் விலங்கு குறித்த உணர்வே இல்லையென்றால் விடியலுக்கான நம்பிக்கை எது? உலகமயமாக்கலின் தற்கால போக்கைப் பார்த்தால் மனிதனின் ஆசைகளும் கற்பனைகளும் உலகமயமாக்கலுக்கு அடிமையாகி உள்ளன, இது மிகப் பெரும் அபாயமாகும்.

இராக் மீதான அமெரிக்காவின் “அத்து மீறிய ஆக்கிரமிப்பை’ நீங்கள் பல அரங்குகளில் வலுவாக எதிர்த்துவருகிறீர்கள...கடந்த சிலமாதங்களில் இராக் குறித்த அமெரிக்காவின் அணுகு முறையில் ஏதேனும் மாற்றத்தைக் காண்கிறீர்களா?

இராக் மீதான அத்துமீறிய ஆக்கிரமிப்பில், அமெரிக்கா எண்ணிப் பார்த்திராத அளவிற்கு உயிரிழப்பையும், பொருளிழப்பையும் சந்தித்துள்ளது. மிக வலுவான ஆயுதமேந்திய எதிர்ப்பினையும் அமெரிக்கா அன்றாடம் நேரிட வேண்டியுள்ளது. இதனால் உலக அரங்கில் அமெரிக்கா பெரும் அவமதிப்பை எதிர்கொள்ள வேண்டியாகி விட்டது…

எப்பொழுது பார்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் புரிந்து வருவதாக அமெரிக்கா சொல்கிறதே! அந்த ‘பயங்கரவாதம்’ அமெரிக்காவின் சுய உருவாக்கமா?

பயங்கரவாதத்திற்கு எதிரானது என நடத்தப்படுகிற போர் உண்மையில் இஸ்லாத்திற்கு எதிரான போராகும், பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகப் பறைசாற்றிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் இஸ்லாத்தின் தாக்கத்தைக் கண்டிராத அளவிற்கு இஸ்லாத்தை முற்றுமாக துடைத்தெறிந்து விடுவதே அவர்களது உண்மையான நோக்கமாகும்.

இஸ்லாம் குறித்து ஏனிந்த அச்சம்? அமெரிக்க அரசாங்கத்தின் ஒருவித மனப்பிராந்திதான் இந்த அச்சத்திற்கு காரனம் என விமர்சகர்கள் வாதிடுகிறார்கள். பனிப் போரின் (COLD WAR) போது கம்யூனிஸம் குறித்த அச்சம்; இப்பொழுது இஸ்லாம் குறித்த அச்சம என்று சொல்கிறீர்களா?

இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி சொல்ல வேண்டுமாயின் பொருளாதார மேலாதிக்கமும், பேராசையும், அடாவடித்தனமும் கோலோச்சுகிற இக்காலச் சூழலில் மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்ற மாற்றுத் திட்டமாக இஸ்லாம் திகழ்கிறது. மதிப்பீடுகளும், கோட்பாடுகளும் முற்றுமாக மறக்கடிக்கப்படுகின்ற தற்காலச் சூழலில் மனித குலத்திற்கு இஸ்லாம் ஆற்றுகின்ற சேவை மகத்தானது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, தெருக்கலவரங்களில் சிக்குண்டு உயிர் வாழ்வதே பெரும் போராட்டம் என்ற நிலையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் பல ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையில் இஸ்லாம் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இஸ்லாம் அவர்களைத் தொட்ட மாத்திரத்திலேயே திடீரென கண்ணியமும், அமைதியும் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றன. நம்பிக்கை கொண்டு பின்பற்ற முடிந்த ஒரு வாழ்க்கை நெறியை அவர்கள் கண்டு கொள்கிறார்கள்.

உலகமயமாக்கலின் அபாயம் வெகுநிதர்சனமானது. பொருளீட்டுதலே அதன் அடிப்படை மதிப்பீடாக இருக்கிறது. 'மார்க் குவைன்' என்ற நிபுணர் குறிப்பிடுவது போல் 'தேவையில்லாத தேவைகள்' பல்கிப் பெருகுகின்றன, அதிகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அதிகக் கட்டுமானங்கள் நிகழ்கின்றன, அதிகமாகப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டு சிலரது பெட்டகங்கள் மட்டும் நிரம்பி வழிகின்றன.

இந்த அபாயகரமான போக்கால் பணக்காரர்கள் பெரும் பணமுதலை- களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் ஆகி விடும் சூழல் எல்லா நாடுகளிளும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்து வருகிறது. செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் முடங்கி கிடக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை சகிக்க முடியாததாக ஆகி விட்டது.

அமெரிக்க அரசாங்கம் எப்போதும் ஒரு எதிரியைச் சுற்றியே செயல் படக் கூடியது. தனது செயல் திட்டங்களின் உண்மையான நோக்கத்தை மூடி மறைக்கவும், அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கவும் அமெரிக்கா ஒரு புதிய எதிரியை தேடிக் கொண்டிருக்கிறது. தேசப்பற்றை போற்றுவது அதன் உண்மையான நோக்கமன்று. பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதும், பிறரது வளங்களை அபகரிப்பதும்தான் அதனுடைய உண்மையான நோக்கம்.

அதே வேளை, இவற்றை யாரும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்க எதிரியை வேட்டையாடுவதாக வெளிவேடம் போடுகிறது. இங்கு தான் அமெரிக்க இராணுவம் தனது முழுமையான பங்களிப்பை செய்கிறது.

இராணுவத் தளவாடங்களுக்காக உலக நாடுகள் ஒட்டு மொத்தமாக செலவிடுவதைவிட அதிகமாக அமெரிக்கா தனது இராணுவத்திற்காகச் செலவிடுகிறது. ‘அணு ஆயுதம்’ உற்பத்தி செய்ய முயன்றாலே அழித்து விடுவோம்’ எனப் பிற நாடுகளை அச்சுறுத்தி வரும் அமெரிக்கா, புதிய தலைமுறை அணு ஆயுதங்களையும், எந்த இலக்கைஅயும் தாக்கி அழிக்க வல்ல அதிநவீன ராக்கெட்டுகளையும் தயாரிப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

நன்றி:
சமரசம் 1-15 பிப்ரவரி 2008 இதழ்

Wednesday, February 6, 2008

கைது செய்யப்பட்ட இந்து தீவிரவாதிகள்!!!!

திருநெல்வேலி : தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில்10 முன்று இந்து தீவரவாதிகளை காவல்துறை கைது செய்துள்ளது. தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலும் புதிய பேருந்து நிலையத்திலும் கடந்த மாதம் 24ம் தேதி பைப் வெடிகுண்டு வெடித்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய காவல்துறை குண்டு வைத்தாக தென்காசி மலையான் தெரு ரவி பாண்டியன் (42) செண்பக விநாயகர்கோவில் தெரு குமார்(எ)கேடிசி குமார் (28) செங்கோட்டை ஆற்றங்கரை தெரு நாராயணசர்மா (26) என்ற முன்று இந்து தீவரவாதிகளை காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட முன்று தீவரவாதிகளில் ரவி பாண்டியன் என்ற தீவிரவாதியின் சகோதரர்கள் அன்மையில் நடைபெற்ற குழு மோதலில் கொல்லப்பட்டனர். காவல்துறை விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.மத கலவரத்தை தூண்டும் விதமாக ஆர்;.எஸ்.எஸ் அலுவலகத்திலும் புதிய பேருந்து நிலையத்திலும் டைம்பாம் வகை வெடிகுண்டுகளை தயாரித்து இக்குண்டு வெடிப்பை நிகழ்த்தி உள்ளனர். முதலில் இவர்கள் தயாரித்த வெடிகுண்டுகளை பாபநாசம் மலைப்பகுதியில் வெடித்து சோதணை செய்துள்ளiர்.இந்;த தீவிரவாதிகள் 14 டைம்பாம்கள் தயாரித்துள்ளனர்.(வெடிகுண்டு
தயாரிப்பது இந்த தீவிரவாதிகளுக்கு ஒன்றும் புதியது கிடையாது நாட்டில் நடைபெறும் குண்டுவெடிப்புகளுக்கு இவர்கள் சார்ந்த அமைப்புகள் தான் முழுக்காரணம்.) தயாரித்த வெடிகுண்டுகளில் நான்கு குண்டுகள் உபயோகபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு குண்டு கைப்பற்றி செயழிக்க செய்துள்ளனர். மேலும் உள்ள பல வெடிகுண்டுகளை எந்த கோவில்களில் வைத்து வெடிக்க செய்ய உள்ளனர் என்று காவல்துறை விசாரணை நடத்தி கைப்பற்ற வேண்டும்.கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளின் நோக்கம் மத கலவரத்தை துண்ட வேண்டும் அதன் முலம் இசுலாமியர்களை கொன்றுஒழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் (உதாரணம்: குஜராத் கலவரம்) நாட்டில் நடைபெற்ற பல மதகலவரத்திற்கு முதற் முழு காரணம் இத்தகைய இந்து தீவிரவாதிகள் தான் என்று கருத்தில் கொண்டு மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் மத கலவரத்தை தூண்டுதல் வெடிகுண்டு தயாரித்தல் வெடிகுண்டு தடை சட்டம் போன்ற வழக்கிலும் தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதியப்படவேண்டும்.மேலும் தமிழகத்தில் உள்ள இந்து முண்ணணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் அதன் தலைவர்கள் உறுப்பினர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தி மேலும் உள்ள ஆயிரகனக்காக வெடிகுண்டுகளையும் கைப்பற்றி நாட்டில் மேலும் குண்டுவெடிப்புக்கள் நடைபெறாமல் மக்களை காக்க வேண்டும் என்பதுதான் என்போன்ற நடுநிலையாளர்களின் எண்ணம்.

போராளி

Saturday, February 2, 2008

பல்கீஸ் பானுவுக்கு கிடைத்தது நீதி! மற்ற வழக்குகளின் கதி?

குஜராத் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட பல்கீஸ்பானுவுக்கு நீதிகிடைத்தது. பானுவை பாலியல் வன்முறைக்கு இலக்காக்கிய கயவர்கள் 11 பேருக்கு ஆயுள்தண்டனை போதாது அவர்களுக்கு கொடிய தண்டனைகள் வழங்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்று பல்கீஸ்பானுவின் கணவர் யாகூப் ரசூல் தெரிவித்தார்.

நியாயம் கிடைத்துவிட்டது. நீதி வென்றுவிட்டது என்றெல்லாம் மனித உரிமை அமைப்புகள் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், தீர்ப்புகள் வெளிவந்த உடன் பல்கீஸ்பானு மனம் வெதும்பி தெரிவித்த கருத்து கல்நெஞ்சங்களையும் கண்ணீர் வடிக்கும் வண்ணம் இருந்தது. நான் எனது கிராமத்துக்கு மீண்டும் செல்ல மாட்டேன். எனக்குச் சொந்தமானவை அனைத்தும் கொள்ளையிடப்பட்டன. தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டன. எனது நிலம் மட்டும்தான் அங்குள்ளது. என்னை விரட்டியவர்கள் எங்களது குடும்பத்தினரைக் கொன்று குவித்தவர் கள் எல்லோரும் இன்னும் அங்குதான் இருக்கிறார்கள் என்று கூறும் பல்கீஸ் பானு, பிரச்சினையின் பயங்கரக் கோணத்தை சுட்டிக் காட்டுகிறார். காவல் துறையினர் உட்பட 14 பேர் பயங்கரக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக் கின்றனர். இத்தகைய பயங்கரக் குற்ற வாளிகளை பின்னாலிருந்து இயக்கியவர் கள் யார்? ஊக்கமளித்தவர்கள் யார்? காப்பற்றியவர்கள் எத்தகைய சக்தி படைத்தவர்கள் என்பதை எண்ணும் போது இதன் பின்னணியில் உள்ளவர் களும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற உணர்வு நாடெங்கும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
உச்சநீதிமன்றம் தலையிட்டதின் பேரில் பல்கீஸ்பானு வழக்கு வெளிச்சத் துக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு பெஸ்ட் பேக்கரி வழக்கும் உச்சநீதி மன்றத்தின் தலையீட்டின் பேரில் அம்பலமானது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். நரோடா பாட்டியா படுகொலைகள் உள்பட 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குல்பர்க் சொஸைட்டி, நரோடா பாட்டியா, ஒடி மற்றும் சர்தார்புரா வழக்குகள் உள்பட பல வழக்கு கள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. 'தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் குடிமக்களுக்கான நீதி மற்றும் அமைதி காக்கும் அமைப்பு', முக்கிய வழக்குகளை மறு விசாரணை செய்ய வேண்டும் என வேண்டுகொள் விடுத்தன. பெரும்பாலான வழக்குகளின் கோப்புகளை குஜராத் காவல்துறை மூடிவிட்டது.
பெஸ்ட் பேக்கரி வழக்கு குஜராத்தில் நடந்தபோது குற்றவாளிகள் தப்பிவிட வாய்ப்பு வழங்கப்பட்டது. மனித உரிமை இயக்கங்கள் இப்பிரச்சினையை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று நியாயம் பிறக்க வழிசெய்தன. பல்கீஸ் பானு வழக்கும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
2002 பிப்ரவரி 28ஆம் நாளில் குல்பர்க் சொஸைட்டியில் நிகழ்ந்த படுகொலைக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கும் வழியைக் காணோம். முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட 70 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். 31 பேரை இன்னும் காணவில்லை. இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவியார் நீதி கேட்டு இன்னும் நீதிமன்றத்தின் நெடிய படிக்கெட்டுகளில் ஏறிவருகிறார். அன்று மாநில காவல்துறை ஆணையர் பி.சி.பாண்டே நிலைமையை கட்டுப்படுத் தாததோடு வெறியர்களை சம்பவ இடத்துக்கு சப்ளை செய்திருக்கிறார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 55 பேர்களில் 41 பேருக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. நரோடாபாட்டியா வில் நூரானி மஸ்ஜிதில் 91 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
பெண் களும் குழந்தைகளுமாக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.இதற்கு முழு முதற்காரணமான 45 பேர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.

நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை

குஜராத்துக்கு வெளியே நிலுவையில் இருக்கும் வழக்குகள் 13

குஜராத் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகள் 4,562

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் 2,037

போதுமான ஆதாரங்கள் இல்லை என்று குஜராத் அரசால் கோப்புகள் மூடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2,032.


உச்சநீதிமன்றம் தலையீட்டின் பேரில் மீண்டும் தொடங்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2000

அவ்வாறு தொடங்கப்பட்ட வழக்கு விசாரணைகளின் மூலம் புதிதாக கைது செய்யப்பட்டவர்கள் 830.

புதிதாக தொடங்கப்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவை 59.

பழைய வழக்குகளின் அடிப்ப டையில் புலனாய்வு செய்ததின் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 15.

குற்றங்கள் இழைத்த உயர் அதிகாரி களின் மீது நோட்டிஸ் அனுப்பிய வழக்குகளின் எண்ணிக்கை 114, 10 கொலை வழக்குகள். 10க்கும் மேற்பட் டோரைக் கொன்ற வழக்குகள் 11, கற்பழிப்பு வழக்குகள் 43, கொள்ளை யடித்தல் மற்றும் தீ வைத்தல் சம்பவம் தொடர்பான வழக்குகள் 3,800.

நன்றி:http://www.tmmkonline.org/tml/others/108669.htm

Wednesday, January 30, 2008

ஒற்றுமைக்கு வழிகாட்டும் சாவேஸ்!

அமெரிக்காவின் ஏகாதிபத்தியச் செயல்பாடுகளுக்கு தனிப்பெரும் எதிராளியாகச் சிறிது சிறிதாக மாறி வருகிறார் வெனிசுவேலா அதிபர் ஹியூகோ சாவேஸ். நிகாரகுவா, பொலிவியா, கியூபா, டொமினிக் குடியரசு ஆகிய நாடுகளுடனான உச்சி மாநாட்டில் US ஆதிக்கத்தில் செயல்பட்டு வரும் உலக வர்த்தக வங்கிக்கு மாற்றாக, அமெரிக்கக் கண்டத்திற்கான பொலிவேரியன் மாற்று (Bolivarian Alternative for the Americas) என்ற பெயரில் வர்த்தக வங்கி ஒன்றைத் தொடங்க இருப்பதாக அறிவித்த சாவேஸ், உச்சி மாநாட்டிற்குப் பின் அமெரிக்க ஏகாதிபத்திய செயல்பாடுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இவ்வுச்சி மாநாட்டில் கலந்துக் கொண்ட நாடுகளுக்கிடையில் இணைந்து இராணுவ அமைப்பு ஒன்றையும் நிறுவுவதாக அறிவித்துள்ளார்.
"இந்த இராணுவ கூட்டமைப்பில் உள்ள ஏதாவது ஒரு நாட்டின் மீதான ஆக்ரமிப்பை எங்கள் அனைத்து நாடுகளின் மீதான ஆக்ரமிப்பாக நாங்கள் காண்போம். அதனை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்து நிற்போம். அன்றும் இன்றும் எங்கள் எதிரி ஒன்றே; அது US ஏகாதிபத்தியம் மட்டுமே. மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளை US தனது ஏகாதிபத்தியம் மூலம் அடிமைப் படுத்த நினைக்கிறது. ஆனால் அதை நாங்கள் ஒருபோதும் நடக்க அனுமதிக்கமாட்டோம்" என்றும் அவர் மேலும் அறிவித்தார்.

சாவேஸின் இந்த அறிவிப்பு அமெரிக்காவின் தனி ஆவர்த்தனத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது.

Sunday, January 27, 2008

ஹிட்லர், சாவர்க்கர், மோடி!

விளிம்பு நிலை மக்களுக்காகத் தன்னுடைய எழுத்துப்பணியை அர்ப்பணித்த பிரபல எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி, குஜராத் படுகொலைகளுக்குப் பின், அகதி முகாம்களில் தங்கியிருந்த இஸ்லாமிய மக்களை மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லக் கட்டாயப்படுத்திய குஜராத் அரசை எதிர்த்து இப்படிக் கூறினார். ''எனக்கு நீரிழிவு நோய் மட்டும் இல்லையென்றால் இந்தத் தள்ளாத வயதில், ''மோடிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து மரணமடையவே விரும்புவேன்'' என்று கொடூரங்கள் அரங்கேறிய 2002லில் அகமதாபாத்தில் துணிச்சலாகக் கூறினார்.
இவரைப் போன்ற பல எழுத்தாளர்கள், தங்கள் கண்டனங்களையும், குஜராத்தில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு, நரேந்திர மோடி சொன்ன, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் எதிர்வினை அல்ல என்பதையும், அது மோடியால் தயாரிக்கப்பட்ட இன அழித்தொழிப்பின் 'ஸ்கிரிப்ட்தான் என்பதையும் பட்டவர்த்தனாமாக அம்பலப்படுத்தினார்கள். ஆனால், இவை யாவும் அன்றைய பா.ஜ.க. அரசால் திட்டமிட்டு பரப்பட்ட இஸ்லாமிய விரோத அரசியலாலும், அதனால் உந்தப்பட்ட பெரும்பான்மை உயர்சாதி ஊடகங்களாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பது நடுநிலையார்கள் அறிந்ததுதான்.
அருண்ஷோரி, குருமூர்த்தி, சோ, நைபால் போன்றவர்கள், குஜராத்தில் நடந்தது ஒரு மதக்கலவரம்... அதற்கும் முதல்வர் மோடிக்கும், அவருடைய அரசுக்கும் எந்த சம்மந்தமுமில்லை.... கோத்ராவில் ராமபக்தர்களை, இஸ்லாமியர்கள் ரயில்பெட்டிக்குள் அடைத்து தீ வைத்து கொன்றதால் ஏற்பட்ட இந்துக்களின் பதில் தாக்குதல்தான் என்று, திரும்பத் திரும்ப எழுதினார்கள். பேசினார்கள். ஆனால் இதே, ஆக்ஷன் ரீ-ஆக்ஷன் வாதத்தை, மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கோ, கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கோ இவர்கள் கூறவில்லை. இதை யாரும் கேட்கவில்லை என்பதும் உண்மை.
எட்டு நூற்றாண்டுகள் சிறுபான்மையினரான முகலாயர்கள் நம் நாட்டை ஆண்டு வந்தபோது, எதிர்த்துக் கலவரம் செய்யாத இந்துக்கள், இந்துக்களே ஆட்சி செய்யும் சுதந்திரத்திற்குப் பின்னான காலகட்டத்தில் இசுலாமியர்களைத் திட்டமிட்டு அழிக்க வேண்டிய நோக்கமென்ன? 14 சதவீதமான இஸ்லாமியர்கள், இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவார்கள் என்று இந்துத்துவவாதிகள் பரப்பும் கருத்துக்கு உண்மைத் தன்மை உள்ளதா? மதம் மாற்றுகிறார்கள் என்று ஒரு பக்கம் கூறிக்கொண்டு இன்னொருபுறம் 80 சதவீத இந்துக்கள் வாழும் நாடு என்றும் பேசி வரும் சங் பரிவார்களின் திட்டம்தான் என்ன?
ஆர்.எஸ்.எஸ். தலைமை நாக்பூரில் இருந்தாலும், அதன் தத்துவ பரிசோதனையை மிகப் பெரிய அளவில் செய்து பார்த்த சோதனைக்கூடம் குஜராத். குஜராத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். காயமடைந்தவர்கள் ஐயாயிரத்துக்கும் மேல், சொத்துக்களை இழந்தவர்கள் ஏழாயிரம்பேர். நிம்மதியை இழந்தவர்கள் ஒட்டு மொத்த குஜராத் வாழ் அப்பாவிகள். குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சியில், இஸ்லாமியர்கள் தங்கள் அடையாளங்களை இழந்து இந்துக்களோடு இணைந்து வாழ வேண்டுமென்று, தனது ஆட்சியில் புதுப்புது சட்டங்களை கொண்டு வந்தார் மோடி. தங்களது மத, கலாச்சார விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளாத இஸ்லாமியர்கள், தங்களது தனித்தன்மையை விட்டு கொடுக்க முன்வரவில்லை. அவர்களுக்கு வந்த துணிச்சலுக்கு காரணம், இந்திய அரசியல் சட்டம்தாதன் என நம்பினார்கள். ஆனால், இந்தியாவில் செயல்படுத்தப்படும் மதச்சார்பற்ற சட்டங்கள், தான் ஆட்சி செய்யும் குஜராத்திற்குள் நுழைய முடியாது என்பதற்கு, உதாரணம் காட்டுவதற்குதான் 'கோத்ரா' என்ற ரயில் எரிப்பு சம்பவத்தின் மூலம், சங் பரிவார் கற்றுக் கொடுத்த இன அழித்தொழிப்பு பரிசோதனையை செய்து பார்த்தார். அதில் வெற்றியும் பெற்றார்.ஆனால், திரை மறைவில் நடந்த விஷயங்களை மறைத்து, ஆக்ஷன் ரீ ஆக்ஷன் என்ற கருத்து பொதிந்த சென்டிமென்டான நாடகத்தை அரங்கேற்றி, சங்பரிவார் அமைப்புக்குள் ஹீரோவாகவும், பொதுமக்களின் பார்வையில் அப்பாவியாகவும் காட்சி தந்தார் மோடி. குஜராத் கலவரத்தில் தலைமை தாங்கி நர வேட்டையாடியதே மோடிதான் என்பதை எத்தனையோ நடுநிலையாளர்கள் எடுத்துக் காட்டியும் பெரும்பாலனவர்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை.ஹிட்லரை ரோல் மாடலாக எடுத்துக்கொண்ட சாவர்க்கரின் கொள்கைகளை அடியொற்றுகிற, தீண்டாமையை கட்டிக் காக்கின்ற, உழைப்பாளி மக்களை சுரண்டுகின்ற, இனக்குழுக்கள் அனைத்தையும் இந்து என்கின்ற ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டு வர நினைக்கின்ற, விஞ்ஞானப்பூர்வமாக சிந்திக்கக் கூடாது என்று அறிவுறுத்துகிற ஒரு அமைப்பின் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு குஜராத் ஒரு எடுத்துக்காட்டு.குஜராத் கலவரத்துக்கு காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க..வை குற்றம் சாட்டியபோது, 1984ல் டெல்லியில் நடந்த சீக்கியப் படுகொலைகளுக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று கூறி, தாங்கள் செய்த படுகொலைகளை நியாயப்படுத்தியது பா.ஜ.க..சமீபத்தில் யமுனா ராஜேந்திரன் என்ற ஆய்வு எழுத்தாளர் எழுதிய கட்டுரையொன்றில் குஜராத் சம்பவம் எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதை விவரித்திருந்தார். அதில், "கலவரம் துவங்குவதற்கு முன்பாகவே இந்துக்களின் வீடுகளில் காவிக்கொடி அடையாளம் வைத்து, இஸ்லாமியர் வீடுகளை விலக்கி வைத்து காட்டினார்கள் பஜ்ரங்தள் தொண்டர்கள். சபர்மதி எக்ஸ்பிரஸ் தாக்குதல் சம்பவம் வருவதற்கு முன் இந்துத்துவவாதிகள் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கு ரெடியாகிவிட்டார்கள்" என்று கூறுகிறார்.
பல உண்மை அறியும் குழுக்களும், வாக்காளர் பட்டியல், ரேஷன்கடை அட்டவணை இவைகளைப் பார்த்து தெரிந்து கொண்ட பின்புதான், இஸ்லாமியர்களைச் சரியாக அடையாளம் கண்டு கொன்றார்கள். இதற்கு குஜராத் அரசிலுள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்று அறிக்கைகள் வெளியிட்டன.பல இஸ்லாமிய வர்த்தக நிறுவனங்கள் இஸலாமியப் பெயரில் இல்லாமல், பொதுவான பெயர்களிலும், இந்துப் பெயர்களில் செயல்பட்டு வந்தாலும், அதைச் சரியாகக் கண்டு பிடித்து சங்பரிவார் தொண்டர்கள் அழித்தார்கள் என்று பத்திரிக்கையாளர்கள் எழுதினார்கள். எவ்வளவு தெளிவான திட்டம்.அரசும், காவல்துறையும், இன அழித்தொழிப்பில் தீவிரமாக ஈடுபட்ட அமைப்புகளும் இணைந்து நடத்திய குஜராத் வெறியாட்டத்தில் மொத்தம் இறந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மூவாயிரம் என சில அமைப்புகள் கணக்கு சொன்னாலும், வெளியில் வராமல் அமுங்கிப் போன உண்மைகள் ஏராளம்.இன மோதல், அல்லது இன அழித்தொழிப்பு இவைகளை உருவாக்கி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டுமென்ற கான்சப்டில்தான், 'ஷாகா' கற்றுக்கொடுக்கும் அமைப்பாக இருந்த சங் பரிவார், பா.ஜ.க. என்ற அரசியல் பிரிவை 1980ல் துவங்கியது. வி.ஹெச்.பி. பஜ்ரங்தள் ஆகியவை கலவரங்களை உருவாக்கும். ஆர்.எஸ்.எஸ். நேரடி களப்பணியில் இறங்கும். அதற்கு பின் பா.ஜ.க. அதை வைத்து அரசியல் செய்யும். 1990ல் ரத யாத்திரையை சோமநாதபுரத்தில் துவங்கி வட இந்தியா முழுவதும் சென்றார் அத்வானி. ரதம் கடந்து சென்ற பாதையெங்கும் இஸ்லாமியப் பிணங்களாக விழுந்தன. அதன் உச்சபட்சமாக 1992ல் அயோத்யாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதே நாளில் மகராஷ்டிராவில் பா.ஜ.க. சிவசேனா, போலீஸ் கூட்டணியால் 2000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு அடுத்த வருடம் ஜனவரி 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இந்து முஸ்லீம் கலவரம் வெடித்தது. இதிலும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதனால் கோபமுற்று, பீதியடைந்து, தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், தங்களைப் பார்த்து சங்பரிவார அமைப்புகள் அச்சப்படவும், பாகிஸ்தான் உதவியோடு குண்டுவெடிப்பை மும்பையில் நிகழ்த்தினார்கள். இதில் சம்மந்தப்பட்ட பெரும்பாலானவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு வழங்கு நடந்து, சமீபத்தில் தண்டனையும் வழங்கப்பட்டது. இதில் பல அப்பாவிகளும் அடக்கம் என்பது ஒரு பக்கமிருந்தாலும், இதுபோன்ற வழக்கு, கைது, விசாரணை, தண்டனை எதுவும், மும்பையில் இஸ்லாமியர்களை கொன்றவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது இன்றுவரை நிதர்சனமான உண்மை.கோவையிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அங்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தை போலீஸ்தான் துவக்கியது என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஏற்கனவே பா.ஜ.க.வின் ஆயுத பேர ஊழலில் பா.ஜ.க தலைவர்கள் பணம் வாங்கிய விவகாரத்தை வீடியோ மூலம் அம்பலப்படுத்திய தெஹல்காதான், இன்று கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் இந்துக்களைக் கொலை செய்யச் சொன்னது மோடிதான் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இதை மறுக்க முடியாத பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான ரவிசங்கர், தெஹல்கா எப்போதும் பா.ஜ.க.வை மட்டுமே புலனாய்வு செய்கிறது. காங்கிரஸ் கட்சியின் அட்டூழியங்களை புலனாய்வு செய்வதில்லை என்று தன் தரப்பை மறுக்க முடியாமல், மற்ற கட்சியிலும் தவறுகள் நடப்பதுபோல் குற்றம்சாட்டியுள்ளார். நீயும் செஞ்சே, நானும் செஞ்சேன் என்பதுபோல்.வருணதர்மத்தை, எந்த ஆட்சி நடந்தாலும் கட்டிக்காக்கும் உயர்சாதி அரசு அதிகாரிகளைக் கொண்ட மாநிலங்களில் முதன்மையானது குஜராத். கடந்த பல ஆண்டுகளாக காவல்துறை பதவிகளிலிருந்து, சிவில் நிறுவனப்பதவிகள், முடிவெடுக்கும் அதிகார மையங்களில் இஸ்லாமிய, தலித் அதிகாரிகளும், அறிவாளிகளும் ஓரம் கட்டப்பட்டு இருக்கிறார்கள். இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடத்தப்பட்ட அமெரிக்காவிலும் இஸ்லாமிய அடிப்படைவாதிளின் தாக்குதல் பீதியுள்ள ஐரோப்பிய நாடுகளிலும்கூட, அங்கு வாழும் இஸ்லாமியர்களுக்கு சகல உரிமைகளும், வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் இது மிகவும் குறைவு. தெஹல்கா வார இதழின் நிருபர் ஆஷிஸ் கேத்தான் ஆறு மாத காலம் குஜராத்திலுள்ள சங் பரிவார் அமைப்புகளோடு ஒன்றி கோத்ராவில் இந்துக்களை எரித்தது, இந்து வெறியர்கள் என்பதை பல்வேறு விதமான வாக்குமூலங்கள் மூலம் பதிவு செய்துள்ளார்.இந்தியாவிலுள்ள நடுநிலையாளர்களும் மனிதாபிமானமிக்கவர்களும், பல்வேறு உண்மை அறியும் குழுக்களும் கடந்த ஐந்து வருடங்களில் உரத்துக் கூறிய விஷயங்களை, மோடியின் சிஷ்யர்கள் வாக்குமூலமாகக் கொடுத்ததை வீடியோவில் பதிவு செய்து மோடியின் முகத்திரையை கிழித்துள்ளது தெஹல்கா. இதை ஜந்து வருடங்களுக்கு முன்பே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முழுக்க முழுக்க மோடியின் ஆலோசனைகளின் பேரில் வி.ஹெச்.பியும், பஜ்ரங்தள்ளும் செய்த சதி என்பதும் அதை வைத்து மூன்று நாட்களில் எவ்வளவு இஸ்லாமியர்களை கொல்ல முடியுமோ கொல்லுங்கள் என்று அரசு உத்தரவிட்டதின் வெளிப்பாடுதான் என்பதை ஆதாரப்பூர்வமாக பெங்களுரைச் சேர்ந்த ரூத்மனோரமா, டெல்லியைச் சேர்ந்த ஷயதா ஹமீது, அகமதாபாத் பராக் நத்வி, ஷீபா ஜார்ஜ், மாரிதெக்காரா போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் 10 நாட்கள் குஜராத்திலுள்ள அகதி முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு அறிக்கையாக வெளியிட்டார்கள். அதில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் எந்தவொரு காட்டுமிராண்டி தேசத்திலும் நடந்திராதது என்று குறிப்பிட்டார்கள்.அகமதாபாத், கோத்ரா, வதோத்ரா, சபர்காந்த், பாஞ்ச் மகால் ஆகிய நகரம், கிராமம் சார்ந்த பகுதிகளில் நடந்த கொடூரங்களில் பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்ட கற்பழிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிறுவர் சிறுமிகளிடமும் கொடூரங்களைப் புரிவதற்கு உதவிய, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் காவல்துறையினரிடம், அடியாட்களாக பயன்படுத்தபட்ட பழங்குடி மக்களின் தலைவர்களிடம் பேசி கருத்துக்களை பதிவு செய்தனர். இந்தக் குழுவினர் 100 பக்கமுள்ள அவர்களுடைய அறிக்கையில் சுருக்கமாக சொல்லப்பட்ட காரணிகள், வன்முறைகள் தனனெழுச்சியாக நடந்ததாகத் தெரியவில்லை.

யாரைத் தாக்குவது என்பது முன்கூட்டியே திட்டமிட்டுத் துல்லியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டதற்கு அழுத்தமான ஆதாரங்கள் உள்ளன. இவை மிகவும் குறைவாக வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது. இவற்றின் அளவும் விரிவும் கிராமப்புறங்கள், நகரங்கள் இரண்டிலும் ஏகமாக நடந்துள்ளன. நிவாரண முகாம்களிலும் அடைக்கலமாயிருக்கும் பெண்களும், சிறு மற்றும் பெரும் கூட்டத்தினரால் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். மிருகத்தனமாகக் கற்பழிப்பு செய்யப்பட்ட பெண்கள் கடைசியில் நெருப்பில் எரிக்கப்பட்டார்கள். பெண்கள் மீதான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டதில் அரசும், போலீசும் பகிரங்கமாகத் துணை போயிருக்கின்றன.

குஜராத்தி மொழி பத்திரிக்கைகள் சிலவும் உண்மைகளை மறைத்து, இஸ்லாமியர்கள் அதிகமாகக் கொல்லப்படுவதற்கு ஏதுவாக செய்திகளை வெளியிட்டார்கள். இது முழுக்கவும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஆதரவில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்தனர் இந்த பெண்கள் குழுவினர். அதை அந்தக் காலகட்டத்தில் பா.ஜ.க அரசுக்கு பயந்து கொண்டு எந்த ஊடகங்களும் வெளிப்படுத்தவில்லை.நடந்துவிட்ட கொடூரத்தின் உண்மையை எத்தனை முறை நிரூபிக்க வேண்டியுள்ளது. பத்து வருடங்களுக்கு முன் இந்து முனனணித் தலைவர் ராம கோபாலன், ஆர்.எஸ்.எஸ் வெளியிட்ட, "முஸ்லிம்களால் இந்தியாவுக்கு ஆபத்தா"? என்ற புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.அதில் இந்தியாவில் இந்து ஆட்சி அமைய ஸ்பெயின் நாட்டில் எப்படி கிறிஸ்தவர்களால், இஸ்லாமியாகள் கொல்லப்பட்டு, வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கர்ப்பிணிகள், குழந்தைகள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார்களோ, அது போல் இந்தியாவில் நிகழ வேண்டும் என்று தெளிவாக எழுதியிருந்தார்.அதைத்தான் குஜராத்தில் செய்தார் மோடி. சுப்ரீம் கோர்ட்டுக்கு சாமானியன் மனு அனுப்பினாலே அதை வழக்காகப் பதிவு செய்துவிடுவோம் என்று கூறும் நீதித்துறை... அவசியமான வழக்குகளில் விடுமுறையிலும் தீர்ப்பு சொல்லும் நீதித்துறை... குஜராத் கொடூரங்களின் சூத்திரதாரி மோடி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?


-சே குவேரா.

நன்றி: நக்கீரன் இணைய இதழ்

Friday, January 25, 2008

அமெரிக்கா படிப்பினைப் பெறுமா?

வீழ்ச்சி அடைந்த பேரரசுகள்
உலக வறலாற்றில் பல்வேறு பேரரசுகள் பல்வேறு காலக் கட்டங்களில் ஆதிக்கம் செலுத்திச் சென்றுள்ளன. எந்த ஒரு இராஜியமும் தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள இயலாமல் போனதுதான் யதார்த்தமான நிலையாகும். ரோமப் பேரரசு, பாரசீகப் பேரரசு, கிரேக்கப் பேரரசு, பிரித்தானியப் பேரரசு, உஸ்மானியப் பேரரசு உட்பட எல்லா இராஜியங்களும் ஒரு காலக் கட்டத்திற்க்குள் வீழ்ச்சியை எட்டுவிட்டன.
பொதுவாக வரலாற்றில் நாம் அறிய வரும் உண்மை என்னவென்றால் மனிதர்களுக்கு ஆற்றலை பிரயோகித்து வெற்றி கிட்டக்கூடிய சந்தர்ப்பங்களில் எல்லாம் தன் சக்தியை துஷ்பிரயோகம் செய்து வரூவதைக் கண்டு வருகின்றோம். மேலும் அதற்தான பிரதி பலன்களை அடையக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வாய்ப்பினும் கூட அதிலிருந்து படிப்பினை பெறுவதை விட்டும் மனிதன் தவறிவிடுகின்றான். அவற்றின் சரித்திர புருஷர்கள் இல்லாதிருப்பினும் கூட அவர்கள் விட்டுச்சென்ற காலச்சுவடுகளும் அதிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகளும் ஏராளம் ஏராளம். இத்தகைய படிப்பினைகளில் திருந்தாதவர்கள் அடையக் கூடிய இழிவு காலத்தின் கட்டாயம் ஆகும். அந்த வரிசையில் தலையாய இடம் பெற்றறுள்ள ஒரு நாடுதான் அமெரிக்காவாகும். இது இன்று பெற்றிருக்கும் அபரிதமான ஆற்றலைப் போன்று ஒவ்வொரு காலக் கட்டத்திலும் சில நாடுகள் பெற்றிருந்தன. அதை கொண்டு பல நாடுகளை அடிமைப்படுத்தி ஆட்சியும் செய்தன. ஒரு காலக்கட்டத்தில் அவைகள் வலுவிழந்து வீழ்ச்சியை அடைந்தன. தங்கள் வல்லாதிக்கத்தின் மூலம் வரலாற்றைப் புரட்டிப்போட்ட இராஜியங்கள் சரிந்துப்போன சரித்திரத்தையும் அதிலிருந்து பெறப்படும் பாடங்களையும் பார்ப்போம். இதன் மூலம் படிப்பினை பெறாவிட்டால் அமெரிக்கா அடையும் நிலையைப் பற்றி, காலம் நமக்கு ஒரு தெளிவான பதிலை கொடுக்கும்.
ஐரோப்பிய வெள்ளையர்களும் அமெரிக்கர்களும் நாடுகளினால் வேறுப் பட்டிருப்பினும் அவர்களின் நிறங்களிலும் குண நலன்களில் பெருத்த வித்தியாசம் காணப்படவில்லை. ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் குடியேறியதன் மூலம் அமெரிக்கர்களாயினர். ஐரோப்பியர்களின் நிற வெறி மற்றும் சுயநலப்போக்கை குறிப்பிடும்போது அது அமெரிக்காவை இணைத்துக் கூறப்பட்டதாகவே எடுத்து கொள்ள வேண்டும்.
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜியத்திற்கு சொந்தக்காரர்கள் என்று மார்த்தட்டியவர்களின் இன்றைய நிலை
பத்தொன்பதாம் நூற்றாண்டைப் பொறுத்த வரை உலகின் பெரும் பகுதி பிரிட்டானியர்களின் கையில் இருந்தது. இவர்களின் இராஜியத்தின் எதாவது ஒரு பகுதியில் சூரியன் உதித்துக் கொண்டிருப்பதை பெருமையாக பறைசாற்றிக் கொண்டு இருந்தனர். வியாபாரத்தின் மூலமாகவும் மார்க்கத்தை போதிக்கவும் வந்ததாக முதலில் ஒரு நாட்டில் நுழையும் இவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாட்டை ஆக்கிரமித்து அங்குள்ள பிரிவினரிடையே பகைமையைப் ஊதிப் பெரிதாக்கி தங்கள் ஆதாயத்தை அடைந்துக் கொள்வார்கள்.
இவர்களைப் பற்றி ஒரு ஆப்ரிக்க கவிஞன் சொன்னான்வெள்ளையர்கள் எங்கள் நாட்டிற்கு வந்த போது'நாடு' எங்கள் கையில் இருந்தது. 'பைபில்' அவர்கள் கையில் இருந்ததுஅவர்கள் கண்ணை மூடி ஜபம் செய்வது எப்படி என்றுச்சொல்லிக்கொடுத்தார்கள். நாங்கள் கண்ணை மூடி ஜபம் செய்தோம்பிறகு கண்ணை திறந்து பார்த்தபோது எங்கள் கையில் பைபில் இருந்ததுஅவர்கள் கையில் நாடு இருந்தது
'கிழக்கும் மேற்கும்' என்ற தனது பயணப் புத்தகத்தில் விவேகானந்தர் பின் வருமாறு இவர்களைப்பற்றி குறிப்பிடுகின்றார்.
இஸ்லாம் எங்கெல்லாம் சென்றதோ அங்குள்ள மக்களை அரவணைத்து வாழ்வளித்ததுகிருஸ்துவம் எங்கெல்லாம் சென்றதோ அங்குள்ள பூர்வ குடிகளை இல்லாதொழித்தது
இந்த கருத்து உண்மையில் மிகைப்படுத்திச் சொல்லப்பட்டதல்ல. வெளிப்படையாக இவர்களின் குணங்களை தோலுரித்துக் காட்டும் மேற்கோளாகும்.
கொலம்பஸ் 1492-ம் ஆண்டு அமெரிக்காவை கண்டுப்பிடித்தவுடன் அசுர வேகத்தில் ஐரோப்பிய நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்கள் காலனிகளை அமைத்து அமெரிக்காவின் வளங்களை சுரண்ட ஆரம்பித்தன. அதில் பிரிட்டன் மாத்திரம் 13 காலனிகளை அமைத்து தன் ஆதிக்கத்தை விஸ்தீரனப் படுத்தியது. பிரிட்டனும் மற்றும் ஆக்கிரமித்த ஐரோப்பிய நாடுகளும் மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களை மனிதாபிமானமின்றி கொன்றுக் குவித்து அவர்களின் குறுதிக் கறை படிந்த மண்ணில் ஆப்பிரிக்க நீக்ரோக்களை அடிமைகளாக பிடித்துச் சென்று புதிய அமெரிக்காவை நிர்மாணித்ததை அறிவிக்கும் வரலாற்று குறிப்புகள் நமக்கு மிக அண்மையில்தான் இருக்கின்றது.
ஒரு கோடிக்கும் அதிகமான ஆப்பிரிக்க மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்ட அடிமைகளாக இவர்களினால் இழுத்துச் செல்லப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டனர். இவர்கள் நீக்ரோக்களை கொத்தடிமைகளாக படுத்தியபாடு மனிதநேயமிக்கவர்களின் உள்ளங்களை கரையச்செய்யும் நிகழ்வுகளாகும். Tony Morisan என்பவர் அமெரிக்காவின் புகழ் பெற்ற எழுத்தாளர். இவர் 1993 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றவர். இவருக்கு Plidzer பரிசை 1987-ம் ஆண்டு பெற்றுத் தந்து உலக அளவில் பிரபல்யத்தை ஏற்படுத்தித் தந்த Beloved என்ற தன்னுடைய நாவலில் வறலாற்றுச் சான்றுகளுடன் நீக்ரோக்களின் அடிமை வாழ்வையும் அவர்கள் அடைந்த துயரங்களையும் பட்டியல் போட்டு விளக்கியிருந்தார். மனிதர்களை மிருகங்களை விட மோசமாக நடத்திய நிறவெறிப் போக்கு இன்று வரை எதாவது ஒரு வழியில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது. மனித உரிமைக்காகவும் உலக அமைதிக்காகவும் மக்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதை கண்டு வருகின்றோம். சங்கிலியால் விலங்கிட்டு மக்களை மாக்களாய் நடத்திய மனித நேயத்தைத்தான் கட்டுரையின் ஆரம்ப புகைப்படம் விளக்குகின்றது.
பிரித்தானியப் பேரரசின் நிலைசூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜியத்திற்கு நாங்கள் சொந்தக்காரர்கள் என்று மார்த்தட்டிய பிரித்தானியப் பேரரசின் நிலை இன்று என்ன ஆனது என்பதை நம் கண்கூடான காண்கிறோம். அமெரிக்க கண்டத்தில் அமைத்த 13 காலனிகளும் ஆப்பிரிக்க கண்டத்தின் எல்லாக் காலனிகளும் கையை விட்டுச் சென்றது. இந்தியா சுதந்திரம் பெற்றது. மூலை முடுக்கெல்லாம் இருந்த ஆதிக்கங்கள் விடைப் பெற்று சென்றன. உலகம் முழுதும் இருந்த அவர்களின் இராஜியங்கள் அஸ்தமித்து தங்கள் சொந்த இராஜியத்தில் அஸ்தமனம் கண்ட மோசமான நிலையை அடைந்ததை நாம் கண்டுவருகின்றோம். உலகத்தில் மிக அதிக அளவில் தங்கம் மற்றும் பிளாட்டினம் கிடைக்கும் தென் ஆப்ரிக்காவின் மீது தீராத மோகம் கொண்ட இவர்களின் ஆளுமை நீடித்ததா என்றால் நிச்சயமாக இல்லை. கென்யாவில் இவர்களுக்கு எதிராக நடைப்பெறும் சம்பவங்கள் அனைத்தும் இவர்களின் காலனி ஆதிக்கம் ஒழிந்து அதற்கு முடிவு கட்டும் சம்பவங்கள் நிறைய அரங்கேறிவரும் காட்சியைக் காண்கின்றோம். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டிய கருப்பின மக்கள், அரியணை ஏறிய நிகழ்ச்சி இவர்களின் ஆட்டங்கள் விடைப்பெறும் சந்தர்ப்பத்தை எட்டி விட்டன என்பதை சொல்லாமல் சொல்லுகின்றன. ஆனால் இன்று என்ன நிலை என்றால் வெள்ளையர்கள் வாழும் நிலை இக்கட்டாகிப்போனது. வெள்ளையர்கள் தங்கள் உடல் தோலின் நிறத்தை நீக்ரோக்களைப் போன்று வேதியல் முறையில் கருப்பாக மாற்றிக்கொண்டு வரும் செய்தியை அறிய வந்தபோது இவர்களின் நிலை பல் பிடுங்கப்பட்ட பாம்பின் நிலையை அடைந்துவிட்டதை இந்த உலகம் உணர்ந்துக்கொண்டது. 1997-ஆம் ஆண்டு ஹாங்காங் கையை விட்டுபோன போது இளவரசர் சார்லஸினால் கண்கலங்க முடிந்ததே தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. ஜிப்ரால்டரை மீட்க ஸ்பெயினும் போக்லாந்து தீவை மீட்க அர்ஜெக்டினாவும் தொல்லைகளை கொடுக்கின்றன. பரந்து விரிந்த பேரரசு மாத்திரம் கையை விட்டுச்செல்லவில்லை. மாறாக அவர்களின் சொந்த நாட்டில் பிரச்சினை ஆரம்பம் ஆகியது.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து, இவை நான்கும் இணைந்து உண்டாக்கப்பட்ட ஒருங்கினைந்த ஒரு அமைப்புத்தான் கிரேட் பிரிட்டன் என்பதாகும். தற்போது இவைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள குரோத மனப்பான்மையும் இவைகள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு தனிநாடு கேட்கக்கூடிய நிலை நிச்சயமாக எந்த ஒன்றும் நடக்க சாத்தியமானது என்பதை நமக்கு தெளிவாக்குகின்றது. 1977-ஆம் ஆண்டு அயர்லாந்தை தன் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் கத்தோலிக்கர்களுக்கும் புரொடஸ்டன்ட்களுக்கும் தீராத பகை ஏற்பட்டு இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் குண்டு மழை பொழிய ஆரம்பித்து. 1999-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து தனி பாராளுமன்றமும் வேல்ஸ் தனி சட்ட மன்றமும் அமைத்து தன்னதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டதன் மூலம் ஐக்கிய முடியாச்சி (UNITED KINGDOM) முடிவுறும் நிலையை எட்டியுள்ளது. பழைய புகழ் பேசி பெருமூச்சி விடும் நிலைக்கு தள்ளப்பட்டது அதற்கு காலம் கொடுத்த பரிசாகும். இந்த நிலையை நோக்கி அமெரிக்கா சென்றுக் கொண்டிருக்கின்றது என்றுச் சொன்னால் மிகையாகாது.
ஐக்கிய ரஷ்ய பொதுவுடமை குடியரசு (USSR)இருபதாம் நூற்றாண்டில் கொடிக்கட்டி பறந்த சாம்ராஜியம் ஐக்கிய ரஷ்ய பொதுவுடமை குடியரசு (USSR). பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை ஜார் மன்னர்களினால் சொல்ல முடியாத துயரங்களை அடைந்த மக்கள் காரல்மார்க்ஸின் கொள்கையினால் ஈர்க்கப்பட்டனர். 1917-ஆம் ஆண்டு லெனின் ஆட்சியைப் கைப்பற்றுகின்றார். 1924ல் லெனின் இறந்ததன் பிறகு ஆட்சி கட்டிலில் அமர்ந்த ஜேசப் ஸ்டாலின் ஒரு கொள்கையை கடைப்பிடித்தார். அதுதான் நாடுபிடிக்கும் கொள்கை. 1924 லிருந்து 1953 வரை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ஸ்டாலின் அண்டை நாடுகள் பலவற்றை பிடிப்பதையே தம் பிரதானக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். அதன் விளைவாக அவர் தன் 29 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியில் பிடித்த நாடுகள் ஒன்றல்ல இரண்டல்ல ''பதினைந்து'' நாடுகளாகும்.
நாடுபிடிக்கும் இராணுவ வீரர்களுக்கு தேவையான உணவு மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்காக நாட்டு மக்களை கசக்கி பிழிந்து எண்ணற்ற துயரங்களுக்கு ஆளாக்கினார். கூட்டுப்பண்ணை முறையில் விவசாயிகளிடமிருந்து விளைப்பொருட்களை பலவந்தமாக எடுத்து லட்சக்கணக்கான பேர்களைக் கொன்று குவித்தார். இல்வாறு பரந்து விரிந்துச்சென்ற இந்த சாம்ராஜியம் 1991-ஆம் ஆண்டு ஒரு முடிவுக்கு வந்தது. கம்யூனிசம் உடைந்தது. கஜகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், தாஜிஸ்தான், உக்ரைன், லிதுவேனியா, அஸர்பைஜான், எஸ்டோனியா, போன்ற 15 சுதந்திரக் குடியரசு நாடுகள் சுதந்திரப் பிரகடனம் செய்து தனி குடியரசை அமைத்துக் கொண்டன. நாட்டில் இருந்த ஆயிரக்கணக்கான ஸ்டாலினின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. தங்கள் 70 ஆண்டு காலத்தில் பிடித்த அனைத்து நாடுகளும் குறுகிய காலத்தில் கையை விட்டு சென்றதை அவர்களினால் பார்த்துக் கொண்டுதான் இருக்க முடிந்தது. கட்டி ஆண்டவர்கள் கையைக் கட்டிக் கொண்டு இருப்பதைத் தவிர வேறொன்றும் செய்யும் ஆற்றல் அவர்கள் பெற்றிருக்கவில்லை. நிச்சயமாக இதிலிருந்து கிடைக்கப்பெறும் பாடங்கள் ஏராளம்.
இந்திய தேசத்தை ஆட்சி செய்தவர்களின் நிலை
ஆசியாவின் துணைக்கண்டம் என்று அழைக்கப்டும் நம் இந்திய தேசத்தை எடுத்துக்கொள்வோம். எத்தனை பேரரசுகள் எத்தனை வம்சங்கள் கூறு போட்டு இதை ஆட்சி செய்தன. இருப்பினும் அனைத்தும் ஒரு காலக்கட்டத்தில் ஒளிர்ந்து பின்னர் எரி நட்சத்திரங்களைப் போன்று மின்னி மறைந்த வரலாறுகள் பாடங்கள் நிறைந்த அனுபவப் புத்தகங்கள். குப்தர்கள் வம்சம், மௌரிய வம்சம், இராஜ புத்திரர்கள், அடிமை வம்சம், சாலுக்கிய வம்சம், கில்ஜி வம்சம், முகலாயப் பேரரசு, விஜய நகரப் பேரரசு, ஹைதராபாத் நிஜாம்கள், ஆங்கிலேயர்கள், போர்ச்சிக்கீசியர்கள், தட்சுக்காரர்கள், பிரஞ்சுகாரர்கள், போன்ற எண்ணற்ற வர்க்கத்தினர் ஆட்சி செய்து முடிவெய்திச் சென்றனர். இத்தகையவர்களின் நிலைமையை சற்றே ஆராய்ந்து பார்ப்போமேயானால் நமக்கு அல்லாஹ்வுடைய வசனம் ஞாபகத்திற்கு வருகின்றது.

காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம் (அல்குர்ஆன் 3:140)
அல்லாஹ் காலச்சக்கரத்தை மாறி மாறி சுழல விடுகின்றான். கீழ் இருப்பவர்கள் மேல் வருவதும் மேலே இருப்பவர்கள் கீழ் நிலை அடைவதும் அல்லாஹ்வின் நியதி என்பதை அறிந்துக்கொள்ள முடிகின்றது.
இந்தியத் திருநாட்டைப் பலரும் ஆண்டிருப்பினும் கூட முகலாயர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் என்பதாலும் நீண்ட காலம் ஆண்ட அவர்கள் அடைந்த கடை நிலையை மட்டும் இந்த கட்டுரையின் நோக்கத்தை கருத்தில் கொண்டு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். 1525-ஆம் ஆண்டு பாபர் பானிபட்டில் இப்ராஹிம் லோடியை தோற்கடித்ததன் மூலம் முகலாயப் பேரரசை நிறுவுகின்றார். 5 ஆண்டுகளில் பாபர் மரணித்ததன் பின்னர் வரிசையாக ஹூமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஒளரங்கசிப் என்று வம்சா வழியாக பரந்து விரிந்த இந்த இராஜியம் 1857-ஆம் ஆண்டு மன்னர் இருக்கும் அரண்மனை மாத்திரமே மிஞ்சிய நிலையில் அதை சுத்தம் செய்யக்கூட ஆள் இல்லாத ஒரு நிலையை இரண்டாம் பகதூர்ஷா காலத்தில் அடைந்தது. மன்னர் ஆங்கிலேயர்களினால் கைது செய்யப்பட்டு இரங்கூன் சிறையிலடைக்கப்பட்ட போது முகலாய சாம்ராஜியம் ஒரு சூனியமான நிலைக்கு வந்தது என்பதை மிக அண்மைக்கால வரலாற்றில் பதிவாகியுள்ள ஒரு சான்றாகும். இந்த நிலை இன்று உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த அமெரிக்காவிற்கு நிகழாது என்று திட்டவட்டமாக கூற இயலுமா?.
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் கொலம்பஸினால் அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்ட ஆரம்பக் காலங்களில் மிக அதிக அளவிற்கு புதிய அமெரிக்க கண்டத்தில் காலனிகளை அமைத்த நாடுகள் பிரிட்டன் ஸ்பெயின், பிரான்சு, போர்ச்சுக்கல் மற்றும் நெதர்லாந்து(தச்சு) ஆகும். இன்று இவைகளின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு மாகாணம் கூட இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். தென் அமெரிக்க நாடுகளில் மிக அதிகமாக ஸ்பானிஷ் மொழி பேசி வருவது ஸ்பெயின் ஆட்சியின் தாக்கம்தான்.
சில காலக்கட்டங்களில் ஒன்றின் கை ஓங்கியிருப்பதும் சில காலக்கட்டங்களில் பலவீனப்பட்டிருப்பதும் உலக இயல்பாய் இருந்து வந்துள்ளதை வறலாற்றின் மூலம் அறிய முடிகின்றது. உலகை ஆண்டுச் சென்ற இராஜியங்களின் வீழ்ச்சியிலிருந்து இந்த அமெரிக்கா படிப்பினைப் பெற்றுள்ளதா என்றுச் சொன்னால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றுச் சொன்னால் அவை இன்று உலக அரங்கில் அரங்கேற்றம் செய்யும் எல்லா நடவடிக்கையும் நம்மை இந்த முடிவின் பக்கம் இட்டுச் செல்லுகின்றது. கடந்த நுற்றாண்டில் அமெரிக்காவின் செயல்பாடுகள் அனைத்தும் அதற்கு உலக அரங்கில் அதன் மீது ஒரு அதிருப்தியையும் கெட்ட பெயரையும் உண்டாக்கி இருப்பதை எவராலும் மறுக்க இயலாது. தேவையின்றி ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவதும் தங்கள் அடிவருடிகளைக் கொண்டு தங்களுக்கு சாதகமான முடிவுகளை ஆதாயப்படுத்திக் கொள்வதும் பல நாடுகளின் விவகாரங்களில் கண்டு வருகின்றோம். உலக நாடுகளின் ஒற்றுமையைக் குலைக்கும் நடவடிக்கையிலும் முக்கியமாக பிரித்தாளும் சூழ்ச்சியை நடைமுறைப் படுத்துவதிலும் முன்னனி வகிப்பதை காண முடிகின்றது.
எதிரியினுடைய எதிரி நண்பன் என்னும் சாணக்கிய மூளையுடன் தன் எதிரி நாடுகளின் உள் நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அந்த நாட்டின் ஆட்சியாளர்களின் அதிருப்தியாளர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு ஆதரவையும் ஆயுதங்களையும் அளித்து ஆட்சி கவிழ்ப்பையும் இன்னபிற குழப்பங்களையும் பதட்ட நிலையையும் ஏற்படுத்தி தங்கள் ஆயுத வியாபாரத்திற்கு தளம் அமைத்துக் கொள்ளுகின்றனர். உதாரணமாக ஈரானை அது எதிர்த்தபோது ஈராக்கிற்கு ஆயுத உதவி செய்தது. ஈராக் தன் கையை உதறி சென்ற போது அதன் மீது நியாயமான எந்த காரணமும் இன்றி போர் தொடுத்து தங்கள் கைக் கூலி படையை ஆட்சியில் அமர்த்தியுள்ளது. ரஷ்யாவை எதிர்க்க ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்த இந்த அமெரிக்கா, இன்று ஆப்கானிஸ்தானை பிடித்து தங்கள் அடிவருடிகளிடம் கொடுத்துள்ளதே இதற்கானச் சான்றுகளாகும். உலக நாடுகளின் ஒற்றுமையில் தன்னுடைய வீழ்ச்சி இருப்பதை உணர்ந்துக்கொண்ட இவர்கள் உலக ஒற்றுமையை குலைப்பதை முன்னிட்டே தங்கள் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
தனக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த ரஷ்யாவை விழ்த்தி வெற்றி கொண்ட இவர்களுக்கு தற்போதைய சீனாவின் முன்னேற்றம் கண்ணை உறுத்துகிறது. சீனாவிடமிருந்து தனி நாடு கேட்டு வரும் தைவானுக்கு இது குரல் கொடுப்பது சீனாவின் குரல் வளையை நெறிக்க முற்படும் ஒரு முயற்சிதான். திபெத் விவகாரங்களிலும் தலையிடுவதும் இந்த அடிப்படையில்தான். காஷ்மீர் விவகாரங்களிலும் பாலஸ்தீன விஷயத்திலும் இருட்டை வேடம் போடுவதும் இஸ்ரேலை தன் 51 வது மாகாணமாக எண்ணி அதன் வரம்பு மீறலுக்கு துணை நிற்பதும் அதன் உலக சமாதானப் போக்கை(?) வெளிப்படுத்துகின்றது. இன்று அறிவியல் முன்னேற்றத்தின் உச்சியில் இருப்பதாக மார்த்தட்டிக் கொள்ளும் இவர்கள் மனித நேயத்தை பற்றி மற்றெவரும் பேசாத அளவிற்கு பேசிவருவதை கண்டும் கேட்டும் வருகின்றோம். மனித நேயத்தை குழித் தோண்டி புதைக்கும் தொழிலில் முழுமூச்சாய் ஈடுபட்டு வரும் இவர்கள் தங்கள் சுய நலத்திற்காக அரங்கேற்றும் அட்டுழியங்களை இந்த உலகம் ஒரு விபரீதமான மௌனத்துடன் பார்த்து கொண்டுதான் இருக்கின்றது.
அமெரிக்காவை எதிர்க்க கூடிய நாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாடுகளின் பாதுகாப்பிற்காக அதிக அளவில் இராணுவ செலவுகள் செய்வதும் பெரும்பாலான நாடுகள் அணு ஆயுத தொழில் நுட்பத்தை பெற்று வருவதும் எதிர் வரும் காலங்களில் இவற்றின் ஆதிக்கத்தை குறைக்க வரும் சம்பவமாகவே கருதப்படுகின்றது. அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்குவோம் என்று இவர்கள் வாய் அளவில் சொல்வார்கள். மற்ற எந்த ஒரு நாட்டிடமும் இல்லாத அளவிற்கு அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வார்கள். இதை உணர்ந்துக் கொண்ட உலக நாடுகள் இதன் கூப்பாட்டை ஒரு பொருட்டாகவே கொள்ளாமல் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளன. இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட நாடுகள் அணித் திரளும் நாள் அமெரிக்காவிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நாளாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நாடுகள், முதுகில் குத்துப்பட்டு சாவதை விடுத்து மார்பில் குத்துப்பட்டு சாவதை தேர்தெடுத்தால் இதன் நிலை என்னவாகும்.
உலக மக்களின் மீதோ மனித உரிமைகள் குறித்தோ இதற்கு எந்த அக்கறையும் கிடையாது என்பதும் சுய நலம் மட்டும் தான் இதன் குறிக்கோள் என்பதும் நிதர்சனமாக வெளிப்படுத்தும் செயல்பாடுகள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. பூமியின் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்யும் கார்பன் டை ஆக்சைடுடைய உற்பத்தியை குறைத்து ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதை தடுக்க வேண்டும் என்பதே உலக சுற்றுப் புற சூழல் அமைப்பின் திட்டமாகும். இவர்கள் கார்பன் வாயுவின் உற்பத்தியை உலக நாடுகள் அனைத்தையும் விட அதிக உற்பத்தி செய்கின்றார்கள். இதிலிருந்தும் நாம் இவர்களின் மனித உரிமைப் போக்கை புரிந்துக் கொள்ள முடியும். ஐக்கிய நாடுகள் சபையில் உலக அமைதியை முன்னிட்டோ வரம்பு மீறல் சம்பவங்களை எதிர்த்தோ தீர்மானங்களை கொண்டு வந்தால் அதை தன் ரத்து அதிகாரத்தின் மூலம் நிறைவேற்ற விடாமல் முட்டுக் கட்டை போடுவதால் உலக நாடுகளின் எதிர்ப்புக் குரலை எதிர் கொள்ள வேண்டிய பாதகமான சூழ்நிலையை எட்டியுள்ளது.
கல் நெஞ்சம் படைத்த இவர்கள் ஏழை நாடுகளின் வறுமையை சாதகமாக பயன்படுத்தி மனிதர்களுக்கு மிக மிக தீங்கிழைக்கக் கூடிய கதிரியக்கம் நிறைந்த அணு உலைக் கழிவுகளை அவர்களின் நாடுகளில் புதைக்க சொல்லுவார்கள். ஏனென்றால் பரப்பளவில் பரந்து விரிந்த அமெரிக்காவில் இடம் பற்றாக்குறையா காரணம்? இல்லை இவர்கள் மட்டும் தான் வாழப் பிறந்தவர்களாம். இவர்கள் இன்று பெற்றுள்ள பொருளாதார வசதிகளும் இவர்களின் ஆட்டத்திற்கு ஒத்து ஊதுகின்றன. பொருளாதார வசதிகளைக் கொண்டும் ஆயுத பலத்தை கொண்டும் எதையும் சாதிக்க முடியும் என்ற இறுமாந்துப் போய் இருக்கும் இவர்களைப் போன்றோரின் நிலைக் குறித்து இறைமறை பின் வருமாறு கூறுகின்றது.

இவர்களுக்கு முன் எத்தனையோ தலை முறையினரை அழித்திருக்றோம் என்று இவர்கள் அறியவில்லையா? உங்களுக்கு செய்துத் தராத எத்தனையோ வசதிகளை அவர்களுக்கு செய்து கொடுத்திருந்தோம். அவர்கள் மீது வானத்தை தொடர்ந்து பொழியச் செய்திருந்தோம். அவர்களுக்கு கீழ் ஆறுகளை ஓடச் செய்தோம். அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அழித்தோம். அவர்களுத்குப் பின்னர் வேறு தலைமுறையினரை உருவாக்குவோம். (அல்குர்ஆன் 6:6)
எதிர் வரும் காலங்களில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை மேலும் குறைக்கும் பாதகமான வேறு சில அம்சங்களும் வரலாற்று ரீதியான பலவீனங்களும் எதிர்நோக்கி இருக்கின்றன.
அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. இவை பல காலக்கட்டங்களில் ஒன்றன் பின் ஒன்றாக அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டன. மெக்ஸிகோ யுத்தத்தின் மூலம் மிகப்பெரிய நிலப்பரப்பை பெற்றது. ஐம்பது மாகாணங்களிலும் மிகப்பெரிய மாகாணமான அலாஸ்காவை 1867ம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்தும், புளோரிடா மாகாணத்தை ஸ்பெயினிடமிருந்தும், லிதுவேனியாவை பிரான்சிடமிருந்தும் வாங்கியது. 1776-ஆம் ஆண்டு காலனி ஆதிக்கத்திற்கு எதிராக ஏற்பட்ட மிகப்பெரிய புரட்சியின் மூலம் ஒவ்வொரு மாகாணமும் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு ஐக்கிய அமெரிக்கா உருவாக ஆரம்பித்தது. ஜார்ஜியா அரசியல் அமைப்பில் முதலாவது மாகாணமாக ஒப்புக்கொள்ளப்பட்டு 1788-ல் 7-வது மாகாணமாக மாரிலேந்தும் 11-வது மாகாணமாக நியூயார்க்கும் 1889-ஆம் ஆண்டு 42-வது மாகாணமாக வாஷிங்டனும் 46-வது மாகாணமாக ஓக்லகாமாவும் 1912-ஆம் ஆண்டு 47-வது மாகாணமாக நியுமெக்ஸிகோவும் கடைசியாக 50-வது மாகாணமாக 1950ம் ஆண்டு ஹவாய் தீவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இன்று இந்த 50 மாகாணங்கள் ஒருங்கினைந்து அமெரிக்காவாக இருப்பினும் கூட இவை ஒவ்வொன்றும் கொடி, சின்னம், அரசு விலங்கு, அரசு பறவை போன்ற ஒவ்வொன்றிலும் வேறுபட்டு விளங்குகின்றது.
இவ்வாறு பல காலக்கட்டங்களில் இணைந்த வேறுப்பட்ட இனங்களை மற்றும் தன்மைகளை உள்ளடக்கிய இந்த ஐக்கிய அமெரிக்கா உடைந்து பலக் கூறுகளாக மாறும் அபாயம் அதன் கழுத்திலே தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. தற்போது ஒரு ஆதிக்க சக்தியாக இருக்கக் கூடியதால் அதனுடன் ஒன்றுபட்டு இருக்கும் இவைகள் பிரிட்டனைப் போன்று பல் பிடுங்கப்பட்டு விட்டால் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் போன்று தனி நாடு கேட்கும் நிலை இந்த 50 மாகாணங்களுக்கு ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் மிகுதியாகவே இருக்கின்றன.

(நபியே நீர் அவர்களிடம்)கூறுவீராக! உங்க(ள் தலைக)ளுக்கு மேலிருந்துதோ அல்லது உங்கள் பாதங்களுக்கு கீழிருந்தோ உங்களுக்கு வேதனையை அனுப்புவதற்கும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி (உங்களுக்கு மத்தியில் நீங்கள் போர் சிறைச்சேதம் ஆகியவற்றை செய்து) உங்கள் சிலரின் கொடுமையை(க் கொண்டு)மற்ற சிலரைச் சுவைக்க செய்வதற்கும் அவன் சக்தியுடையவன். அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக நம்முடைய வசனங்களை எவ்வாறு பல வகையிலும் திருப்பித் திருப்பி கூறுகின்றோம் என்று நீர் கவனிப்பீராக. (அல்குர்ஆன் 6:65)
இவர்களின் ஆதிக்க சக்தியை கொண்டு இவர்கள் நாடுவதெல்லாம் இவர்களினால் அடைந்து விட முடிகின்றதா என்றால் அதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இறைவனின் சோதனைகளும் அவ்வப்போது இவர்களை தொட்டு விட்டுதான் செல்லுகின்றது. இவர்கள் உலக நாடுகளின் மீது குண்டு மழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவிக்கின்றார்கள். ஆனால் இவர்களுக்கோ இயற்கை பேரழிவு அவ்வப்போது பெருத்த சேதத்தை ஏற்படுத்தி சென்று கொண்டுதான் இருக்கின்றது. உலகில் மிக அதிக வேகத்தில் வீசக்கூடிய புயல் காற்று சைக்ளோன் ஆகும் (மணிக்கு வேகம் 120 கி.மீ மேல்). இது 1995-ஆம் ஆண்டு புளோரிடா மாகாணத்தில் ஏற்படுத்திய பேரழிவு நூற்றுக் கணக்கான அணு குண்டுகளை வெடிக்கச் செய்தால் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துமோ அவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது. அல்லாஹ் யானைப் படையை மென்று உமிழ்ந்த கூலங்களைப் போல் ஆக்கியதாக சொல்கின்றானே அதுபோல. புளோரிடாவை சைக்ளோன் தன் கோரப் பிடியில் வீழ்த்திப் போட்ட ஒரு மாதிரிப் புகைப் படம்
2000-வது ஆண்டில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டு தீ அதன் தட்ப வெப்ப நிலையில் பெருத்த மாறுதலை ஏற்படக்கூடிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்திச் சென்றது. கலிபோர்னியா காட்டுத் தீ
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலம் எங்கு சென்று மறைந்தது என்று தெரியாமல் திதைத்துப் போனார்கள். 1986-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி சேலஞ்சர் விண்கலத்தை ஏவினார்கள். 73 வினாடிகளில் தங்கள் கண் முன்னே வெடித்து சிதறி 7 பேர் மாண்டு போனதை கண்டு அதிர்ந்துப் போனார்கள். 2003-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி கொலம்பியா விண்கலம் வெடித்து கல்பனா சாவ்லா உட்பட 7 பேர் சிதறிய விதம் குறித்து விக்கித்துப் போனார்கள். கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கை தாக்கக் கூடிய ஏவுகணைகள் குறித்தவறியதை கண்டு மனம் நொந்துப் போன நிகழ்வுகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன.
சாலஞ்சர் விண்கலம் வெடித்து சிதறியக் காட்சி
கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியக் காட்சி
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். மறுமை நாளுக்கு முன்பாக இந்க உலகில் பேசக்கூடிய அளவிற்கான பெரிய பூகம்பங்கள் மூன்று நிகழும். அதில் ஒன்று மேலை நாடுகளிலிலும் மற்றொன்று கீழை நாடுகளிலும் மூன்றாவது பூகம்பம் மக்காவிற்கு அருகிலும் நடக்கும் என்றுச் சொன்னார்கள். ரசூல்(ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேறி வருவதை இவ்வுலகம் கண்டு வரும் இவ்வேளையில் ரசூல்(ஸல்) குறிப்பிட்டுள்ள இந்த பூகம்பம் இன்னும் இந்த உலகில் எங்கும் நிகழவில்லை என்பதும் அது நிகழ்ந்தால் பல நாடுகளும் அல்லது சில கண்டங்களும் சுவடின்றி மறையக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் அதில் இந்த பயங்கரவாத அமெரிக்கா இடம் பெற்று மண்ணோடு மண்ணாகி போகுமா? என்பதைப்பற்றிய அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடம்தான் உள்ளது.

மறைவானவற்றின் திறவு கோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்கள். அவன் தரையிலும் கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும் ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. (அல்குர்ஆன் 06:59)

இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம் வானிலிருந்து நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும், கால்நடைகளும், உண்ணுகிற பூமியின் தாவரங்களுடன் அத்தண்ணீர் கலக்கிறது. முடிவில் பூமி அலங்காரம் பெற்று கவர்ச்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தனக்கு சத்தி இருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ பகலிலோ அதற்கு(பூமிக்கு) கிடைக்கின்றது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது போல் அறுக்கப்பட்டதாக அதை ஆக்கினோம். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம். (அல்குர்ஆன் 10:24)
இவர்கள் எவ்வளவு காலம் தான் இந்த வேலைகளை வெற்றிகரமாக செய்து கொண்டிருப்பார்கள். இதற்கு ஒரு முடிவு கிடையாதா? வறலாற்றை ஆய்வு செய்தவர்கள் கண்ட உண்மையின் அடிப்படையில் அழிவை நோக்கி செல்லும் இவர்கள் அடிப்பட்டு வீழ்வதெப்போது? இது பாதிக்கப்பட்டவர்களின் உள்ளத்தில் உளவியல் ரீதியாக எழக்கூடிய கேள்விதான். ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை இருக்கின்றது என்பது நியூட்டனின் மூன்றாவது இயக்க விதியாகும். இது பௌதீகத்திற்கு மாத்திரம் அல்ல மனித வாழ்விற்கும் பொருந்த கூடிய விதியாகதான் அமைந்துள்ளது.சென்ற நூற்றாண்டு முழுவதும் எண்ணற்ற வரம்பு மீறல்களிலும் அநியாயமான படை எடுப்புகளினாலும் இந்த பூமியில் இரத்தக் கறையைப் பூசி தங்கள் விசையை பிரயோகம் செய்துவிட்ட இவர்கள் அதன் எதிர் விசைக்காக (பிரதி பலன்களுக்காக) காத்திருக்கின்றார்கள். இந்த உலகமும் காத்திருக்கின்றது. நாமும் காத்திருக்கின்றோம்.

அவர்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போன்றதைத் தவிர (வேறு எதையும்) எதிர் பார்க்கின்றார்களா? எதிர் பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர் பார்க்கின்றேன் என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 10:102)

நன்றி:http://www.islamkalvi.com/general/lessons_from_history.htm


Thursday, January 24, 2008

இஸ்லாம் குறித்த சங்கராச்சாரியார் தேவானந்த சரஸ்வதி அவர்களின் கருத்து

கடந்த மே மாதம் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுடன் தில்லியில் நடந்த மத நல்லிணக்கக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் தேவானந்த சரஸ்வதி ஜெகத்குரு சங்கராச்சார்யா அவர்கள் நிகழ்த்திய உரை...
"இறைவன் அருள் இருப்பதால் நமக்கு மதத்தினைப் பற்றி அறியக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சென்று வருகிறோம். மேலும் இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் துவக்கினோம். அதன் காரணமாக சங்கராச்சாரியரும் முஸ்லிம்களின் மத்தியில் சென்றதால் அவர்களின் அன்பை உணர முடிகிறது! மேலும் இஸ்லாத்தின் உண்மைகளை அறிந்து, இஸ்லாம் முழு உலகிற்கும் மிகச்சிறந்த மனித நேயத்தின் பாடத்தைப் புகட்டும் மார்க்கம் என்று மக்களுக்கு இதன் மூலம் உணர்த்த முடியும்."
இஸ்லாத்தை வாளின் அடிப்படையில் நிறுவப்பட்ட மதம் என்றும் முஸ்லிம்களைத் தார்மீக சிந்தனையற்றவர்கள், கடுமையானவர்கள் என்றும் மக்கள் கூறுகின்றனர். இதைக் கேட்கும் போது உலகில் எவருக்காவது அதிகமாக மனவேதனை ஏற்படும் என்றால் அது எனக்குத்தான் (எனும் அளவுக்கு இது எனக்கு வேதனையளிக்கிறது). இதில் உண்மையில்லை, மேலும் இது ஒருக்காலும் உண்மையாக இருக்க முடியாது.

இஸ்லாம் குர்ஆனின் மூலம் தந்துள்ள முதல் பிரகடனமே 'வணக்கத்திற்குத் தகுதியுடையவன் ஏக இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை' எனும் 'லாஇலாஹா இல்லல்லாஹ்' என்பதாகும். வேதத்தைப் படித்து அதன் சாரத்தைப் பிழிந்து இறைவனை வழிபட்டு, ஏக இறைவனின் தூதை ஒரே வாசகத்தில் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் நமக்கு தந்து விட்டார்கள். இதை விடப் பெரிய வேதம் உலகில் வேறு எதுவாக இருக்கும்?

குர்ஆனின் இந்தக் கலிமாவைப் படித்துவிட்டு இந்துக்கள் இதன்படி செயல்பட நாடினால் இதை விடச் சிறந்த ஒரு மார்க்கம் வேறு ஒன்றும் இருக்க இயலாது என்று உணரலாம் அவரை விடச் சிறந்த மதவாதியாகவும் யாரும் ஆக முடியாது.

குர்ஆனை ஆழமாக ஆய்வு செய்து பார்த்து விட்டு இதை நாம் சொல்லவில்லை, மாறாக, குர்ஆனை நம்புபவர்களின் உள்ளத்தில் ஆழமாகச் சென்று நாம் இதை உணர்ந்தோம்.

இஸ்லாம் மார்க்கத்தை முழு உலகமும் ஏற்றுக் கொண்டால் அதில் ஒரு தவறும் இல்லை. இஸ்லாம் இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட சித்தாந்தம் ஆகும். இது எந்த ஒரு தனி மனிதனின் கொள்கையோ சித்தாந்தமோ இல்லை.

ஒரு சிலர் இந்தப் பூமியில் மக்கள் மத்தியில் பிரிவினையையும் வேற்றுமையையும் ஏற்படுத்துவதற்காக, "முஸ்லிம்கள் கடுமையானவர்கள், இரக்கமற்றவர்கள்" என்று இஸ்லாத்தைக் குறை கூறுவதற்காக (முஸ்லிம்களளப் பற்றி)க் கூறுகின்றனர். இப்படிப் பட்டவர்களை விடக் கெட்டவர்கள் யாரும் இல்லை என்று நான் கூறுகிறேன். இவர்கள் ஷைத்தானின் வழித்தோன்றல்கள் ஆவார்கள்; இறைவனின் குழந்தைகள் ஆகமாட்டார்கள்.

என்னால் இயன்றவரை வேதங்களையும் புராணங்களையும் இந்துமத வேதங்களையும் இதர கிரந்தங்களையும் படித்தேன். அதன் பின்னர் முஸ்லிம்களின் மத்தியில் நான் பழகத் துவங்கினேன். இதனால் என்னை (சிலர்) எதிர்க்கத் துவங்கினர். "முட்டை (புலால்) சாப்பிடுபவர்களுடன் சங்கரச்சாரியர் நட்பு கொள்கிறார்" என்று (கூறினர்). நான் அவர்களிடம் கூறினேன் "உங்களுக்குப் புரியவில்லை, அவர்கள் (முட்டை மாமிசம் சாப்பிடுபவர்கள்) ஒரு நாளுக்கு ஐந்து முறை இறைவனை வணங்குகின்றனர், புற்களைத் தின்னும் நீங்கள் ஒரு முறை கூட இறைவனை வணங்குவதில்லை. உங்களைவிட அதர்மத்தில் இருப்பவர் யார்?.

நீங்கள் உங்கள் அதர்மச் செயல்களைப் பாருங்கள். ஒருவருடைய தூய்மையான நம்பிக்கைக்கும் அவருடைய உணவு வழிமுறைகளுக்கும் எதிராகக் கருத்துக் கூறுவது என்பது முதலில் தார்மீகத்திற்கு எதிரான செயலாகும். நீங்கள் ஒருவருடைய மனதையும் புண்படுத்தவில்லை என்றால் உங்களைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை. நாம் புற்களைத் தின்று கொண்டு அடுத்தவர்களின் மனதைப் புண்படுத்துவோம் என்றால் நம்மைவிடப் பெரிய அநியாயக்காரர்களாக யாரும் இருக்க முடியாது.

ஆக நான் கூற வருவதன் சாரம் என்னவென்றால், நான் எனது அனுபவத்தில் உங்களிடமிருந்து (முஸ்லிம்களிடத்தில்) கண்ட ஒரு முக்கியமான விஷயம், உங்களிடமிருந்து நான் பெற்ற அன்பு (நேசம்). என்னிடம் இதைப்பற்றி கேட்கப் படுகிறது. "நீங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏன் செல்கிறீர்கள்? நீங்கள் சங்கராச்சாரியர் ஆயிற்றே?" என்று. நான் அவர்களுக்குக் கூறுகிறேன்: முஸ்லிம்களிடம் நீங்கள் கேளுங்கள் இவர்கள் ஏன் இவ்வளவு அன்பை எனக்குத் தருகின்றனர் என்று. எமக்கு இவ்வளவு அன்பும் நேசமும் தருபவர்களிடம் நாம் அவசியம் செல்வோம்.

அதையும் மீறி என்னிடம் கேட்கப் படுகிறது: "நாங்கள் உங்களுக்கு அன்பு தரவில்லையா?" என்று. நான் கூறினேன்: நான் உங்கள் மத்தியில் பிறந்தவன்; நீங்கள் முஸ்லிம்களை நேசிக்காததால் நான் உங்களை நேசிப்பதில்லை.

நான் உங்கள் மத்தியில் ஒரு விஷயத்தைக் கூறிக்கொள்கிறேன் சில காலங்களாக இந்து மத்ததின் பெயரில் சில அமைப்புகள் இந்து-முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமை ஏற்படுத்துவதற்காகச் சில காரியங்கள் செய்து வருகின்றன. இதனால் பொதுவாக பாமர இந்துக்களால், அப்பாவி இந்துக்களால், 'இஸ்லாம்' என்றால் என்ன 'சனாதன தர்மம்' என்றால் என்ன என்று அறிய முடிவதில்லை.

சனாதன தர்மத்திலும் இஸ்லாத்திலும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. மேலும் இந்து மதம் ஒரு மதமே இல்லை. சனாதன தர்மம்தான் தர்மம் ஆகும். சமஸ்கிருத பாஷையில் சனாதனம் என்பதை வேறு விதத்தில் 'இஸ்லாம்' என்று கூறலாம். ஏனென்றால் சனாதன தர்மமும் இஸ்லாமும் ஒன்றேயாகும். சனாதன தர்மம் கூறுகிறது "இறைவன் ஒருவனே" என்று. "இறைவன் அனைவருக்கும் இறைவனாவான்" என்ற தூதையே ரிஷிகளும் முனிவர்களும் தந்தனர். இதே தூதைத்தான் இறைவனால் அனுப்பப்பட்ட நம்முடைய தூதராகிய முஹம்மத் அவர்களும் நமக்குத் தந்தார்கள். பின்னர் நாம் ஏன் வேற்றுமை பாராட்ட வேண்டும்?
இங்கு இந்திய முஸ்லிம்களுக்கு நான் தெளிவாக ஒரு விஷயத்தைக் கூறுகிறேன்: இந்திய முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்திய முஸ்லிம்கள் தூங்கினால் இந்தியா தூங்கிவிடும். ஆகையால் இந்தியாவை விழிப்புடன் வைக்க வேண்டுமெனில் இந்திய முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியா விழிப்படையின் முழு உலகமும் விழிப்படையும். இன்னுமொரு விஷயம் நான் அறிவேன் அது இந்தியாவின் உண்மையான இந்துக்களுக்கு, உண்மையான சனாதன தர்மிகளுக்கு முஸ்லிம்களின் நேசம் தேவை. அவர்களுக்கு முஸ்லிம்களிடம் வேற்றுமை தேவையில்லை.
இதோ குர்ஆன் எனும் வேதம் உள்ளது (குர்ஆனை தமது கையில் எடுக்கிறார்) குர்ஆன் ஷரீப், குர்ஆன் ஷரீப். நான் விரும்புவது என்னவென்றால் முழு உலகிலும் இந்த வேதம் சென்றடைய வேண்டும். நான் ஒரு விஷயம் இங்குக் கூறுகின்றேன் இதை நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் அண்மையில் எந்த மொழியைச் சார்ந்த அண்டைவீட்டார் இருந்தாலும் அவருக்கு அவருடைய மொழியில் இந்தப் புனித வேதமாகிய குர்ஆனைத் தர முயற்சி செய்யுங்கள்.
நான் நினைக்கிறேன், இந்தக் குர்ஆன் முழு உலகிலும் சென்றடைந்தால் முழு உலகிலும் அமைதி நிலவும். சாந்தி நிலவும். அதன் பிறகு இதே போல் முழு உலகிலும் சங்கராச்சாரியர் எங்கு வேண்டுமானாலும் சென்று தமது கருத்துக்களைப் பேசுவதற்கு எந்த ஒரு தடங்கலும் இருக்காது, தயக்கமும் இருக்காது. நீங்களும் அஞ்சாதீர்கள்; தயங்காதீர்கள். நாம் நன்கறிவோம் சில நேரங்களில் இந்தத் தயக்கத்தினால், இந்த நாட்டின் சில பிரிவினைவாத சக்திகளின் சதிகளின் காரணமாக நாம் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிவதில்லை. நாம் இன்று கைவிரித்து உங்களிடம் வந்துள்ளோம். கைவிரித்து நிற்கிறோம்; உங்களை ஆரத்தழுவுகின்றோம்; அரவணைக்கிறோம். உங்களுக்காக எனது இதயத்தையும் எனது தலையையும் - இஸ்லாத்தைக் காப்பதற்காக எனது தலையை இழக்க நேர்ந்தாலும் இந்த சங்கராச்சாரியர் அதற்கும் தயார்.
ஏனென்றால் சங்கரச்சாரியார் நன்கறிவார் இஸ்லாம் ஏமாற்றக்கூடிய கொள்கையில்லை; சங்கராச்சாரியார் நன்கறிவார் இஸ்லாம் அழிவிற்கான மார்க்கம் இல்லை; சங்கராச்சார்யர் அறிவார் வேதத்தில் இருப்பதே இந்தக் குர்ஆனில் இருக்கிறது. ஆகையால் நாம் முஸ்லிம்களை நமது உறவுகளாகக் கருதமுற்பட்டால் எமது தார்மீகம் மத நம்பிக்கை இழப்புக்குள்ளாகாது. அது இன்னும் முன்னேற்றம் தான் அடையும்.
முஸ்லிம்கள் இறைவனால் படைக்கப்பட்டவர்கள்; மனிதர்களால் படைக்கப்பட்டவர்கள் அல்லர். தம்மை இந்துக்கள் என்பவர்களும் அறிந்துகொள்ளுங்கள், நீங்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்களே. ஆகையால் வேற்றுமை பாராட்டாதீர்கள். என்னைப் போல் அனைவரையும் நேசியுங்கள்.

டாக்டர் (ஜாகிர் நாயக்) அவர்களே நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்! டாக்டர் அவர்கள் தமது நேரத்தை ஒதுக்கி வந்துள்ளார் என்பதை நான் அறியாமலில்லை. நான் அவருக்கு நன்றி கூறிக் கொள்ள விரும்புகிறேன். மேலும் இறைவன் அவர்களுக்கு சக்தியளிக்க வேண்டும், (என்றும்) நாம் இதே போல் அழகான பெருந்திரளாக மக்களிடம் பேச மேலும் வாய்ப்புகள் அளிக்கப் பெறவேண்டும், மேலும் எங்கள் மீது அவர்களின் தனிக்கிருபை இருக்க வேண்டும் (என்றும் விரும்புகிறேன்).

நாம் என்றும் வாழ்நாள் முழுவதும் அவருக்குத் துணையாக இருப்போம். இதே வார்த்தைகளுடன் வாழ்க்கையில் எப்போது நீங்கள் என்னை அழைத்தாலும் எது வரை எனது உடலில் உயிர் இருக்கிறதோ அதுவரை நாம் உங்கள் சபைகளில் வந்து கொண்டேயிருப்போம்.

மொழியாக்கம்: இப்னு ஆதம்


நன்றி:http://www.satyamargam.com/

Wednesday, January 23, 2008

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.
1. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் (Tryptophan) எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
2. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
3. பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் சீர்செய்யவும், மூளை விழிப்புடன் இருந்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவும், சிகரெட் கைவிட்டவர்கள் நிக்கோட்டின் ஆதிக்கத்திலிருந்து விரைவில் விடுபடவும் உதவுகிறது.
4. இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
5. வைட்டமின் B அதிகம் இருப்பதால் நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திடவும் வாழைப்பழம் உதவுகிறது.
6. வேலையில் உண்டாகும் அழுத்தத்தினால் சிலர் அதிகமாக சாக்லேட்டுகளை உட்கொள்ள எத்தனிப்பர். இவர்கள் வாழைப்பழத்தை சிற்றுண்டி போல உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பிலிருந்தும், குடற்புண் ஏற்படுவதிலிருந்தும் தப்பலாம்.

7 வாழையின் தண்டு, பூ, பழம் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவையாகும். வாழைப்பழம் உடம்பை உரமாக்குவதுடன் நல்ல மல மிளக்கியாகவும் செயல்படுகின்றது. பித்தம், காமாலையை தடுக்கும். வறட்சியை அகற்றும்.
8 வாழைப்பழம் விந்துவை பெருக்கி மூலத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது. வாழைப்பழம் குளிர்ச்சியான பழம். உடம்பு உஷ்ணம் இருப்பவர்கள் தினமும் இரவில் படுக்க போகும் முன்பு வாழைப் பழம் ஒன்று சாப்பிடுவது மிகுந்த நன்மையை தரும்.
9 மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வர- மலச்சிக்கல் போயே போய்விடும்.
10 காய்ச்சல், மற்றும் வயிற்றுப்போக்கு சமயத்தில் மட்டும் வாழைப்பழத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.
11 புதுமண தம்பதிகள்- ஒன்றுக்கும் மேற்பட்ட வாழைப்பழம் சாப்பிட்டால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடம்பும் சூடேறாமல் இருக்கும்.
12 முதுமையை தள்ளிப்போடும் விருப்பமுள்ளவர்கள் தினமும் வாழைப்பழம் உண்டு வரலாம். இவர்களுக்கு முகத்தில் தோல் சுருக்கம், தொய்வுகள் ஏற்படாது.
13 மூல நோய் உள்ளவர்களும், மலச்சிக்கல் உள்ளவர்களும் பூவன் பழம் சாப்பிட்டு வந்தால் பிரச்சினை தீரும்.
14 பாலுடன் வாழைப் பழம் சேர்த்து சாப்பிட அஜீரணம் சரியாகும்.
15 இளநீர் கலந்து சாப்பிட்டால் காச நோய் குணமாகும்.
16 சிறுநீரக நோய்களுக்கு நெல்லி சாறில் வாழைப்பழத்தை பிசைந்து சாப்பிட சரியாகும்.
17 பாலும், வாழைப்பழமும் விடாமல் சாப்பிடுபவர்களுக்கு இரைப்பை புண் ஏற்படுவதே இல்லை.
18 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விந்து பெருகும். மூலநோய் காணாமல் போகும்.
19 மூட்டு வலி குணமாக, தினமும் 2 வாழைப்பழங்கள் சாப்பிடுங்கள்.
20மலச்சிக்கல், வாய்வு உபத்திரவம், இரத்தச் சோகை, பொது பலவீனம், நோஞ்சான் உடம்புக்காரர்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட நல்ல நன்மை கிட்டும்.
21 ஆண்களைவிட பெண் களுக்கு அதிக அளவில் நன்மை செய்யக்கூடிய பழம் என்று ஆய்வுகள் சொல் கின்றன. பெண்களுக்கு மாத விடாய், பால் புகட்டுதல், மகப்பேறு போன்ற காரணங்களினால் அடிக்கடி கால்சிய பற்றாக் குறை ஏற்படும். கால்சிய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு பயன் பெறலாம்.
22 உடல் எடை கூட வேண்டும் என்று நினைப்பவர்களும் தினம் வாழைப்பழம் சாப்பிடலாம்.
23 வாரம் 2 முறை வாழைத்தண்டு சாறு அருந்தி வந்தால், குடல் சுத்தமாகும் சோடியம் குறைவாகவும், அதிகம் பொட்டாசியமும், கால்சியமும், இரும்பும் இருக்கிறது. மிக சுலபத்தில் ஜீரணமாகக்கூடிய சர்க்கரை இருப்பதால் உடனடி சக்திக்கு நிறைய உதவும்.வாழைப்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சேர்த்தால் போதும் என்கிறார்கள் உணவுத்துறை வல்லுநர்கள். இதை ‘பேலன்ஸ்டு டயட்’ என்கிறார்கள்.இதில் இருக்கிற ‘செரடோனின்’ என்கிற பொருள் மன அழுத்தத்திற்கு உதவக்கூடியது. என்னவென்று தெரிந்கொள்ள முடியாத பல அலர்ஜிகளுக்கு, வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட தீர்வு கிடைக்கும் என்கிறார்கள். இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், இரத்தசோகைக்கு மிக நல்லது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தியைத் துரிதப்படுத்கிறது. வாழைப்பழத்தில் கண்டுபிடிக்கப்படாத வைட்டமின் ‘U’ இருக்கிறது. இது கான்ஸர் நோய்க்கு எதிரி. அல்சர் புண்களை ஆற்றுவதிலும் வாழைப்பழத்திற்கு மகத்தான சக்தி உண்டு.நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம் போன்ற கோளாறுகளுக்கு தடுப்பாகவும், தீர்வாகவும் பயனாகின்றது என்று கண்டுபிடித்துள்ளனர்.வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்துண்ணும் பழக்கம் தவறு என்பதை, பலரும் அறிவதில்ல. கிராம மக்கள் வாழைப்பழம் சாப்பிடும் முறையை உற்று நோக்கினால், ஓர் உண்மை புலப்படும். அவர்கள் தோலை கையில் வைத்துக் கொண்டு அதில் பிசிறு போல் வெண்மையாக ஒட்டிக் கொண்டு உள்ள நார்ப்படலத்தைக் கீறி வழித்து உண்பர். சிறு துவர்ப்புடன் இருக்கும் இந்த நார்ச் சத்தினால் குடலில் தங்கும் சூடு தணியும் என்று காரணம் கூறுவார்கள். அர்த்தமுள்ள இந்தப் பழக்கம் குடல் புண் வராமல் காக்கின்றது. ‘மலைவாழைப்பழம்’ மலச்சிக்கலை உடைக்கும்.‘செவ்வாழைப்பழம்’ உயிரணுக்களைப் பெருக்கும்.‘மஞ்சள் வாழைழப்பழம்’ குடல் புண்கள ஆற்றும்.‘பேயன் வாழைழப்பழம்’ அம்மைமநோயால் குடலில் சேரும் நஞ்சு, வேக்காடுகளை முறிக்கும்.‘அடுக்கு வாழைப்பழம்’ சரீரத்திற்கு அழகூட்டும்.‘மொந்தன் வாழைப்பழம்’ உடலின் வறட்சியைப் போக்கும்.‘பச்சை வாழைப்பழம்’ உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். சளியைச் சேர்க்கும்.‘நேந்திரம் வாழைப்பழம்’ தோலுக்கு மினுமினுப்பைத் தரும்; தாய்ப்பாலைப் பெருக்கும்.இவ்வளவு சிறப்புடைய இந்தப் பழத்தை நான்கு பேர் சாப்பிடக் கூடாது.1. கடுமையான ஆஸ்துமா நோயாளிகள்.2. நீண்டகால சர்க்கரை நோயாளிகள்.3. கை, கால் வலிப்பு உள்ளவர்கள்.4. உடல் பருமன் மிக்கவர்கள்.வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.
எது எப்படியோ இறைவனின் பல்வேறு அருட்கொடைகளில் ஒன்றான வாழைப்பழம் ஓர் இன்றியமையாத உணவுப்பொருள் என்பதை எவரும் மறுக்க இயலாது.

Tuesday, January 22, 2008

கண்ணியம் கொடுத்த ஹிஜாப்! - ஸாரா போக்கர்


அமெரிக்காவின் நடுநாயகமாக விளங்கும் ஊரில் பிறந்த அமெரிக்கப் பெண் நான். எல்லாப் பெண்களையும் போலத்தான் நானும் அந்தப் பெரிய நகரத்த்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். இறுதியாக நான் ஃப்ளோரிடாவுக்கு, மியாமி கடற்கரையின் தெற்குப் பக்கமாகக் குடிபெயர்ந்தேன். வாழ்க்கையின் கவர்ச்சிகளைத் தேடுபவர்களுக்கான 'சூடான இடம் அதுதான். பெரும்பாலான சராசரி மேற்கத்தியப் பெண்கள் செய்வதையே நானும் பின்பற்றினேன். அதுதானே இயற்கையுமாகும்? என் தோற்றம், கவர்ச்சி இவற்றில் கவனம் செலுத்தினேன்.
மற்றவர்களை எந்த அளவுக்கு என் பக்கம் இழுக்க முடியும் என்பதை வைத்து என் மதிப்பை அளந்தேன். பெரும் முனைப்புடன் அதற்காக நான் உழைத்தேன். தனிப்பட்ட பயிற்சியாளினியாக மாறினேன். கடற்கரையோரமாக மேல்குடி மக்கள் வாழும் பகுதியில் ஒரு வீடு வாங்கினேன். உடலை வெம்மைப்படுத்திக் கொள்வதற்காக வழக்கமாகக் கடற்கரைக்குச் செல்பவர்களில் ஒருத்தியாக மாறினேன். அந்த நேரத்தில் எது பெரும்பாலானவர்கள் வாழும் ஸ்டைலாக இருந்ததோ அதுவே எனதாகவும் இருந்தது. ஆனால் பெண் என்ற கவர்ச்சியை வைத்து நான் கழித்துக் கொண்டிருந்த அந்த வாழ்க்கை எனக்கு நிம்மதியைத் தரவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். ஆண்டுகள்தான் கழிந்து கொண்டிருந்தன.ஃபேஷனுக்கு நான் அடிமையாகிப் போயிருந்தேன். தோற்றத்தின் பிணைக் கைதியாகி விட்டிருந்தேன்.எனது வாழ்க்கை முறைக்கும் மன நிம்மதிக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகிக் கொண்டே போனது. குடி, பார்ட்டிகள், தியானம், சமூக சேவை, வேறு மதங்களைத் தழுவுதல் இப்படி பல விஷயங்களில் மனதைச் செலுத்தித் தப்பிக்கப் பார்த்தேன். ஆனால் எதுவுமே என் வாழ்க்கையில் ஏற்பட்ட அந்த இடைவெளியை நிரப்பவில்லை. மாறாக ஒரு பள்ளத்தாக்கைப் போல அது மேலும் வளர்ந்து ஆழமாகிக் கொண்டிருந்தது. நான் செய்து வந்ததெல்லாம் நோய் நிவாரணிகள் அல்ல, தற்காலிகமாக வலியை மறக்கடிப்பவை மட்டுமே என்பதை கடைசியில் நான் புரிந்து கொண்டேன். செப்டம்பர் 11, 2001 ஆகிவிட்டிருந்தது. இஸ்லாத்தின் மீதான தொடர்ந்த குண்டுமாரிகளையும் விமர்சனங்களையும், இஸ்லாமிய மதிப்பீடுகள், பண்பாடு, புதிய சிலுவைப்போர் என்ற பிரகடனங்கள் இவற்றையெல்லாம் பார்க்க நேரிட்டது. அப்போதுதான் இஸ்லாம் என்ற ஒன்றை கவனிக்க ஆரம்பித்தேன். இஸ்லாம் என்றால் பெண்களை கூடாரங்களில் அடைத்து வைத்திருப்பவர்கள், மனைவிகளை அடிப்பவர்கள், தனியிடத்தில் ஒதுக்கி வைப்பவர்கள், பயங்கரவாதிகளின் உலகம் என்றுதான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். பெண் விடுதலைக்காகவும், இன்னும் இந்த உலகை சிறப்பானதாக மாற்றுவதற்கும் போராடும் ஒருத்தி என்ற முறையில் என் வழி, என்னைப் போன்றே, வித்தியாசம் பாராமல் எல்லாருக்கும் நீதியும் சீர்திருத்தமும் வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் இன்னொருவரின் வழியோடு சந்தித்துக் கொண்டது. எனது புதிய வழிகாட்டியானார் அவர். அவருடைய வழிகாட்டுதல்களில் அந்த நேரத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள், வாழ்வாதார உரிமைகள் போன்றவையும் இருந்தன. எனது புதிய ஈடுபாடு அடிப்படையில் பல வகையிலும் வித்தியாசமானதாக இருந்தது. தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டும் நியாயம் என்றில்லாமல், நீதி, நியாயம், விடுதலை, மரியாதை போன்ற யாவும் எல்லாருக்கும் பொதுவானவை, எல்லாருக்குமே கிடைக்க வேண்டியவை என்பதை நான் புரிந்து கொண்டேன். சொந்த நலன் என்பதும் பொது நலன் என்பதும் முரண்பட்டவை அல்ல என்பதையும் தெரிந்துகொண்டேன். "படைக்கப்பட்ட அனைவருமே சமம்" என்பதன் அர்தத்தை முதன் முறையாக நான் புரிந்துகொண்டேன். நம்பிக்கை மட்டுமிருந்தால், இந்த உலகம் முழுவதுமே ஒன்றுதான், படைப்பினங்களுக்குள் ஒற்றுமை இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம் என்று தெரிந்து கொண்டேன். மேற்கத்திய உலகம் எப்போதுமே எதிர்மறையாகப் பேசிக்கொண்டிருக்கும் குர்ஆன் என்ற புத்தகத்தை ஒருநாள் பார்க்க நேர்ந்தது. முதலில் குர்ஆனின் நடையும் அணுகுமுறையும் எனக்குப் பிடித்திருந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புக்கும் இடையில் இருக்கும் உறவு இவை பற்றியெல்லாம் அது சொன்ன விஷயங்கள் என்னை மயக்கின. ஒரு விளக்கவுரையாளரோ அல்லது ஒரு சமயத்தலைவரோ தேவையில்லாமல் மனதோடும் ஆன்மாவோடும் உறவாடிய புத்தகமாக அது இருந்தது. கடைசியில் உண்மையில் குர்ஆன், என்னைப் பாதித்ததை உணர்ந்தேன். எனக்கு ஆத்ம திருப்தி தரும் செயல்பாட்டின் இறுதிக்கட்டமாக, வழிபாடுகளைச் செயல்படுத்தும் ஓர் உண்மை முஸ்லிமாக அமைதியாக வாழத் தகுதியான இஸ்லாத்தில் நான் இணைந்தேன்.ஓர் அழகிய நீண்ட அங்கியை நான் வாங்கினேன். தலைமீது போடும் துணியும் வாங்கிக் கொண்டேன். குட்டைப் பாவாடையிலும், மேற்கத்திய வியாபார உடையான பிகினியிலும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு நான் அலைந்த அதே தெருக்களிலும் சுற்றுப் புறங்களிலும் இந்த உடையோடு நான் நடந்தேன். ஏற்கெனவே பார்த்த அதே மனிதர்கள், அதே முகங்கள், அதே கடைகள்தான். ஆனால் ஒரு வீரியம் மட்டும் முன்புபோல இல்லை. அது நான்தான். ஒரு பெண் என்ற வகையில் எனக்கு முன்பு கிடைக்காத நிம்மதி முதன்முறையாகக் கிடைத்தது. விலங்குகள் உடைபட்டு நான் இறுதியாக சுதந்திரமடைந்து விட்டதை உணர்ந்தேன். ஏற்கனவே நான் அந்த தெருக்களில் சென்றபோது, ஒரு வேட்டைக்காரன் தான் வேட்டையாட இருக்கும் அப்பாவி மிருகத்தைப் பார்ப்பது போலத்தான் என்னைப் பார்த்தார்கள். ஆனால் இப்போது ஆச்சரியமாக அவர்கள் என்னைப் பார்த்தது எனக்கு சந்தோஷமளித்தது.

திடீரென்று எனது தோள்களில் இருந்து ஒரு 'சுமை' எடுக்கப்பட்டுவிட்டது. எனது நேரத்தையெல்லாம் முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் செலவழித்துக் கொண்டிருக்கவில்லை. ஆம், இறுதியாக நான் சுதந்திரம் அடைந்துவிட்டேன்.'மிகவும் அவமரியாதை செய்யும் இடம் என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை நான் என் இதயத்தில் ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, அதை எனக்கு இன்னும் நெருக்கமாக்குவதற்கும் சிறப்பாக்குவதற்கும் போதுமானதாக இருக்கிறது.
ஹிஜாப் (பர்தா) எனக்கு திருப்தி தருவதாக இருந்தது. நிகாப்(முகத்தை முழுமையாக மூடும் துணி) பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. ஏனெனில் அதில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனது. நான் இஸ்லாத்துக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொண்ட என் முஸ்லிம் கணவரிடம், நான் ஏற்கெனவே அணிந்து கொண்டிருந்த ஹிஜாபில் இருந்தால் போதுமா, அல்லது நிகாப் அணிய வேண்டுமா என்று கேட்டேன். ஹிஜாப் அணிவது கடமை என்றும், நிகாப் அப்படிப்பட்டதன்று என்றும் அவர் கூறினார். அந்த சமயத்தில் என் ஹிஜாப் ஆடை என் முகம் தவிர, கூந்தல் முழுவதையும் மூடும் ஒரு தலைத்துணியும், கழுத்திலிருந்து பாதம் வரை மூடிய 'அபயா'என்று சொல்லப்பட்ட ஒரு நீண்ட கருப்பு அங்கியும் கொண்டதாக இருந்தது.ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, நிகாப் அணிய ஆசையாக உள்ளதாக என் கணவரிடம் சொன்னேன். அது அல்லாஹ்வுக்கு அதிகம் பிடித்தமானதாக இருக்கும். அதோடு, அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன நிம்மதியையும் அது அதிகப்படுத்தும் என்றும் அவரிடம் கூறினேன். அவர் எனது முடிவை ஆதரித்தார். 'இஸ்தால்' என்று சொல்லப்பட்ட ஒரு தளர்ச்சியான, தலை முதல் கால்வரை மூடும் ஒரு கருப்பு கவுனையும், என் கண்களைத் தவிர தலையையும் முகத்தையும் முழுமையாக மூடும் நிகாபையும் வாங்கிக் கொடுப்பதற்காக என்னைக் கூட்டிச் சென்றார்.

ஹிஜாபும் நிகாபும் பெண்களையும் பெண்ணுரிமையையும் நசுக்குவதாகவும், சமூக இணைவுக்கு தடையாக இருப்பதாகவும் சொல்லி விரைவிலேயே அரசியல்வாதிகள், வாடிகன் பாதிரிகள், விடுதலை விரும்பிகள், மனித உரிமைகள், பெண் விடுதலை இவற்றுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்பவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. சமீபத்தில் ஓர் எகிப்திய அதிகாரி, "பின் தங்கிய நிலையின் அடையாளம்" என்று ஹிஜாபையும் நிகாபையும் வர்ணித்தார்.சில அரசாங்கங்கள் பெண்கள் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்று சொல்லும் போது அதை எதிர்க்க வேண்டிய மனித உரிமைகள், பெண் விடுதலை இவற்றுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் சில அமைப்புகளும் அதைக் கண்டு கொள்வதில்லை.. ஆனால் ஹிஜாப், நிகாப் அணியும் பெண்களுடைய உரிமைகள், வேலை, கல்வி ஆகியவற்றில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கொடுக்கப்படாமல் அவர்கள் புறக்கணிக்கப்படுவதை இந்த அமைப்புகள் கண்டு கொள்வதே இல்லை. படுமோசமான, வெளிப்படையான வஞ்சகம், கபடம் என்று நான் இதைப் பார்க்கிறேன். துனீசியா, மொராக்கோ, எகிப்து போன்ற சர்வாதிகார ஆட்சி முறைகளில் மட்டுமின்றி, ஃபி்ரான்ஸ், ஹாலந்து, பிரிட்டன் போன்ற மேற்கத்திய ஜனநாயக அரசுகளிலும் ஹிஜாப், நிகாப் அணியும் பெண்களுடைய உரிமைகள், வேலை, கல்வி ஆகியவற்றில் இன்று மறுக்கப்படுகின்றன. நான் இன்னும் ஒரு பெண்ணியவாதிதான். ஆனால் முஸ்லிம் பெண்ணியவாதி. நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவர்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்தெடுத்து மனித குலத்துக்கு வழிகாட்டக் கூடியவர்களாக மறுபடியும் ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நல்லன எல்லாவற்றையும் செய்ய வேண்டும். தீயன விலக்க வேண்டும். எல்லாத் தீமைகளையும் விலக்க வேண்டும். கெடுதியான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நிகாப் அல்லது ஹிஜாப் அணியும் நமது உரிமைக்காகப் போராட வேண்டும். நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக. அதே சமயம், ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், இதன் அர்த்தம் என்ன, ஏன் இது நமக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது என்பனவற்றை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.நிகாப் அணியும் பெண்களில் பலர் மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து மீண்டு வந்தவர்கள். அதில் சிலருக்குத் திருமணம்கூட ஆகவில்லை. இன்னும் பலருக்கும் நிகாப் அணிவதற்கு குடும்பம் அல்லது சுற்றத்தின் ஆதரவு இல்லை. இது நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தேர்வாகும். இதை விட்டுக் கொடுக்க நாம் தயாராக இல்லை. உலகெங்கிலும் உள்ள எல்லா ஊடகங்களிலும், தொடர்புச் சாதனங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஸ்டைல் என்ற பெயரில் அணிவதற்கு வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாப், அதன் சிறப்புகள், அதை அணிவதால் எனக்குக் கிடைத்ததுபோல, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, சந்தோஷம் ஆகியன பற்றி பெண்கள் அறிந்து கொள்வதற்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் சொல்வேன். விடுதலையின் குறியீடாக எனக்கு நேற்றுவரை பிகினி இருந்தது. ஆனால் உண்மையில் என் ஆன்மிகத்திலிருந்தும், மரியாதைக்குரிய ஒரு மனுஷி என்பதிலிருந்தும் தான் அது என்னை விடுவித்திருந்தது. சௌத் பீச்சில் என் பிகினியையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையும் கண்ணியமும் உள்ள ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதிலும்தான் எனக்கு அதிக மகிழ்ச்சி இருக்கிறது. அதனால்தான் நான் நிகாப் அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என்னைவிட்டுப் பிரிக்க முடியாத அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் செய்வேன். இன்று,பெண் விடுதலையின் புதிய குறியீடு நிகாப்தான். ஹிஜாப் கொடுக்கும் இஸ்லாமிய கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்முறையைத் தேர்வு செய்யும் பெண்களுக்கு நான் சொல்வது இதுதான்: நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை.