Wednesday, January 30, 2008

ஒற்றுமைக்கு வழிகாட்டும் சாவேஸ்!

அமெரிக்காவின் ஏகாதிபத்தியச் செயல்பாடுகளுக்கு தனிப்பெரும் எதிராளியாகச் சிறிது சிறிதாக மாறி வருகிறார் வெனிசுவேலா அதிபர் ஹியூகோ சாவேஸ். நிகாரகுவா, பொலிவியா, கியூபா, டொமினிக் குடியரசு ஆகிய நாடுகளுடனான உச்சி மாநாட்டில் US ஆதிக்கத்தில் செயல்பட்டு வரும் உலக வர்த்தக வங்கிக்கு மாற்றாக, அமெரிக்கக் கண்டத்திற்கான பொலிவேரியன் மாற்று (Bolivarian Alternative for the Americas) என்ற பெயரில் வர்த்தக வங்கி ஒன்றைத் தொடங்க இருப்பதாக அறிவித்த சாவேஸ், உச்சி மாநாட்டிற்குப் பின் அமெரிக்க ஏகாதிபத்திய செயல்பாடுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இவ்வுச்சி மாநாட்டில் கலந்துக் கொண்ட நாடுகளுக்கிடையில் இணைந்து இராணுவ அமைப்பு ஒன்றையும் நிறுவுவதாக அறிவித்துள்ளார்.
"இந்த இராணுவ கூட்டமைப்பில் உள்ள ஏதாவது ஒரு நாட்டின் மீதான ஆக்ரமிப்பை எங்கள் அனைத்து நாடுகளின் மீதான ஆக்ரமிப்பாக நாங்கள் காண்போம். அதனை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்து நிற்போம். அன்றும் இன்றும் எங்கள் எதிரி ஒன்றே; அது US ஏகாதிபத்தியம் மட்டுமே. மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளை US தனது ஏகாதிபத்தியம் மூலம் அடிமைப் படுத்த நினைக்கிறது. ஆனால் அதை நாங்கள் ஒருபோதும் நடக்க அனுமதிக்கமாட்டோம்" என்றும் அவர் மேலும் அறிவித்தார்.

சாவேஸின் இந்த அறிவிப்பு அமெரிக்காவின் தனி ஆவர்த்தனத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது.

Sunday, January 27, 2008

ஹிட்லர், சாவர்க்கர், மோடி!

விளிம்பு நிலை மக்களுக்காகத் தன்னுடைய எழுத்துப்பணியை அர்ப்பணித்த பிரபல எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி, குஜராத் படுகொலைகளுக்குப் பின், அகதி முகாம்களில் தங்கியிருந்த இஸ்லாமிய மக்களை மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லக் கட்டாயப்படுத்திய குஜராத் அரசை எதிர்த்து இப்படிக் கூறினார். ''எனக்கு நீரிழிவு நோய் மட்டும் இல்லையென்றால் இந்தத் தள்ளாத வயதில், ''மோடிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து மரணமடையவே விரும்புவேன்'' என்று கொடூரங்கள் அரங்கேறிய 2002லில் அகமதாபாத்தில் துணிச்சலாகக் கூறினார்.
இவரைப் போன்ற பல எழுத்தாளர்கள், தங்கள் கண்டனங்களையும், குஜராத்தில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு, நரேந்திர மோடி சொன்ன, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் எதிர்வினை அல்ல என்பதையும், அது மோடியால் தயாரிக்கப்பட்ட இன அழித்தொழிப்பின் 'ஸ்கிரிப்ட்தான் என்பதையும் பட்டவர்த்தனாமாக அம்பலப்படுத்தினார்கள். ஆனால், இவை யாவும் அன்றைய பா.ஜ.க. அரசால் திட்டமிட்டு பரப்பட்ட இஸ்லாமிய விரோத அரசியலாலும், அதனால் உந்தப்பட்ட பெரும்பான்மை உயர்சாதி ஊடகங்களாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பது நடுநிலையார்கள் அறிந்ததுதான்.
அருண்ஷோரி, குருமூர்த்தி, சோ, நைபால் போன்றவர்கள், குஜராத்தில் நடந்தது ஒரு மதக்கலவரம்... அதற்கும் முதல்வர் மோடிக்கும், அவருடைய அரசுக்கும் எந்த சம்மந்தமுமில்லை.... கோத்ராவில் ராமபக்தர்களை, இஸ்லாமியர்கள் ரயில்பெட்டிக்குள் அடைத்து தீ வைத்து கொன்றதால் ஏற்பட்ட இந்துக்களின் பதில் தாக்குதல்தான் என்று, திரும்பத் திரும்ப எழுதினார்கள். பேசினார்கள். ஆனால் இதே, ஆக்ஷன் ரீ-ஆக்ஷன் வாதத்தை, மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கோ, கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கோ இவர்கள் கூறவில்லை. இதை யாரும் கேட்கவில்லை என்பதும் உண்மை.
எட்டு நூற்றாண்டுகள் சிறுபான்மையினரான முகலாயர்கள் நம் நாட்டை ஆண்டு வந்தபோது, எதிர்த்துக் கலவரம் செய்யாத இந்துக்கள், இந்துக்களே ஆட்சி செய்யும் சுதந்திரத்திற்குப் பின்னான காலகட்டத்தில் இசுலாமியர்களைத் திட்டமிட்டு அழிக்க வேண்டிய நோக்கமென்ன? 14 சதவீதமான இஸ்லாமியர்கள், இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவார்கள் என்று இந்துத்துவவாதிகள் பரப்பும் கருத்துக்கு உண்மைத் தன்மை உள்ளதா? மதம் மாற்றுகிறார்கள் என்று ஒரு பக்கம் கூறிக்கொண்டு இன்னொருபுறம் 80 சதவீத இந்துக்கள் வாழும் நாடு என்றும் பேசி வரும் சங் பரிவார்களின் திட்டம்தான் என்ன?
ஆர்.எஸ்.எஸ். தலைமை நாக்பூரில் இருந்தாலும், அதன் தத்துவ பரிசோதனையை மிகப் பெரிய அளவில் செய்து பார்த்த சோதனைக்கூடம் குஜராத். குஜராத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். காயமடைந்தவர்கள் ஐயாயிரத்துக்கும் மேல், சொத்துக்களை இழந்தவர்கள் ஏழாயிரம்பேர். நிம்மதியை இழந்தவர்கள் ஒட்டு மொத்த குஜராத் வாழ் அப்பாவிகள். குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சியில், இஸ்லாமியர்கள் தங்கள் அடையாளங்களை இழந்து இந்துக்களோடு இணைந்து வாழ வேண்டுமென்று, தனது ஆட்சியில் புதுப்புது சட்டங்களை கொண்டு வந்தார் மோடி. தங்களது மத, கலாச்சார விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளாத இஸ்லாமியர்கள், தங்களது தனித்தன்மையை விட்டு கொடுக்க முன்வரவில்லை. அவர்களுக்கு வந்த துணிச்சலுக்கு காரணம், இந்திய அரசியல் சட்டம்தாதன் என நம்பினார்கள். ஆனால், இந்தியாவில் செயல்படுத்தப்படும் மதச்சார்பற்ற சட்டங்கள், தான் ஆட்சி செய்யும் குஜராத்திற்குள் நுழைய முடியாது என்பதற்கு, உதாரணம் காட்டுவதற்குதான் 'கோத்ரா' என்ற ரயில் எரிப்பு சம்பவத்தின் மூலம், சங் பரிவார் கற்றுக் கொடுத்த இன அழித்தொழிப்பு பரிசோதனையை செய்து பார்த்தார். அதில் வெற்றியும் பெற்றார்.ஆனால், திரை மறைவில் நடந்த விஷயங்களை மறைத்து, ஆக்ஷன் ரீ ஆக்ஷன் என்ற கருத்து பொதிந்த சென்டிமென்டான நாடகத்தை அரங்கேற்றி, சங்பரிவார் அமைப்புக்குள் ஹீரோவாகவும், பொதுமக்களின் பார்வையில் அப்பாவியாகவும் காட்சி தந்தார் மோடி. குஜராத் கலவரத்தில் தலைமை தாங்கி நர வேட்டையாடியதே மோடிதான் என்பதை எத்தனையோ நடுநிலையாளர்கள் எடுத்துக் காட்டியும் பெரும்பாலனவர்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை.ஹிட்லரை ரோல் மாடலாக எடுத்துக்கொண்ட சாவர்க்கரின் கொள்கைகளை அடியொற்றுகிற, தீண்டாமையை கட்டிக் காக்கின்ற, உழைப்பாளி மக்களை சுரண்டுகின்ற, இனக்குழுக்கள் அனைத்தையும் இந்து என்கின்ற ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டு வர நினைக்கின்ற, விஞ்ஞானப்பூர்வமாக சிந்திக்கக் கூடாது என்று அறிவுறுத்துகிற ஒரு அமைப்பின் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு குஜராத் ஒரு எடுத்துக்காட்டு.குஜராத் கலவரத்துக்கு காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க..வை குற்றம் சாட்டியபோது, 1984ல் டெல்லியில் நடந்த சீக்கியப் படுகொலைகளுக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று கூறி, தாங்கள் செய்த படுகொலைகளை நியாயப்படுத்தியது பா.ஜ.க..சமீபத்தில் யமுனா ராஜேந்திரன் என்ற ஆய்வு எழுத்தாளர் எழுதிய கட்டுரையொன்றில் குஜராத் சம்பவம் எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதை விவரித்திருந்தார். அதில், "கலவரம் துவங்குவதற்கு முன்பாகவே இந்துக்களின் வீடுகளில் காவிக்கொடி அடையாளம் வைத்து, இஸ்லாமியர் வீடுகளை விலக்கி வைத்து காட்டினார்கள் பஜ்ரங்தள் தொண்டர்கள். சபர்மதி எக்ஸ்பிரஸ் தாக்குதல் சம்பவம் வருவதற்கு முன் இந்துத்துவவாதிகள் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கு ரெடியாகிவிட்டார்கள்" என்று கூறுகிறார்.
பல உண்மை அறியும் குழுக்களும், வாக்காளர் பட்டியல், ரேஷன்கடை அட்டவணை இவைகளைப் பார்த்து தெரிந்து கொண்ட பின்புதான், இஸ்லாமியர்களைச் சரியாக அடையாளம் கண்டு கொன்றார்கள். இதற்கு குஜராத் அரசிலுள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்று அறிக்கைகள் வெளியிட்டன.பல இஸ்லாமிய வர்த்தக நிறுவனங்கள் இஸலாமியப் பெயரில் இல்லாமல், பொதுவான பெயர்களிலும், இந்துப் பெயர்களில் செயல்பட்டு வந்தாலும், அதைச் சரியாகக் கண்டு பிடித்து சங்பரிவார் தொண்டர்கள் அழித்தார்கள் என்று பத்திரிக்கையாளர்கள் எழுதினார்கள். எவ்வளவு தெளிவான திட்டம்.அரசும், காவல்துறையும், இன அழித்தொழிப்பில் தீவிரமாக ஈடுபட்ட அமைப்புகளும் இணைந்து நடத்திய குஜராத் வெறியாட்டத்தில் மொத்தம் இறந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மூவாயிரம் என சில அமைப்புகள் கணக்கு சொன்னாலும், வெளியில் வராமல் அமுங்கிப் போன உண்மைகள் ஏராளம்.இன மோதல், அல்லது இன அழித்தொழிப்பு இவைகளை உருவாக்கி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டுமென்ற கான்சப்டில்தான், 'ஷாகா' கற்றுக்கொடுக்கும் அமைப்பாக இருந்த சங் பரிவார், பா.ஜ.க. என்ற அரசியல் பிரிவை 1980ல் துவங்கியது. வி.ஹெச்.பி. பஜ்ரங்தள் ஆகியவை கலவரங்களை உருவாக்கும். ஆர்.எஸ்.எஸ். நேரடி களப்பணியில் இறங்கும். அதற்கு பின் பா.ஜ.க. அதை வைத்து அரசியல் செய்யும். 1990ல் ரத யாத்திரையை சோமநாதபுரத்தில் துவங்கி வட இந்தியா முழுவதும் சென்றார் அத்வானி. ரதம் கடந்து சென்ற பாதையெங்கும் இஸ்லாமியப் பிணங்களாக விழுந்தன. அதன் உச்சபட்சமாக 1992ல் அயோத்யாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதே நாளில் மகராஷ்டிராவில் பா.ஜ.க. சிவசேனா, போலீஸ் கூட்டணியால் 2000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு அடுத்த வருடம் ஜனவரி 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இந்து முஸ்லீம் கலவரம் வெடித்தது. இதிலும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதனால் கோபமுற்று, பீதியடைந்து, தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், தங்களைப் பார்த்து சங்பரிவார அமைப்புகள் அச்சப்படவும், பாகிஸ்தான் உதவியோடு குண்டுவெடிப்பை மும்பையில் நிகழ்த்தினார்கள். இதில் சம்மந்தப்பட்ட பெரும்பாலானவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு வழங்கு நடந்து, சமீபத்தில் தண்டனையும் வழங்கப்பட்டது. இதில் பல அப்பாவிகளும் அடக்கம் என்பது ஒரு பக்கமிருந்தாலும், இதுபோன்ற வழக்கு, கைது, விசாரணை, தண்டனை எதுவும், மும்பையில் இஸ்லாமியர்களை கொன்றவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது இன்றுவரை நிதர்சனமான உண்மை.கோவையிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அங்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தை போலீஸ்தான் துவக்கியது என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஏற்கனவே பா.ஜ.க.வின் ஆயுத பேர ஊழலில் பா.ஜ.க தலைவர்கள் பணம் வாங்கிய விவகாரத்தை வீடியோ மூலம் அம்பலப்படுத்திய தெஹல்காதான், இன்று கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் இந்துக்களைக் கொலை செய்யச் சொன்னது மோடிதான் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இதை மறுக்க முடியாத பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான ரவிசங்கர், தெஹல்கா எப்போதும் பா.ஜ.க.வை மட்டுமே புலனாய்வு செய்கிறது. காங்கிரஸ் கட்சியின் அட்டூழியங்களை புலனாய்வு செய்வதில்லை என்று தன் தரப்பை மறுக்க முடியாமல், மற்ற கட்சியிலும் தவறுகள் நடப்பதுபோல் குற்றம்சாட்டியுள்ளார். நீயும் செஞ்சே, நானும் செஞ்சேன் என்பதுபோல்.வருணதர்மத்தை, எந்த ஆட்சி நடந்தாலும் கட்டிக்காக்கும் உயர்சாதி அரசு அதிகாரிகளைக் கொண்ட மாநிலங்களில் முதன்மையானது குஜராத். கடந்த பல ஆண்டுகளாக காவல்துறை பதவிகளிலிருந்து, சிவில் நிறுவனப்பதவிகள், முடிவெடுக்கும் அதிகார மையங்களில் இஸ்லாமிய, தலித் அதிகாரிகளும், அறிவாளிகளும் ஓரம் கட்டப்பட்டு இருக்கிறார்கள். இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடத்தப்பட்ட அமெரிக்காவிலும் இஸ்லாமிய அடிப்படைவாதிளின் தாக்குதல் பீதியுள்ள ஐரோப்பிய நாடுகளிலும்கூட, அங்கு வாழும் இஸ்லாமியர்களுக்கு சகல உரிமைகளும், வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் இது மிகவும் குறைவு. தெஹல்கா வார இதழின் நிருபர் ஆஷிஸ் கேத்தான் ஆறு மாத காலம் குஜராத்திலுள்ள சங் பரிவார் அமைப்புகளோடு ஒன்றி கோத்ராவில் இந்துக்களை எரித்தது, இந்து வெறியர்கள் என்பதை பல்வேறு விதமான வாக்குமூலங்கள் மூலம் பதிவு செய்துள்ளார்.இந்தியாவிலுள்ள நடுநிலையாளர்களும் மனிதாபிமானமிக்கவர்களும், பல்வேறு உண்மை அறியும் குழுக்களும் கடந்த ஐந்து வருடங்களில் உரத்துக் கூறிய விஷயங்களை, மோடியின் சிஷ்யர்கள் வாக்குமூலமாகக் கொடுத்ததை வீடியோவில் பதிவு செய்து மோடியின் முகத்திரையை கிழித்துள்ளது தெஹல்கா. இதை ஜந்து வருடங்களுக்கு முன்பே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முழுக்க முழுக்க மோடியின் ஆலோசனைகளின் பேரில் வி.ஹெச்.பியும், பஜ்ரங்தள்ளும் செய்த சதி என்பதும் அதை வைத்து மூன்று நாட்களில் எவ்வளவு இஸ்லாமியர்களை கொல்ல முடியுமோ கொல்லுங்கள் என்று அரசு உத்தரவிட்டதின் வெளிப்பாடுதான் என்பதை ஆதாரப்பூர்வமாக பெங்களுரைச் சேர்ந்த ரூத்மனோரமா, டெல்லியைச் சேர்ந்த ஷயதா ஹமீது, அகமதாபாத் பராக் நத்வி, ஷீபா ஜார்ஜ், மாரிதெக்காரா போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் 10 நாட்கள் குஜராத்திலுள்ள அகதி முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு அறிக்கையாக வெளியிட்டார்கள். அதில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் எந்தவொரு காட்டுமிராண்டி தேசத்திலும் நடந்திராதது என்று குறிப்பிட்டார்கள்.அகமதாபாத், கோத்ரா, வதோத்ரா, சபர்காந்த், பாஞ்ச் மகால் ஆகிய நகரம், கிராமம் சார்ந்த பகுதிகளில் நடந்த கொடூரங்களில் பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்ட கற்பழிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிறுவர் சிறுமிகளிடமும் கொடூரங்களைப் புரிவதற்கு உதவிய, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் காவல்துறையினரிடம், அடியாட்களாக பயன்படுத்தபட்ட பழங்குடி மக்களின் தலைவர்களிடம் பேசி கருத்துக்களை பதிவு செய்தனர். இந்தக் குழுவினர் 100 பக்கமுள்ள அவர்களுடைய அறிக்கையில் சுருக்கமாக சொல்லப்பட்ட காரணிகள், வன்முறைகள் தனனெழுச்சியாக நடந்ததாகத் தெரியவில்லை.

யாரைத் தாக்குவது என்பது முன்கூட்டியே திட்டமிட்டுத் துல்லியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டதற்கு அழுத்தமான ஆதாரங்கள் உள்ளன. இவை மிகவும் குறைவாக வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது. இவற்றின் அளவும் விரிவும் கிராமப்புறங்கள், நகரங்கள் இரண்டிலும் ஏகமாக நடந்துள்ளன. நிவாரண முகாம்களிலும் அடைக்கலமாயிருக்கும் பெண்களும், சிறு மற்றும் பெரும் கூட்டத்தினரால் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். மிருகத்தனமாகக் கற்பழிப்பு செய்யப்பட்ட பெண்கள் கடைசியில் நெருப்பில் எரிக்கப்பட்டார்கள். பெண்கள் மீதான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டதில் அரசும், போலீசும் பகிரங்கமாகத் துணை போயிருக்கின்றன.

குஜராத்தி மொழி பத்திரிக்கைகள் சிலவும் உண்மைகளை மறைத்து, இஸ்லாமியர்கள் அதிகமாகக் கொல்லப்படுவதற்கு ஏதுவாக செய்திகளை வெளியிட்டார்கள். இது முழுக்கவும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஆதரவில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்தனர் இந்த பெண்கள் குழுவினர். அதை அந்தக் காலகட்டத்தில் பா.ஜ.க அரசுக்கு பயந்து கொண்டு எந்த ஊடகங்களும் வெளிப்படுத்தவில்லை.நடந்துவிட்ட கொடூரத்தின் உண்மையை எத்தனை முறை நிரூபிக்க வேண்டியுள்ளது. பத்து வருடங்களுக்கு முன் இந்து முனனணித் தலைவர் ராம கோபாலன், ஆர்.எஸ்.எஸ் வெளியிட்ட, "முஸ்லிம்களால் இந்தியாவுக்கு ஆபத்தா"? என்ற புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.அதில் இந்தியாவில் இந்து ஆட்சி அமைய ஸ்பெயின் நாட்டில் எப்படி கிறிஸ்தவர்களால், இஸ்லாமியாகள் கொல்லப்பட்டு, வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கர்ப்பிணிகள், குழந்தைகள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார்களோ, அது போல் இந்தியாவில் நிகழ வேண்டும் என்று தெளிவாக எழுதியிருந்தார்.அதைத்தான் குஜராத்தில் செய்தார் மோடி. சுப்ரீம் கோர்ட்டுக்கு சாமானியன் மனு அனுப்பினாலே அதை வழக்காகப் பதிவு செய்துவிடுவோம் என்று கூறும் நீதித்துறை... அவசியமான வழக்குகளில் விடுமுறையிலும் தீர்ப்பு சொல்லும் நீதித்துறை... குஜராத் கொடூரங்களின் சூத்திரதாரி மோடி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?


-சே குவேரா.

நன்றி: நக்கீரன் இணைய இதழ்

Friday, January 25, 2008

அமெரிக்கா படிப்பினைப் பெறுமா?

வீழ்ச்சி அடைந்த பேரரசுகள்
உலக வறலாற்றில் பல்வேறு பேரரசுகள் பல்வேறு காலக் கட்டங்களில் ஆதிக்கம் செலுத்திச் சென்றுள்ளன. எந்த ஒரு இராஜியமும் தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள இயலாமல் போனதுதான் யதார்த்தமான நிலையாகும். ரோமப் பேரரசு, பாரசீகப் பேரரசு, கிரேக்கப் பேரரசு, பிரித்தானியப் பேரரசு, உஸ்மானியப் பேரரசு உட்பட எல்லா இராஜியங்களும் ஒரு காலக் கட்டத்திற்க்குள் வீழ்ச்சியை எட்டுவிட்டன.
பொதுவாக வரலாற்றில் நாம் அறிய வரும் உண்மை என்னவென்றால் மனிதர்களுக்கு ஆற்றலை பிரயோகித்து வெற்றி கிட்டக்கூடிய சந்தர்ப்பங்களில் எல்லாம் தன் சக்தியை துஷ்பிரயோகம் செய்து வரூவதைக் கண்டு வருகின்றோம். மேலும் அதற்தான பிரதி பலன்களை அடையக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வாய்ப்பினும் கூட அதிலிருந்து படிப்பினை பெறுவதை விட்டும் மனிதன் தவறிவிடுகின்றான். அவற்றின் சரித்திர புருஷர்கள் இல்லாதிருப்பினும் கூட அவர்கள் விட்டுச்சென்ற காலச்சுவடுகளும் அதிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகளும் ஏராளம் ஏராளம். இத்தகைய படிப்பினைகளில் திருந்தாதவர்கள் அடையக் கூடிய இழிவு காலத்தின் கட்டாயம் ஆகும். அந்த வரிசையில் தலையாய இடம் பெற்றறுள்ள ஒரு நாடுதான் அமெரிக்காவாகும். இது இன்று பெற்றிருக்கும் அபரிதமான ஆற்றலைப் போன்று ஒவ்வொரு காலக் கட்டத்திலும் சில நாடுகள் பெற்றிருந்தன. அதை கொண்டு பல நாடுகளை அடிமைப்படுத்தி ஆட்சியும் செய்தன. ஒரு காலக்கட்டத்தில் அவைகள் வலுவிழந்து வீழ்ச்சியை அடைந்தன. தங்கள் வல்லாதிக்கத்தின் மூலம் வரலாற்றைப் புரட்டிப்போட்ட இராஜியங்கள் சரிந்துப்போன சரித்திரத்தையும் அதிலிருந்து பெறப்படும் பாடங்களையும் பார்ப்போம். இதன் மூலம் படிப்பினை பெறாவிட்டால் அமெரிக்கா அடையும் நிலையைப் பற்றி, காலம் நமக்கு ஒரு தெளிவான பதிலை கொடுக்கும்.
ஐரோப்பிய வெள்ளையர்களும் அமெரிக்கர்களும் நாடுகளினால் வேறுப் பட்டிருப்பினும் அவர்களின் நிறங்களிலும் குண நலன்களில் பெருத்த வித்தியாசம் காணப்படவில்லை. ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் குடியேறியதன் மூலம் அமெரிக்கர்களாயினர். ஐரோப்பியர்களின் நிற வெறி மற்றும் சுயநலப்போக்கை குறிப்பிடும்போது அது அமெரிக்காவை இணைத்துக் கூறப்பட்டதாகவே எடுத்து கொள்ள வேண்டும்.
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜியத்திற்கு சொந்தக்காரர்கள் என்று மார்த்தட்டியவர்களின் இன்றைய நிலை
பத்தொன்பதாம் நூற்றாண்டைப் பொறுத்த வரை உலகின் பெரும் பகுதி பிரிட்டானியர்களின் கையில் இருந்தது. இவர்களின் இராஜியத்தின் எதாவது ஒரு பகுதியில் சூரியன் உதித்துக் கொண்டிருப்பதை பெருமையாக பறைசாற்றிக் கொண்டு இருந்தனர். வியாபாரத்தின் மூலமாகவும் மார்க்கத்தை போதிக்கவும் வந்ததாக முதலில் ஒரு நாட்டில் நுழையும் இவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாட்டை ஆக்கிரமித்து அங்குள்ள பிரிவினரிடையே பகைமையைப் ஊதிப் பெரிதாக்கி தங்கள் ஆதாயத்தை அடைந்துக் கொள்வார்கள்.
இவர்களைப் பற்றி ஒரு ஆப்ரிக்க கவிஞன் சொன்னான்வெள்ளையர்கள் எங்கள் நாட்டிற்கு வந்த போது'நாடு' எங்கள் கையில் இருந்தது. 'பைபில்' அவர்கள் கையில் இருந்ததுஅவர்கள் கண்ணை மூடி ஜபம் செய்வது எப்படி என்றுச்சொல்லிக்கொடுத்தார்கள். நாங்கள் கண்ணை மூடி ஜபம் செய்தோம்பிறகு கண்ணை திறந்து பார்த்தபோது எங்கள் கையில் பைபில் இருந்ததுஅவர்கள் கையில் நாடு இருந்தது
'கிழக்கும் மேற்கும்' என்ற தனது பயணப் புத்தகத்தில் விவேகானந்தர் பின் வருமாறு இவர்களைப்பற்றி குறிப்பிடுகின்றார்.
இஸ்லாம் எங்கெல்லாம் சென்றதோ அங்குள்ள மக்களை அரவணைத்து வாழ்வளித்ததுகிருஸ்துவம் எங்கெல்லாம் சென்றதோ அங்குள்ள பூர்வ குடிகளை இல்லாதொழித்தது
இந்த கருத்து உண்மையில் மிகைப்படுத்திச் சொல்லப்பட்டதல்ல. வெளிப்படையாக இவர்களின் குணங்களை தோலுரித்துக் காட்டும் மேற்கோளாகும்.
கொலம்பஸ் 1492-ம் ஆண்டு அமெரிக்காவை கண்டுப்பிடித்தவுடன் அசுர வேகத்தில் ஐரோப்பிய நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்கள் காலனிகளை அமைத்து அமெரிக்காவின் வளங்களை சுரண்ட ஆரம்பித்தன. அதில் பிரிட்டன் மாத்திரம் 13 காலனிகளை அமைத்து தன் ஆதிக்கத்தை விஸ்தீரனப் படுத்தியது. பிரிட்டனும் மற்றும் ஆக்கிரமித்த ஐரோப்பிய நாடுகளும் மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களை மனிதாபிமானமின்றி கொன்றுக் குவித்து அவர்களின் குறுதிக் கறை படிந்த மண்ணில் ஆப்பிரிக்க நீக்ரோக்களை அடிமைகளாக பிடித்துச் சென்று புதிய அமெரிக்காவை நிர்மாணித்ததை அறிவிக்கும் வரலாற்று குறிப்புகள் நமக்கு மிக அண்மையில்தான் இருக்கின்றது.
ஒரு கோடிக்கும் அதிகமான ஆப்பிரிக்க மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்ட அடிமைகளாக இவர்களினால் இழுத்துச் செல்லப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டனர். இவர்கள் நீக்ரோக்களை கொத்தடிமைகளாக படுத்தியபாடு மனிதநேயமிக்கவர்களின் உள்ளங்களை கரையச்செய்யும் நிகழ்வுகளாகும். Tony Morisan என்பவர் அமெரிக்காவின் புகழ் பெற்ற எழுத்தாளர். இவர் 1993 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றவர். இவருக்கு Plidzer பரிசை 1987-ம் ஆண்டு பெற்றுத் தந்து உலக அளவில் பிரபல்யத்தை ஏற்படுத்தித் தந்த Beloved என்ற தன்னுடைய நாவலில் வறலாற்றுச் சான்றுகளுடன் நீக்ரோக்களின் அடிமை வாழ்வையும் அவர்கள் அடைந்த துயரங்களையும் பட்டியல் போட்டு விளக்கியிருந்தார். மனிதர்களை மிருகங்களை விட மோசமாக நடத்திய நிறவெறிப் போக்கு இன்று வரை எதாவது ஒரு வழியில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது. மனித உரிமைக்காகவும் உலக அமைதிக்காகவும் மக்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதை கண்டு வருகின்றோம். சங்கிலியால் விலங்கிட்டு மக்களை மாக்களாய் நடத்திய மனித நேயத்தைத்தான் கட்டுரையின் ஆரம்ப புகைப்படம் விளக்குகின்றது.
பிரித்தானியப் பேரரசின் நிலைசூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜியத்திற்கு நாங்கள் சொந்தக்காரர்கள் என்று மார்த்தட்டிய பிரித்தானியப் பேரரசின் நிலை இன்று என்ன ஆனது என்பதை நம் கண்கூடான காண்கிறோம். அமெரிக்க கண்டத்தில் அமைத்த 13 காலனிகளும் ஆப்பிரிக்க கண்டத்தின் எல்லாக் காலனிகளும் கையை விட்டுச் சென்றது. இந்தியா சுதந்திரம் பெற்றது. மூலை முடுக்கெல்லாம் இருந்த ஆதிக்கங்கள் விடைப் பெற்று சென்றன. உலகம் முழுதும் இருந்த அவர்களின் இராஜியங்கள் அஸ்தமித்து தங்கள் சொந்த இராஜியத்தில் அஸ்தமனம் கண்ட மோசமான நிலையை அடைந்ததை நாம் கண்டுவருகின்றோம். உலகத்தில் மிக அதிக அளவில் தங்கம் மற்றும் பிளாட்டினம் கிடைக்கும் தென் ஆப்ரிக்காவின் மீது தீராத மோகம் கொண்ட இவர்களின் ஆளுமை நீடித்ததா என்றால் நிச்சயமாக இல்லை. கென்யாவில் இவர்களுக்கு எதிராக நடைப்பெறும் சம்பவங்கள் அனைத்தும் இவர்களின் காலனி ஆதிக்கம் ஒழிந்து அதற்கு முடிவு கட்டும் சம்பவங்கள் நிறைய அரங்கேறிவரும் காட்சியைக் காண்கின்றோம். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டிய கருப்பின மக்கள், அரியணை ஏறிய நிகழ்ச்சி இவர்களின் ஆட்டங்கள் விடைப்பெறும் சந்தர்ப்பத்தை எட்டி விட்டன என்பதை சொல்லாமல் சொல்லுகின்றன. ஆனால் இன்று என்ன நிலை என்றால் வெள்ளையர்கள் வாழும் நிலை இக்கட்டாகிப்போனது. வெள்ளையர்கள் தங்கள் உடல் தோலின் நிறத்தை நீக்ரோக்களைப் போன்று வேதியல் முறையில் கருப்பாக மாற்றிக்கொண்டு வரும் செய்தியை அறிய வந்தபோது இவர்களின் நிலை பல் பிடுங்கப்பட்ட பாம்பின் நிலையை அடைந்துவிட்டதை இந்த உலகம் உணர்ந்துக்கொண்டது. 1997-ஆம் ஆண்டு ஹாங்காங் கையை விட்டுபோன போது இளவரசர் சார்லஸினால் கண்கலங்க முடிந்ததே தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. ஜிப்ரால்டரை மீட்க ஸ்பெயினும் போக்லாந்து தீவை மீட்க அர்ஜெக்டினாவும் தொல்லைகளை கொடுக்கின்றன. பரந்து விரிந்த பேரரசு மாத்திரம் கையை விட்டுச்செல்லவில்லை. மாறாக அவர்களின் சொந்த நாட்டில் பிரச்சினை ஆரம்பம் ஆகியது.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து, இவை நான்கும் இணைந்து உண்டாக்கப்பட்ட ஒருங்கினைந்த ஒரு அமைப்புத்தான் கிரேட் பிரிட்டன் என்பதாகும். தற்போது இவைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள குரோத மனப்பான்மையும் இவைகள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு தனிநாடு கேட்கக்கூடிய நிலை நிச்சயமாக எந்த ஒன்றும் நடக்க சாத்தியமானது என்பதை நமக்கு தெளிவாக்குகின்றது. 1977-ஆம் ஆண்டு அயர்லாந்தை தன் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் கத்தோலிக்கர்களுக்கும் புரொடஸ்டன்ட்களுக்கும் தீராத பகை ஏற்பட்டு இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் குண்டு மழை பொழிய ஆரம்பித்து. 1999-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து தனி பாராளுமன்றமும் வேல்ஸ் தனி சட்ட மன்றமும் அமைத்து தன்னதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டதன் மூலம் ஐக்கிய முடியாச்சி (UNITED KINGDOM) முடிவுறும் நிலையை எட்டியுள்ளது. பழைய புகழ் பேசி பெருமூச்சி விடும் நிலைக்கு தள்ளப்பட்டது அதற்கு காலம் கொடுத்த பரிசாகும். இந்த நிலையை நோக்கி அமெரிக்கா சென்றுக் கொண்டிருக்கின்றது என்றுச் சொன்னால் மிகையாகாது.
ஐக்கிய ரஷ்ய பொதுவுடமை குடியரசு (USSR)இருபதாம் நூற்றாண்டில் கொடிக்கட்டி பறந்த சாம்ராஜியம் ஐக்கிய ரஷ்ய பொதுவுடமை குடியரசு (USSR). பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை ஜார் மன்னர்களினால் சொல்ல முடியாத துயரங்களை அடைந்த மக்கள் காரல்மார்க்ஸின் கொள்கையினால் ஈர்க்கப்பட்டனர். 1917-ஆம் ஆண்டு லெனின் ஆட்சியைப் கைப்பற்றுகின்றார். 1924ல் லெனின் இறந்ததன் பிறகு ஆட்சி கட்டிலில் அமர்ந்த ஜேசப் ஸ்டாலின் ஒரு கொள்கையை கடைப்பிடித்தார். அதுதான் நாடுபிடிக்கும் கொள்கை. 1924 லிருந்து 1953 வரை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ஸ்டாலின் அண்டை நாடுகள் பலவற்றை பிடிப்பதையே தம் பிரதானக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். அதன் விளைவாக அவர் தன் 29 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியில் பிடித்த நாடுகள் ஒன்றல்ல இரண்டல்ல ''பதினைந்து'' நாடுகளாகும்.
நாடுபிடிக்கும் இராணுவ வீரர்களுக்கு தேவையான உணவு மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்காக நாட்டு மக்களை கசக்கி பிழிந்து எண்ணற்ற துயரங்களுக்கு ஆளாக்கினார். கூட்டுப்பண்ணை முறையில் விவசாயிகளிடமிருந்து விளைப்பொருட்களை பலவந்தமாக எடுத்து லட்சக்கணக்கான பேர்களைக் கொன்று குவித்தார். இல்வாறு பரந்து விரிந்துச்சென்ற இந்த சாம்ராஜியம் 1991-ஆம் ஆண்டு ஒரு முடிவுக்கு வந்தது. கம்யூனிசம் உடைந்தது. கஜகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், தாஜிஸ்தான், உக்ரைன், லிதுவேனியா, அஸர்பைஜான், எஸ்டோனியா, போன்ற 15 சுதந்திரக் குடியரசு நாடுகள் சுதந்திரப் பிரகடனம் செய்து தனி குடியரசை அமைத்துக் கொண்டன. நாட்டில் இருந்த ஆயிரக்கணக்கான ஸ்டாலினின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. தங்கள் 70 ஆண்டு காலத்தில் பிடித்த அனைத்து நாடுகளும் குறுகிய காலத்தில் கையை விட்டு சென்றதை அவர்களினால் பார்த்துக் கொண்டுதான் இருக்க முடிந்தது. கட்டி ஆண்டவர்கள் கையைக் கட்டிக் கொண்டு இருப்பதைத் தவிர வேறொன்றும் செய்யும் ஆற்றல் அவர்கள் பெற்றிருக்கவில்லை. நிச்சயமாக இதிலிருந்து கிடைக்கப்பெறும் பாடங்கள் ஏராளம்.
இந்திய தேசத்தை ஆட்சி செய்தவர்களின் நிலை
ஆசியாவின் துணைக்கண்டம் என்று அழைக்கப்டும் நம் இந்திய தேசத்தை எடுத்துக்கொள்வோம். எத்தனை பேரரசுகள் எத்தனை வம்சங்கள் கூறு போட்டு இதை ஆட்சி செய்தன. இருப்பினும் அனைத்தும் ஒரு காலக்கட்டத்தில் ஒளிர்ந்து பின்னர் எரி நட்சத்திரங்களைப் போன்று மின்னி மறைந்த வரலாறுகள் பாடங்கள் நிறைந்த அனுபவப் புத்தகங்கள். குப்தர்கள் வம்சம், மௌரிய வம்சம், இராஜ புத்திரர்கள், அடிமை வம்சம், சாலுக்கிய வம்சம், கில்ஜி வம்சம், முகலாயப் பேரரசு, விஜய நகரப் பேரரசு, ஹைதராபாத் நிஜாம்கள், ஆங்கிலேயர்கள், போர்ச்சிக்கீசியர்கள், தட்சுக்காரர்கள், பிரஞ்சுகாரர்கள், போன்ற எண்ணற்ற வர்க்கத்தினர் ஆட்சி செய்து முடிவெய்திச் சென்றனர். இத்தகையவர்களின் நிலைமையை சற்றே ஆராய்ந்து பார்ப்போமேயானால் நமக்கு அல்லாஹ்வுடைய வசனம் ஞாபகத்திற்கு வருகின்றது.

காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம் (அல்குர்ஆன் 3:140)
அல்லாஹ் காலச்சக்கரத்தை மாறி மாறி சுழல விடுகின்றான். கீழ் இருப்பவர்கள் மேல் வருவதும் மேலே இருப்பவர்கள் கீழ் நிலை அடைவதும் அல்லாஹ்வின் நியதி என்பதை அறிந்துக்கொள்ள முடிகின்றது.
இந்தியத் திருநாட்டைப் பலரும் ஆண்டிருப்பினும் கூட முகலாயர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் என்பதாலும் நீண்ட காலம் ஆண்ட அவர்கள் அடைந்த கடை நிலையை மட்டும் இந்த கட்டுரையின் நோக்கத்தை கருத்தில் கொண்டு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். 1525-ஆம் ஆண்டு பாபர் பானிபட்டில் இப்ராஹிம் லோடியை தோற்கடித்ததன் மூலம் முகலாயப் பேரரசை நிறுவுகின்றார். 5 ஆண்டுகளில் பாபர் மரணித்ததன் பின்னர் வரிசையாக ஹூமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஒளரங்கசிப் என்று வம்சா வழியாக பரந்து விரிந்த இந்த இராஜியம் 1857-ஆம் ஆண்டு மன்னர் இருக்கும் அரண்மனை மாத்திரமே மிஞ்சிய நிலையில் அதை சுத்தம் செய்யக்கூட ஆள் இல்லாத ஒரு நிலையை இரண்டாம் பகதூர்ஷா காலத்தில் அடைந்தது. மன்னர் ஆங்கிலேயர்களினால் கைது செய்யப்பட்டு இரங்கூன் சிறையிலடைக்கப்பட்ட போது முகலாய சாம்ராஜியம் ஒரு சூனியமான நிலைக்கு வந்தது என்பதை மிக அண்மைக்கால வரலாற்றில் பதிவாகியுள்ள ஒரு சான்றாகும். இந்த நிலை இன்று உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த அமெரிக்காவிற்கு நிகழாது என்று திட்டவட்டமாக கூற இயலுமா?.
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் கொலம்பஸினால் அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்ட ஆரம்பக் காலங்களில் மிக அதிக அளவிற்கு புதிய அமெரிக்க கண்டத்தில் காலனிகளை அமைத்த நாடுகள் பிரிட்டன் ஸ்பெயின், பிரான்சு, போர்ச்சுக்கல் மற்றும் நெதர்லாந்து(தச்சு) ஆகும். இன்று இவைகளின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு மாகாணம் கூட இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். தென் அமெரிக்க நாடுகளில் மிக அதிகமாக ஸ்பானிஷ் மொழி பேசி வருவது ஸ்பெயின் ஆட்சியின் தாக்கம்தான்.
சில காலக்கட்டங்களில் ஒன்றின் கை ஓங்கியிருப்பதும் சில காலக்கட்டங்களில் பலவீனப்பட்டிருப்பதும் உலக இயல்பாய் இருந்து வந்துள்ளதை வறலாற்றின் மூலம் அறிய முடிகின்றது. உலகை ஆண்டுச் சென்ற இராஜியங்களின் வீழ்ச்சியிலிருந்து இந்த அமெரிக்கா படிப்பினைப் பெற்றுள்ளதா என்றுச் சொன்னால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றுச் சொன்னால் அவை இன்று உலக அரங்கில் அரங்கேற்றம் செய்யும் எல்லா நடவடிக்கையும் நம்மை இந்த முடிவின் பக்கம் இட்டுச் செல்லுகின்றது. கடந்த நுற்றாண்டில் அமெரிக்காவின் செயல்பாடுகள் அனைத்தும் அதற்கு உலக அரங்கில் அதன் மீது ஒரு அதிருப்தியையும் கெட்ட பெயரையும் உண்டாக்கி இருப்பதை எவராலும் மறுக்க இயலாது. தேவையின்றி ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவதும் தங்கள் அடிவருடிகளைக் கொண்டு தங்களுக்கு சாதகமான முடிவுகளை ஆதாயப்படுத்திக் கொள்வதும் பல நாடுகளின் விவகாரங்களில் கண்டு வருகின்றோம். உலக நாடுகளின் ஒற்றுமையைக் குலைக்கும் நடவடிக்கையிலும் முக்கியமாக பிரித்தாளும் சூழ்ச்சியை நடைமுறைப் படுத்துவதிலும் முன்னனி வகிப்பதை காண முடிகின்றது.
எதிரியினுடைய எதிரி நண்பன் என்னும் சாணக்கிய மூளையுடன் தன் எதிரி நாடுகளின் உள் நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அந்த நாட்டின் ஆட்சியாளர்களின் அதிருப்தியாளர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு ஆதரவையும் ஆயுதங்களையும் அளித்து ஆட்சி கவிழ்ப்பையும் இன்னபிற குழப்பங்களையும் பதட்ட நிலையையும் ஏற்படுத்தி தங்கள் ஆயுத வியாபாரத்திற்கு தளம் அமைத்துக் கொள்ளுகின்றனர். உதாரணமாக ஈரானை அது எதிர்த்தபோது ஈராக்கிற்கு ஆயுத உதவி செய்தது. ஈராக் தன் கையை உதறி சென்ற போது அதன் மீது நியாயமான எந்த காரணமும் இன்றி போர் தொடுத்து தங்கள் கைக் கூலி படையை ஆட்சியில் அமர்த்தியுள்ளது. ரஷ்யாவை எதிர்க்க ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்த இந்த அமெரிக்கா, இன்று ஆப்கானிஸ்தானை பிடித்து தங்கள் அடிவருடிகளிடம் கொடுத்துள்ளதே இதற்கானச் சான்றுகளாகும். உலக நாடுகளின் ஒற்றுமையில் தன்னுடைய வீழ்ச்சி இருப்பதை உணர்ந்துக்கொண்ட இவர்கள் உலக ஒற்றுமையை குலைப்பதை முன்னிட்டே தங்கள் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
தனக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த ரஷ்யாவை விழ்த்தி வெற்றி கொண்ட இவர்களுக்கு தற்போதைய சீனாவின் முன்னேற்றம் கண்ணை உறுத்துகிறது. சீனாவிடமிருந்து தனி நாடு கேட்டு வரும் தைவானுக்கு இது குரல் கொடுப்பது சீனாவின் குரல் வளையை நெறிக்க முற்படும் ஒரு முயற்சிதான். திபெத் விவகாரங்களிலும் தலையிடுவதும் இந்த அடிப்படையில்தான். காஷ்மீர் விவகாரங்களிலும் பாலஸ்தீன விஷயத்திலும் இருட்டை வேடம் போடுவதும் இஸ்ரேலை தன் 51 வது மாகாணமாக எண்ணி அதன் வரம்பு மீறலுக்கு துணை நிற்பதும் அதன் உலக சமாதானப் போக்கை(?) வெளிப்படுத்துகின்றது. இன்று அறிவியல் முன்னேற்றத்தின் உச்சியில் இருப்பதாக மார்த்தட்டிக் கொள்ளும் இவர்கள் மனித நேயத்தை பற்றி மற்றெவரும் பேசாத அளவிற்கு பேசிவருவதை கண்டும் கேட்டும் வருகின்றோம். மனித நேயத்தை குழித் தோண்டி புதைக்கும் தொழிலில் முழுமூச்சாய் ஈடுபட்டு வரும் இவர்கள் தங்கள் சுய நலத்திற்காக அரங்கேற்றும் அட்டுழியங்களை இந்த உலகம் ஒரு விபரீதமான மௌனத்துடன் பார்த்து கொண்டுதான் இருக்கின்றது.
அமெரிக்காவை எதிர்க்க கூடிய நாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாடுகளின் பாதுகாப்பிற்காக அதிக அளவில் இராணுவ செலவுகள் செய்வதும் பெரும்பாலான நாடுகள் அணு ஆயுத தொழில் நுட்பத்தை பெற்று வருவதும் எதிர் வரும் காலங்களில் இவற்றின் ஆதிக்கத்தை குறைக்க வரும் சம்பவமாகவே கருதப்படுகின்றது. அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்குவோம் என்று இவர்கள் வாய் அளவில் சொல்வார்கள். மற்ற எந்த ஒரு நாட்டிடமும் இல்லாத அளவிற்கு அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வார்கள். இதை உணர்ந்துக் கொண்ட உலக நாடுகள் இதன் கூப்பாட்டை ஒரு பொருட்டாகவே கொள்ளாமல் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளன. இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட நாடுகள் அணித் திரளும் நாள் அமெரிக்காவிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நாளாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நாடுகள், முதுகில் குத்துப்பட்டு சாவதை விடுத்து மார்பில் குத்துப்பட்டு சாவதை தேர்தெடுத்தால் இதன் நிலை என்னவாகும்.
உலக மக்களின் மீதோ மனித உரிமைகள் குறித்தோ இதற்கு எந்த அக்கறையும் கிடையாது என்பதும் சுய நலம் மட்டும் தான் இதன் குறிக்கோள் என்பதும் நிதர்சனமாக வெளிப்படுத்தும் செயல்பாடுகள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. பூமியின் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்யும் கார்பன் டை ஆக்சைடுடைய உற்பத்தியை குறைத்து ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதை தடுக்க வேண்டும் என்பதே உலக சுற்றுப் புற சூழல் அமைப்பின் திட்டமாகும். இவர்கள் கார்பன் வாயுவின் உற்பத்தியை உலக நாடுகள் அனைத்தையும் விட அதிக உற்பத்தி செய்கின்றார்கள். இதிலிருந்தும் நாம் இவர்களின் மனித உரிமைப் போக்கை புரிந்துக் கொள்ள முடியும். ஐக்கிய நாடுகள் சபையில் உலக அமைதியை முன்னிட்டோ வரம்பு மீறல் சம்பவங்களை எதிர்த்தோ தீர்மானங்களை கொண்டு வந்தால் அதை தன் ரத்து அதிகாரத்தின் மூலம் நிறைவேற்ற விடாமல் முட்டுக் கட்டை போடுவதால் உலக நாடுகளின் எதிர்ப்புக் குரலை எதிர் கொள்ள வேண்டிய பாதகமான சூழ்நிலையை எட்டியுள்ளது.
கல் நெஞ்சம் படைத்த இவர்கள் ஏழை நாடுகளின் வறுமையை சாதகமாக பயன்படுத்தி மனிதர்களுக்கு மிக மிக தீங்கிழைக்கக் கூடிய கதிரியக்கம் நிறைந்த அணு உலைக் கழிவுகளை அவர்களின் நாடுகளில் புதைக்க சொல்லுவார்கள். ஏனென்றால் பரப்பளவில் பரந்து விரிந்த அமெரிக்காவில் இடம் பற்றாக்குறையா காரணம்? இல்லை இவர்கள் மட்டும் தான் வாழப் பிறந்தவர்களாம். இவர்கள் இன்று பெற்றுள்ள பொருளாதார வசதிகளும் இவர்களின் ஆட்டத்திற்கு ஒத்து ஊதுகின்றன. பொருளாதார வசதிகளைக் கொண்டும் ஆயுத பலத்தை கொண்டும் எதையும் சாதிக்க முடியும் என்ற இறுமாந்துப் போய் இருக்கும் இவர்களைப் போன்றோரின் நிலைக் குறித்து இறைமறை பின் வருமாறு கூறுகின்றது.

இவர்களுக்கு முன் எத்தனையோ தலை முறையினரை அழித்திருக்றோம் என்று இவர்கள் அறியவில்லையா? உங்களுக்கு செய்துத் தராத எத்தனையோ வசதிகளை அவர்களுக்கு செய்து கொடுத்திருந்தோம். அவர்கள் மீது வானத்தை தொடர்ந்து பொழியச் செய்திருந்தோம். அவர்களுக்கு கீழ் ஆறுகளை ஓடச் செய்தோம். அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அழித்தோம். அவர்களுத்குப் பின்னர் வேறு தலைமுறையினரை உருவாக்குவோம். (அல்குர்ஆன் 6:6)
எதிர் வரும் காலங்களில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை மேலும் குறைக்கும் பாதகமான வேறு சில அம்சங்களும் வரலாற்று ரீதியான பலவீனங்களும் எதிர்நோக்கி இருக்கின்றன.
அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. இவை பல காலக்கட்டங்களில் ஒன்றன் பின் ஒன்றாக அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டன. மெக்ஸிகோ யுத்தத்தின் மூலம் மிகப்பெரிய நிலப்பரப்பை பெற்றது. ஐம்பது மாகாணங்களிலும் மிகப்பெரிய மாகாணமான அலாஸ்காவை 1867ம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்தும், புளோரிடா மாகாணத்தை ஸ்பெயினிடமிருந்தும், லிதுவேனியாவை பிரான்சிடமிருந்தும் வாங்கியது. 1776-ஆம் ஆண்டு காலனி ஆதிக்கத்திற்கு எதிராக ஏற்பட்ட மிகப்பெரிய புரட்சியின் மூலம் ஒவ்வொரு மாகாணமும் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு ஐக்கிய அமெரிக்கா உருவாக ஆரம்பித்தது. ஜார்ஜியா அரசியல் அமைப்பில் முதலாவது மாகாணமாக ஒப்புக்கொள்ளப்பட்டு 1788-ல் 7-வது மாகாணமாக மாரிலேந்தும் 11-வது மாகாணமாக நியூயார்க்கும் 1889-ஆம் ஆண்டு 42-வது மாகாணமாக வாஷிங்டனும் 46-வது மாகாணமாக ஓக்லகாமாவும் 1912-ஆம் ஆண்டு 47-வது மாகாணமாக நியுமெக்ஸிகோவும் கடைசியாக 50-வது மாகாணமாக 1950ம் ஆண்டு ஹவாய் தீவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இன்று இந்த 50 மாகாணங்கள் ஒருங்கினைந்து அமெரிக்காவாக இருப்பினும் கூட இவை ஒவ்வொன்றும் கொடி, சின்னம், அரசு விலங்கு, அரசு பறவை போன்ற ஒவ்வொன்றிலும் வேறுபட்டு விளங்குகின்றது.
இவ்வாறு பல காலக்கட்டங்களில் இணைந்த வேறுப்பட்ட இனங்களை மற்றும் தன்மைகளை உள்ளடக்கிய இந்த ஐக்கிய அமெரிக்கா உடைந்து பலக் கூறுகளாக மாறும் அபாயம் அதன் கழுத்திலே தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. தற்போது ஒரு ஆதிக்க சக்தியாக இருக்கக் கூடியதால் அதனுடன் ஒன்றுபட்டு இருக்கும் இவைகள் பிரிட்டனைப் போன்று பல் பிடுங்கப்பட்டு விட்டால் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் போன்று தனி நாடு கேட்கும் நிலை இந்த 50 மாகாணங்களுக்கு ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் மிகுதியாகவே இருக்கின்றன.

(நபியே நீர் அவர்களிடம்)கூறுவீராக! உங்க(ள் தலைக)ளுக்கு மேலிருந்துதோ அல்லது உங்கள் பாதங்களுக்கு கீழிருந்தோ உங்களுக்கு வேதனையை அனுப்புவதற்கும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி (உங்களுக்கு மத்தியில் நீங்கள் போர் சிறைச்சேதம் ஆகியவற்றை செய்து) உங்கள் சிலரின் கொடுமையை(க் கொண்டு)மற்ற சிலரைச் சுவைக்க செய்வதற்கும் அவன் சக்தியுடையவன். அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக நம்முடைய வசனங்களை எவ்வாறு பல வகையிலும் திருப்பித் திருப்பி கூறுகின்றோம் என்று நீர் கவனிப்பீராக. (அல்குர்ஆன் 6:65)
இவர்களின் ஆதிக்க சக்தியை கொண்டு இவர்கள் நாடுவதெல்லாம் இவர்களினால் அடைந்து விட முடிகின்றதா என்றால் அதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இறைவனின் சோதனைகளும் அவ்வப்போது இவர்களை தொட்டு விட்டுதான் செல்லுகின்றது. இவர்கள் உலக நாடுகளின் மீது குண்டு மழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவிக்கின்றார்கள். ஆனால் இவர்களுக்கோ இயற்கை பேரழிவு அவ்வப்போது பெருத்த சேதத்தை ஏற்படுத்தி சென்று கொண்டுதான் இருக்கின்றது. உலகில் மிக அதிக வேகத்தில் வீசக்கூடிய புயல் காற்று சைக்ளோன் ஆகும் (மணிக்கு வேகம் 120 கி.மீ மேல்). இது 1995-ஆம் ஆண்டு புளோரிடா மாகாணத்தில் ஏற்படுத்திய பேரழிவு நூற்றுக் கணக்கான அணு குண்டுகளை வெடிக்கச் செய்தால் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துமோ அவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது. அல்லாஹ் யானைப் படையை மென்று உமிழ்ந்த கூலங்களைப் போல் ஆக்கியதாக சொல்கின்றானே அதுபோல. புளோரிடாவை சைக்ளோன் தன் கோரப் பிடியில் வீழ்த்திப் போட்ட ஒரு மாதிரிப் புகைப் படம்
2000-வது ஆண்டில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டு தீ அதன் தட்ப வெப்ப நிலையில் பெருத்த மாறுதலை ஏற்படக்கூடிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்திச் சென்றது. கலிபோர்னியா காட்டுத் தீ
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலம் எங்கு சென்று மறைந்தது என்று தெரியாமல் திதைத்துப் போனார்கள். 1986-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி சேலஞ்சர் விண்கலத்தை ஏவினார்கள். 73 வினாடிகளில் தங்கள் கண் முன்னே வெடித்து சிதறி 7 பேர் மாண்டு போனதை கண்டு அதிர்ந்துப் போனார்கள். 2003-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி கொலம்பியா விண்கலம் வெடித்து கல்பனா சாவ்லா உட்பட 7 பேர் சிதறிய விதம் குறித்து விக்கித்துப் போனார்கள். கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கை தாக்கக் கூடிய ஏவுகணைகள் குறித்தவறியதை கண்டு மனம் நொந்துப் போன நிகழ்வுகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன.
சாலஞ்சர் விண்கலம் வெடித்து சிதறியக் காட்சி
கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியக் காட்சி
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். மறுமை நாளுக்கு முன்பாக இந்க உலகில் பேசக்கூடிய அளவிற்கான பெரிய பூகம்பங்கள் மூன்று நிகழும். அதில் ஒன்று மேலை நாடுகளிலிலும் மற்றொன்று கீழை நாடுகளிலும் மூன்றாவது பூகம்பம் மக்காவிற்கு அருகிலும் நடக்கும் என்றுச் சொன்னார்கள். ரசூல்(ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேறி வருவதை இவ்வுலகம் கண்டு வரும் இவ்வேளையில் ரசூல்(ஸல்) குறிப்பிட்டுள்ள இந்த பூகம்பம் இன்னும் இந்த உலகில் எங்கும் நிகழவில்லை என்பதும் அது நிகழ்ந்தால் பல நாடுகளும் அல்லது சில கண்டங்களும் சுவடின்றி மறையக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் அதில் இந்த பயங்கரவாத அமெரிக்கா இடம் பெற்று மண்ணோடு மண்ணாகி போகுமா? என்பதைப்பற்றிய அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடம்தான் உள்ளது.

மறைவானவற்றின் திறவு கோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்கள். அவன் தரையிலும் கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும் ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. (அல்குர்ஆன் 06:59)

இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம் வானிலிருந்து நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும், கால்நடைகளும், உண்ணுகிற பூமியின் தாவரங்களுடன் அத்தண்ணீர் கலக்கிறது. முடிவில் பூமி அலங்காரம் பெற்று கவர்ச்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தனக்கு சத்தி இருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ பகலிலோ அதற்கு(பூமிக்கு) கிடைக்கின்றது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது போல் அறுக்கப்பட்டதாக அதை ஆக்கினோம். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம். (அல்குர்ஆன் 10:24)
இவர்கள் எவ்வளவு காலம் தான் இந்த வேலைகளை வெற்றிகரமாக செய்து கொண்டிருப்பார்கள். இதற்கு ஒரு முடிவு கிடையாதா? வறலாற்றை ஆய்வு செய்தவர்கள் கண்ட உண்மையின் அடிப்படையில் அழிவை நோக்கி செல்லும் இவர்கள் அடிப்பட்டு வீழ்வதெப்போது? இது பாதிக்கப்பட்டவர்களின் உள்ளத்தில் உளவியல் ரீதியாக எழக்கூடிய கேள்விதான். ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை இருக்கின்றது என்பது நியூட்டனின் மூன்றாவது இயக்க விதியாகும். இது பௌதீகத்திற்கு மாத்திரம் அல்ல மனித வாழ்விற்கும் பொருந்த கூடிய விதியாகதான் அமைந்துள்ளது.சென்ற நூற்றாண்டு முழுவதும் எண்ணற்ற வரம்பு மீறல்களிலும் அநியாயமான படை எடுப்புகளினாலும் இந்த பூமியில் இரத்தக் கறையைப் பூசி தங்கள் விசையை பிரயோகம் செய்துவிட்ட இவர்கள் அதன் எதிர் விசைக்காக (பிரதி பலன்களுக்காக) காத்திருக்கின்றார்கள். இந்த உலகமும் காத்திருக்கின்றது. நாமும் காத்திருக்கின்றோம்.

அவர்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போன்றதைத் தவிர (வேறு எதையும்) எதிர் பார்க்கின்றார்களா? எதிர் பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர் பார்க்கின்றேன் என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 10:102)

நன்றி:http://www.islamkalvi.com/general/lessons_from_history.htm


Thursday, January 24, 2008

இஸ்லாம் குறித்த சங்கராச்சாரியார் தேவானந்த சரஸ்வதி அவர்களின் கருத்து

கடந்த மே மாதம் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுடன் தில்லியில் நடந்த மத நல்லிணக்கக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் தேவானந்த சரஸ்வதி ஜெகத்குரு சங்கராச்சார்யா அவர்கள் நிகழ்த்திய உரை...
"இறைவன் அருள் இருப்பதால் நமக்கு மதத்தினைப் பற்றி அறியக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சென்று வருகிறோம். மேலும் இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் துவக்கினோம். அதன் காரணமாக சங்கராச்சாரியரும் முஸ்லிம்களின் மத்தியில் சென்றதால் அவர்களின் அன்பை உணர முடிகிறது! மேலும் இஸ்லாத்தின் உண்மைகளை அறிந்து, இஸ்லாம் முழு உலகிற்கும் மிகச்சிறந்த மனித நேயத்தின் பாடத்தைப் புகட்டும் மார்க்கம் என்று மக்களுக்கு இதன் மூலம் உணர்த்த முடியும்."
இஸ்லாத்தை வாளின் அடிப்படையில் நிறுவப்பட்ட மதம் என்றும் முஸ்லிம்களைத் தார்மீக சிந்தனையற்றவர்கள், கடுமையானவர்கள் என்றும் மக்கள் கூறுகின்றனர். இதைக் கேட்கும் போது உலகில் எவருக்காவது அதிகமாக மனவேதனை ஏற்படும் என்றால் அது எனக்குத்தான் (எனும் அளவுக்கு இது எனக்கு வேதனையளிக்கிறது). இதில் உண்மையில்லை, மேலும் இது ஒருக்காலும் உண்மையாக இருக்க முடியாது.

இஸ்லாம் குர்ஆனின் மூலம் தந்துள்ள முதல் பிரகடனமே 'வணக்கத்திற்குத் தகுதியுடையவன் ஏக இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை' எனும் 'லாஇலாஹா இல்லல்லாஹ்' என்பதாகும். வேதத்தைப் படித்து அதன் சாரத்தைப் பிழிந்து இறைவனை வழிபட்டு, ஏக இறைவனின் தூதை ஒரே வாசகத்தில் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் நமக்கு தந்து விட்டார்கள். இதை விடப் பெரிய வேதம் உலகில் வேறு எதுவாக இருக்கும்?

குர்ஆனின் இந்தக் கலிமாவைப் படித்துவிட்டு இந்துக்கள் இதன்படி செயல்பட நாடினால் இதை விடச் சிறந்த ஒரு மார்க்கம் வேறு ஒன்றும் இருக்க இயலாது என்று உணரலாம் அவரை விடச் சிறந்த மதவாதியாகவும் யாரும் ஆக முடியாது.

குர்ஆனை ஆழமாக ஆய்வு செய்து பார்த்து விட்டு இதை நாம் சொல்லவில்லை, மாறாக, குர்ஆனை நம்புபவர்களின் உள்ளத்தில் ஆழமாகச் சென்று நாம் இதை உணர்ந்தோம்.

இஸ்லாம் மார்க்கத்தை முழு உலகமும் ஏற்றுக் கொண்டால் அதில் ஒரு தவறும் இல்லை. இஸ்லாம் இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட சித்தாந்தம் ஆகும். இது எந்த ஒரு தனி மனிதனின் கொள்கையோ சித்தாந்தமோ இல்லை.

ஒரு சிலர் இந்தப் பூமியில் மக்கள் மத்தியில் பிரிவினையையும் வேற்றுமையையும் ஏற்படுத்துவதற்காக, "முஸ்லிம்கள் கடுமையானவர்கள், இரக்கமற்றவர்கள்" என்று இஸ்லாத்தைக் குறை கூறுவதற்காக (முஸ்லிம்களளப் பற்றி)க் கூறுகின்றனர். இப்படிப் பட்டவர்களை விடக் கெட்டவர்கள் யாரும் இல்லை என்று நான் கூறுகிறேன். இவர்கள் ஷைத்தானின் வழித்தோன்றல்கள் ஆவார்கள்; இறைவனின் குழந்தைகள் ஆகமாட்டார்கள்.

என்னால் இயன்றவரை வேதங்களையும் புராணங்களையும் இந்துமத வேதங்களையும் இதர கிரந்தங்களையும் படித்தேன். அதன் பின்னர் முஸ்லிம்களின் மத்தியில் நான் பழகத் துவங்கினேன். இதனால் என்னை (சிலர்) எதிர்க்கத் துவங்கினர். "முட்டை (புலால்) சாப்பிடுபவர்களுடன் சங்கரச்சாரியர் நட்பு கொள்கிறார்" என்று (கூறினர்). நான் அவர்களிடம் கூறினேன் "உங்களுக்குப் புரியவில்லை, அவர்கள் (முட்டை மாமிசம் சாப்பிடுபவர்கள்) ஒரு நாளுக்கு ஐந்து முறை இறைவனை வணங்குகின்றனர், புற்களைத் தின்னும் நீங்கள் ஒரு முறை கூட இறைவனை வணங்குவதில்லை. உங்களைவிட அதர்மத்தில் இருப்பவர் யார்?.

நீங்கள் உங்கள் அதர்மச் செயல்களைப் பாருங்கள். ஒருவருடைய தூய்மையான நம்பிக்கைக்கும் அவருடைய உணவு வழிமுறைகளுக்கும் எதிராகக் கருத்துக் கூறுவது என்பது முதலில் தார்மீகத்திற்கு எதிரான செயலாகும். நீங்கள் ஒருவருடைய மனதையும் புண்படுத்தவில்லை என்றால் உங்களைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை. நாம் புற்களைத் தின்று கொண்டு அடுத்தவர்களின் மனதைப் புண்படுத்துவோம் என்றால் நம்மைவிடப் பெரிய அநியாயக்காரர்களாக யாரும் இருக்க முடியாது.

ஆக நான் கூற வருவதன் சாரம் என்னவென்றால், நான் எனது அனுபவத்தில் உங்களிடமிருந்து (முஸ்லிம்களிடத்தில்) கண்ட ஒரு முக்கியமான விஷயம், உங்களிடமிருந்து நான் பெற்ற அன்பு (நேசம்). என்னிடம் இதைப்பற்றி கேட்கப் படுகிறது. "நீங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏன் செல்கிறீர்கள்? நீங்கள் சங்கராச்சாரியர் ஆயிற்றே?" என்று. நான் அவர்களுக்குக் கூறுகிறேன்: முஸ்லிம்களிடம் நீங்கள் கேளுங்கள் இவர்கள் ஏன் இவ்வளவு அன்பை எனக்குத் தருகின்றனர் என்று. எமக்கு இவ்வளவு அன்பும் நேசமும் தருபவர்களிடம் நாம் அவசியம் செல்வோம்.

அதையும் மீறி என்னிடம் கேட்கப் படுகிறது: "நாங்கள் உங்களுக்கு அன்பு தரவில்லையா?" என்று. நான் கூறினேன்: நான் உங்கள் மத்தியில் பிறந்தவன்; நீங்கள் முஸ்லிம்களை நேசிக்காததால் நான் உங்களை நேசிப்பதில்லை.

நான் உங்கள் மத்தியில் ஒரு விஷயத்தைக் கூறிக்கொள்கிறேன் சில காலங்களாக இந்து மத்ததின் பெயரில் சில அமைப்புகள் இந்து-முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமை ஏற்படுத்துவதற்காகச் சில காரியங்கள் செய்து வருகின்றன. இதனால் பொதுவாக பாமர இந்துக்களால், அப்பாவி இந்துக்களால், 'இஸ்லாம்' என்றால் என்ன 'சனாதன தர்மம்' என்றால் என்ன என்று அறிய முடிவதில்லை.

சனாதன தர்மத்திலும் இஸ்லாத்திலும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. மேலும் இந்து மதம் ஒரு மதமே இல்லை. சனாதன தர்மம்தான் தர்மம் ஆகும். சமஸ்கிருத பாஷையில் சனாதனம் என்பதை வேறு விதத்தில் 'இஸ்லாம்' என்று கூறலாம். ஏனென்றால் சனாதன தர்மமும் இஸ்லாமும் ஒன்றேயாகும். சனாதன தர்மம் கூறுகிறது "இறைவன் ஒருவனே" என்று. "இறைவன் அனைவருக்கும் இறைவனாவான்" என்ற தூதையே ரிஷிகளும் முனிவர்களும் தந்தனர். இதே தூதைத்தான் இறைவனால் அனுப்பப்பட்ட நம்முடைய தூதராகிய முஹம்மத் அவர்களும் நமக்குத் தந்தார்கள். பின்னர் நாம் ஏன் வேற்றுமை பாராட்ட வேண்டும்?
இங்கு இந்திய முஸ்லிம்களுக்கு நான் தெளிவாக ஒரு விஷயத்தைக் கூறுகிறேன்: இந்திய முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்திய முஸ்லிம்கள் தூங்கினால் இந்தியா தூங்கிவிடும். ஆகையால் இந்தியாவை விழிப்புடன் வைக்க வேண்டுமெனில் இந்திய முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியா விழிப்படையின் முழு உலகமும் விழிப்படையும். இன்னுமொரு விஷயம் நான் அறிவேன் அது இந்தியாவின் உண்மையான இந்துக்களுக்கு, உண்மையான சனாதன தர்மிகளுக்கு முஸ்லிம்களின் நேசம் தேவை. அவர்களுக்கு முஸ்லிம்களிடம் வேற்றுமை தேவையில்லை.
இதோ குர்ஆன் எனும் வேதம் உள்ளது (குர்ஆனை தமது கையில் எடுக்கிறார்) குர்ஆன் ஷரீப், குர்ஆன் ஷரீப். நான் விரும்புவது என்னவென்றால் முழு உலகிலும் இந்த வேதம் சென்றடைய வேண்டும். நான் ஒரு விஷயம் இங்குக் கூறுகின்றேன் இதை நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் அண்மையில் எந்த மொழியைச் சார்ந்த அண்டைவீட்டார் இருந்தாலும் அவருக்கு அவருடைய மொழியில் இந்தப் புனித வேதமாகிய குர்ஆனைத் தர முயற்சி செய்யுங்கள்.
நான் நினைக்கிறேன், இந்தக் குர்ஆன் முழு உலகிலும் சென்றடைந்தால் முழு உலகிலும் அமைதி நிலவும். சாந்தி நிலவும். அதன் பிறகு இதே போல் முழு உலகிலும் சங்கராச்சாரியர் எங்கு வேண்டுமானாலும் சென்று தமது கருத்துக்களைப் பேசுவதற்கு எந்த ஒரு தடங்கலும் இருக்காது, தயக்கமும் இருக்காது. நீங்களும் அஞ்சாதீர்கள்; தயங்காதீர்கள். நாம் நன்கறிவோம் சில நேரங்களில் இந்தத் தயக்கத்தினால், இந்த நாட்டின் சில பிரிவினைவாத சக்திகளின் சதிகளின் காரணமாக நாம் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிவதில்லை. நாம் இன்று கைவிரித்து உங்களிடம் வந்துள்ளோம். கைவிரித்து நிற்கிறோம்; உங்களை ஆரத்தழுவுகின்றோம்; அரவணைக்கிறோம். உங்களுக்காக எனது இதயத்தையும் எனது தலையையும் - இஸ்லாத்தைக் காப்பதற்காக எனது தலையை இழக்க நேர்ந்தாலும் இந்த சங்கராச்சாரியர் அதற்கும் தயார்.
ஏனென்றால் சங்கரச்சாரியார் நன்கறிவார் இஸ்லாம் ஏமாற்றக்கூடிய கொள்கையில்லை; சங்கராச்சாரியார் நன்கறிவார் இஸ்லாம் அழிவிற்கான மார்க்கம் இல்லை; சங்கராச்சார்யர் அறிவார் வேதத்தில் இருப்பதே இந்தக் குர்ஆனில் இருக்கிறது. ஆகையால் நாம் முஸ்லிம்களை நமது உறவுகளாகக் கருதமுற்பட்டால் எமது தார்மீகம் மத நம்பிக்கை இழப்புக்குள்ளாகாது. அது இன்னும் முன்னேற்றம் தான் அடையும்.
முஸ்லிம்கள் இறைவனால் படைக்கப்பட்டவர்கள்; மனிதர்களால் படைக்கப்பட்டவர்கள் அல்லர். தம்மை இந்துக்கள் என்பவர்களும் அறிந்துகொள்ளுங்கள், நீங்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்களே. ஆகையால் வேற்றுமை பாராட்டாதீர்கள். என்னைப் போல் அனைவரையும் நேசியுங்கள்.

டாக்டர் (ஜாகிர் நாயக்) அவர்களே நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்! டாக்டர் அவர்கள் தமது நேரத்தை ஒதுக்கி வந்துள்ளார் என்பதை நான் அறியாமலில்லை. நான் அவருக்கு நன்றி கூறிக் கொள்ள விரும்புகிறேன். மேலும் இறைவன் அவர்களுக்கு சக்தியளிக்க வேண்டும், (என்றும்) நாம் இதே போல் அழகான பெருந்திரளாக மக்களிடம் பேச மேலும் வாய்ப்புகள் அளிக்கப் பெறவேண்டும், மேலும் எங்கள் மீது அவர்களின் தனிக்கிருபை இருக்க வேண்டும் (என்றும் விரும்புகிறேன்).

நாம் என்றும் வாழ்நாள் முழுவதும் அவருக்குத் துணையாக இருப்போம். இதே வார்த்தைகளுடன் வாழ்க்கையில் எப்போது நீங்கள் என்னை அழைத்தாலும் எது வரை எனது உடலில் உயிர் இருக்கிறதோ அதுவரை நாம் உங்கள் சபைகளில் வந்து கொண்டேயிருப்போம்.

மொழியாக்கம்: இப்னு ஆதம்


நன்றி:http://www.satyamargam.com/

Wednesday, January 23, 2008

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.
1. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் (Tryptophan) எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
2. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
3. பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் சீர்செய்யவும், மூளை விழிப்புடன் இருந்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவும், சிகரெட் கைவிட்டவர்கள் நிக்கோட்டின் ஆதிக்கத்திலிருந்து விரைவில் விடுபடவும் உதவுகிறது.
4. இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
5. வைட்டமின் B அதிகம் இருப்பதால் நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திடவும் வாழைப்பழம் உதவுகிறது.
6. வேலையில் உண்டாகும் அழுத்தத்தினால் சிலர் அதிகமாக சாக்லேட்டுகளை உட்கொள்ள எத்தனிப்பர். இவர்கள் வாழைப்பழத்தை சிற்றுண்டி போல உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பிலிருந்தும், குடற்புண் ஏற்படுவதிலிருந்தும் தப்பலாம்.

7 வாழையின் தண்டு, பூ, பழம் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவையாகும். வாழைப்பழம் உடம்பை உரமாக்குவதுடன் நல்ல மல மிளக்கியாகவும் செயல்படுகின்றது. பித்தம், காமாலையை தடுக்கும். வறட்சியை அகற்றும்.
8 வாழைப்பழம் விந்துவை பெருக்கி மூலத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது. வாழைப்பழம் குளிர்ச்சியான பழம். உடம்பு உஷ்ணம் இருப்பவர்கள் தினமும் இரவில் படுக்க போகும் முன்பு வாழைப் பழம் ஒன்று சாப்பிடுவது மிகுந்த நன்மையை தரும்.
9 மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வர- மலச்சிக்கல் போயே போய்விடும்.
10 காய்ச்சல், மற்றும் வயிற்றுப்போக்கு சமயத்தில் மட்டும் வாழைப்பழத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.
11 புதுமண தம்பதிகள்- ஒன்றுக்கும் மேற்பட்ட வாழைப்பழம் சாப்பிட்டால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடம்பும் சூடேறாமல் இருக்கும்.
12 முதுமையை தள்ளிப்போடும் விருப்பமுள்ளவர்கள் தினமும் வாழைப்பழம் உண்டு வரலாம். இவர்களுக்கு முகத்தில் தோல் சுருக்கம், தொய்வுகள் ஏற்படாது.
13 மூல நோய் உள்ளவர்களும், மலச்சிக்கல் உள்ளவர்களும் பூவன் பழம் சாப்பிட்டு வந்தால் பிரச்சினை தீரும்.
14 பாலுடன் வாழைப் பழம் சேர்த்து சாப்பிட அஜீரணம் சரியாகும்.
15 இளநீர் கலந்து சாப்பிட்டால் காச நோய் குணமாகும்.
16 சிறுநீரக நோய்களுக்கு நெல்லி சாறில் வாழைப்பழத்தை பிசைந்து சாப்பிட சரியாகும்.
17 பாலும், வாழைப்பழமும் விடாமல் சாப்பிடுபவர்களுக்கு இரைப்பை புண் ஏற்படுவதே இல்லை.
18 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விந்து பெருகும். மூலநோய் காணாமல் போகும்.
19 மூட்டு வலி குணமாக, தினமும் 2 வாழைப்பழங்கள் சாப்பிடுங்கள்.
20மலச்சிக்கல், வாய்வு உபத்திரவம், இரத்தச் சோகை, பொது பலவீனம், நோஞ்சான் உடம்புக்காரர்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட நல்ல நன்மை கிட்டும்.
21 ஆண்களைவிட பெண் களுக்கு அதிக அளவில் நன்மை செய்யக்கூடிய பழம் என்று ஆய்வுகள் சொல் கின்றன. பெண்களுக்கு மாத விடாய், பால் புகட்டுதல், மகப்பேறு போன்ற காரணங்களினால் அடிக்கடி கால்சிய பற்றாக் குறை ஏற்படும். கால்சிய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு பயன் பெறலாம்.
22 உடல் எடை கூட வேண்டும் என்று நினைப்பவர்களும் தினம் வாழைப்பழம் சாப்பிடலாம்.
23 வாரம் 2 முறை வாழைத்தண்டு சாறு அருந்தி வந்தால், குடல் சுத்தமாகும் சோடியம் குறைவாகவும், அதிகம் பொட்டாசியமும், கால்சியமும், இரும்பும் இருக்கிறது. மிக சுலபத்தில் ஜீரணமாகக்கூடிய சர்க்கரை இருப்பதால் உடனடி சக்திக்கு நிறைய உதவும்.வாழைப்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சேர்த்தால் போதும் என்கிறார்கள் உணவுத்துறை வல்லுநர்கள். இதை ‘பேலன்ஸ்டு டயட்’ என்கிறார்கள்.இதில் இருக்கிற ‘செரடோனின்’ என்கிற பொருள் மன அழுத்தத்திற்கு உதவக்கூடியது. என்னவென்று தெரிந்கொள்ள முடியாத பல அலர்ஜிகளுக்கு, வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட தீர்வு கிடைக்கும் என்கிறார்கள். இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், இரத்தசோகைக்கு மிக நல்லது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தியைத் துரிதப்படுத்கிறது. வாழைப்பழத்தில் கண்டுபிடிக்கப்படாத வைட்டமின் ‘U’ இருக்கிறது. இது கான்ஸர் நோய்க்கு எதிரி. அல்சர் புண்களை ஆற்றுவதிலும் வாழைப்பழத்திற்கு மகத்தான சக்தி உண்டு.நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம் போன்ற கோளாறுகளுக்கு தடுப்பாகவும், தீர்வாகவும் பயனாகின்றது என்று கண்டுபிடித்துள்ளனர்.வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்துண்ணும் பழக்கம் தவறு என்பதை, பலரும் அறிவதில்ல. கிராம மக்கள் வாழைப்பழம் சாப்பிடும் முறையை உற்று நோக்கினால், ஓர் உண்மை புலப்படும். அவர்கள் தோலை கையில் வைத்துக் கொண்டு அதில் பிசிறு போல் வெண்மையாக ஒட்டிக் கொண்டு உள்ள நார்ப்படலத்தைக் கீறி வழித்து உண்பர். சிறு துவர்ப்புடன் இருக்கும் இந்த நார்ச் சத்தினால் குடலில் தங்கும் சூடு தணியும் என்று காரணம் கூறுவார்கள். அர்த்தமுள்ள இந்தப் பழக்கம் குடல் புண் வராமல் காக்கின்றது. ‘மலைவாழைப்பழம்’ மலச்சிக்கலை உடைக்கும்.‘செவ்வாழைப்பழம்’ உயிரணுக்களைப் பெருக்கும்.‘மஞ்சள் வாழைழப்பழம்’ குடல் புண்கள ஆற்றும்.‘பேயன் வாழைழப்பழம்’ அம்மைமநோயால் குடலில் சேரும் நஞ்சு, வேக்காடுகளை முறிக்கும்.‘அடுக்கு வாழைப்பழம்’ சரீரத்திற்கு அழகூட்டும்.‘மொந்தன் வாழைப்பழம்’ உடலின் வறட்சியைப் போக்கும்.‘பச்சை வாழைப்பழம்’ உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். சளியைச் சேர்க்கும்.‘நேந்திரம் வாழைப்பழம்’ தோலுக்கு மினுமினுப்பைத் தரும்; தாய்ப்பாலைப் பெருக்கும்.இவ்வளவு சிறப்புடைய இந்தப் பழத்தை நான்கு பேர் சாப்பிடக் கூடாது.1. கடுமையான ஆஸ்துமா நோயாளிகள்.2. நீண்டகால சர்க்கரை நோயாளிகள்.3. கை, கால் வலிப்பு உள்ளவர்கள்.4. உடல் பருமன் மிக்கவர்கள்.வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.
எது எப்படியோ இறைவனின் பல்வேறு அருட்கொடைகளில் ஒன்றான வாழைப்பழம் ஓர் இன்றியமையாத உணவுப்பொருள் என்பதை எவரும் மறுக்க இயலாது.

Tuesday, January 22, 2008

கண்ணியம் கொடுத்த ஹிஜாப்! - ஸாரா போக்கர்


அமெரிக்காவின் நடுநாயகமாக விளங்கும் ஊரில் பிறந்த அமெரிக்கப் பெண் நான். எல்லாப் பெண்களையும் போலத்தான் நானும் அந்தப் பெரிய நகரத்த்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். இறுதியாக நான் ஃப்ளோரிடாவுக்கு, மியாமி கடற்கரையின் தெற்குப் பக்கமாகக் குடிபெயர்ந்தேன். வாழ்க்கையின் கவர்ச்சிகளைத் தேடுபவர்களுக்கான 'சூடான இடம் அதுதான். பெரும்பாலான சராசரி மேற்கத்தியப் பெண்கள் செய்வதையே நானும் பின்பற்றினேன். அதுதானே இயற்கையுமாகும்? என் தோற்றம், கவர்ச்சி இவற்றில் கவனம் செலுத்தினேன்.
மற்றவர்களை எந்த அளவுக்கு என் பக்கம் இழுக்க முடியும் என்பதை வைத்து என் மதிப்பை அளந்தேன். பெரும் முனைப்புடன் அதற்காக நான் உழைத்தேன். தனிப்பட்ட பயிற்சியாளினியாக மாறினேன். கடற்கரையோரமாக மேல்குடி மக்கள் வாழும் பகுதியில் ஒரு வீடு வாங்கினேன். உடலை வெம்மைப்படுத்திக் கொள்வதற்காக வழக்கமாகக் கடற்கரைக்குச் செல்பவர்களில் ஒருத்தியாக மாறினேன். அந்த நேரத்தில் எது பெரும்பாலானவர்கள் வாழும் ஸ்டைலாக இருந்ததோ அதுவே எனதாகவும் இருந்தது. ஆனால் பெண் என்ற கவர்ச்சியை வைத்து நான் கழித்துக் கொண்டிருந்த அந்த வாழ்க்கை எனக்கு நிம்மதியைத் தரவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். ஆண்டுகள்தான் கழிந்து கொண்டிருந்தன.ஃபேஷனுக்கு நான் அடிமையாகிப் போயிருந்தேன். தோற்றத்தின் பிணைக் கைதியாகி விட்டிருந்தேன்.எனது வாழ்க்கை முறைக்கும் மன நிம்மதிக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகிக் கொண்டே போனது. குடி, பார்ட்டிகள், தியானம், சமூக சேவை, வேறு மதங்களைத் தழுவுதல் இப்படி பல விஷயங்களில் மனதைச் செலுத்தித் தப்பிக்கப் பார்த்தேன். ஆனால் எதுவுமே என் வாழ்க்கையில் ஏற்பட்ட அந்த இடைவெளியை நிரப்பவில்லை. மாறாக ஒரு பள்ளத்தாக்கைப் போல அது மேலும் வளர்ந்து ஆழமாகிக் கொண்டிருந்தது. நான் செய்து வந்ததெல்லாம் நோய் நிவாரணிகள் அல்ல, தற்காலிகமாக வலியை மறக்கடிப்பவை மட்டுமே என்பதை கடைசியில் நான் புரிந்து கொண்டேன். செப்டம்பர் 11, 2001 ஆகிவிட்டிருந்தது. இஸ்லாத்தின் மீதான தொடர்ந்த குண்டுமாரிகளையும் விமர்சனங்களையும், இஸ்லாமிய மதிப்பீடுகள், பண்பாடு, புதிய சிலுவைப்போர் என்ற பிரகடனங்கள் இவற்றையெல்லாம் பார்க்க நேரிட்டது. அப்போதுதான் இஸ்லாம் என்ற ஒன்றை கவனிக்க ஆரம்பித்தேன். இஸ்லாம் என்றால் பெண்களை கூடாரங்களில் அடைத்து வைத்திருப்பவர்கள், மனைவிகளை அடிப்பவர்கள், தனியிடத்தில் ஒதுக்கி வைப்பவர்கள், பயங்கரவாதிகளின் உலகம் என்றுதான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். பெண் விடுதலைக்காகவும், இன்னும் இந்த உலகை சிறப்பானதாக மாற்றுவதற்கும் போராடும் ஒருத்தி என்ற முறையில் என் வழி, என்னைப் போன்றே, வித்தியாசம் பாராமல் எல்லாருக்கும் நீதியும் சீர்திருத்தமும் வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் இன்னொருவரின் வழியோடு சந்தித்துக் கொண்டது. எனது புதிய வழிகாட்டியானார் அவர். அவருடைய வழிகாட்டுதல்களில் அந்த நேரத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள், வாழ்வாதார உரிமைகள் போன்றவையும் இருந்தன. எனது புதிய ஈடுபாடு அடிப்படையில் பல வகையிலும் வித்தியாசமானதாக இருந்தது. தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டும் நியாயம் என்றில்லாமல், நீதி, நியாயம், விடுதலை, மரியாதை போன்ற யாவும் எல்லாருக்கும் பொதுவானவை, எல்லாருக்குமே கிடைக்க வேண்டியவை என்பதை நான் புரிந்து கொண்டேன். சொந்த நலன் என்பதும் பொது நலன் என்பதும் முரண்பட்டவை அல்ல என்பதையும் தெரிந்துகொண்டேன். "படைக்கப்பட்ட அனைவருமே சமம்" என்பதன் அர்தத்தை முதன் முறையாக நான் புரிந்துகொண்டேன். நம்பிக்கை மட்டுமிருந்தால், இந்த உலகம் முழுவதுமே ஒன்றுதான், படைப்பினங்களுக்குள் ஒற்றுமை இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம் என்று தெரிந்து கொண்டேன். மேற்கத்திய உலகம் எப்போதுமே எதிர்மறையாகப் பேசிக்கொண்டிருக்கும் குர்ஆன் என்ற புத்தகத்தை ஒருநாள் பார்க்க நேர்ந்தது. முதலில் குர்ஆனின் நடையும் அணுகுமுறையும் எனக்குப் பிடித்திருந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புக்கும் இடையில் இருக்கும் உறவு இவை பற்றியெல்லாம் அது சொன்ன விஷயங்கள் என்னை மயக்கின. ஒரு விளக்கவுரையாளரோ அல்லது ஒரு சமயத்தலைவரோ தேவையில்லாமல் மனதோடும் ஆன்மாவோடும் உறவாடிய புத்தகமாக அது இருந்தது. கடைசியில் உண்மையில் குர்ஆன், என்னைப் பாதித்ததை உணர்ந்தேன். எனக்கு ஆத்ம திருப்தி தரும் செயல்பாட்டின் இறுதிக்கட்டமாக, வழிபாடுகளைச் செயல்படுத்தும் ஓர் உண்மை முஸ்லிமாக அமைதியாக வாழத் தகுதியான இஸ்லாத்தில் நான் இணைந்தேன்.ஓர் அழகிய நீண்ட அங்கியை நான் வாங்கினேன். தலைமீது போடும் துணியும் வாங்கிக் கொண்டேன். குட்டைப் பாவாடையிலும், மேற்கத்திய வியாபார உடையான பிகினியிலும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு நான் அலைந்த அதே தெருக்களிலும் சுற்றுப் புறங்களிலும் இந்த உடையோடு நான் நடந்தேன். ஏற்கெனவே பார்த்த அதே மனிதர்கள், அதே முகங்கள், அதே கடைகள்தான். ஆனால் ஒரு வீரியம் மட்டும் முன்புபோல இல்லை. அது நான்தான். ஒரு பெண் என்ற வகையில் எனக்கு முன்பு கிடைக்காத நிம்மதி முதன்முறையாகக் கிடைத்தது. விலங்குகள் உடைபட்டு நான் இறுதியாக சுதந்திரமடைந்து விட்டதை உணர்ந்தேன். ஏற்கனவே நான் அந்த தெருக்களில் சென்றபோது, ஒரு வேட்டைக்காரன் தான் வேட்டையாட இருக்கும் அப்பாவி மிருகத்தைப் பார்ப்பது போலத்தான் என்னைப் பார்த்தார்கள். ஆனால் இப்போது ஆச்சரியமாக அவர்கள் என்னைப் பார்த்தது எனக்கு சந்தோஷமளித்தது.

திடீரென்று எனது தோள்களில் இருந்து ஒரு 'சுமை' எடுக்கப்பட்டுவிட்டது. எனது நேரத்தையெல்லாம் முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் செலவழித்துக் கொண்டிருக்கவில்லை. ஆம், இறுதியாக நான் சுதந்திரம் அடைந்துவிட்டேன்.'மிகவும் அவமரியாதை செய்யும் இடம் என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை நான் என் இதயத்தில் ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, அதை எனக்கு இன்னும் நெருக்கமாக்குவதற்கும் சிறப்பாக்குவதற்கும் போதுமானதாக இருக்கிறது.
ஹிஜாப் (பர்தா) எனக்கு திருப்தி தருவதாக இருந்தது. நிகாப்(முகத்தை முழுமையாக மூடும் துணி) பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. ஏனெனில் அதில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனது. நான் இஸ்லாத்துக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொண்ட என் முஸ்லிம் கணவரிடம், நான் ஏற்கெனவே அணிந்து கொண்டிருந்த ஹிஜாபில் இருந்தால் போதுமா, அல்லது நிகாப் அணிய வேண்டுமா என்று கேட்டேன். ஹிஜாப் அணிவது கடமை என்றும், நிகாப் அப்படிப்பட்டதன்று என்றும் அவர் கூறினார். அந்த சமயத்தில் என் ஹிஜாப் ஆடை என் முகம் தவிர, கூந்தல் முழுவதையும் மூடும் ஒரு தலைத்துணியும், கழுத்திலிருந்து பாதம் வரை மூடிய 'அபயா'என்று சொல்லப்பட்ட ஒரு நீண்ட கருப்பு அங்கியும் கொண்டதாக இருந்தது.ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, நிகாப் அணிய ஆசையாக உள்ளதாக என் கணவரிடம் சொன்னேன். அது அல்லாஹ்வுக்கு அதிகம் பிடித்தமானதாக இருக்கும். அதோடு, அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன நிம்மதியையும் அது அதிகப்படுத்தும் என்றும் அவரிடம் கூறினேன். அவர் எனது முடிவை ஆதரித்தார். 'இஸ்தால்' என்று சொல்லப்பட்ட ஒரு தளர்ச்சியான, தலை முதல் கால்வரை மூடும் ஒரு கருப்பு கவுனையும், என் கண்களைத் தவிர தலையையும் முகத்தையும் முழுமையாக மூடும் நிகாபையும் வாங்கிக் கொடுப்பதற்காக என்னைக் கூட்டிச் சென்றார்.

ஹிஜாபும் நிகாபும் பெண்களையும் பெண்ணுரிமையையும் நசுக்குவதாகவும், சமூக இணைவுக்கு தடையாக இருப்பதாகவும் சொல்லி விரைவிலேயே அரசியல்வாதிகள், வாடிகன் பாதிரிகள், விடுதலை விரும்பிகள், மனித உரிமைகள், பெண் விடுதலை இவற்றுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்பவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. சமீபத்தில் ஓர் எகிப்திய அதிகாரி, "பின் தங்கிய நிலையின் அடையாளம்" என்று ஹிஜாபையும் நிகாபையும் வர்ணித்தார்.சில அரசாங்கங்கள் பெண்கள் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்று சொல்லும் போது அதை எதிர்க்க வேண்டிய மனித உரிமைகள், பெண் விடுதலை இவற்றுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் சில அமைப்புகளும் அதைக் கண்டு கொள்வதில்லை.. ஆனால் ஹிஜாப், நிகாப் அணியும் பெண்களுடைய உரிமைகள், வேலை, கல்வி ஆகியவற்றில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கொடுக்கப்படாமல் அவர்கள் புறக்கணிக்கப்படுவதை இந்த அமைப்புகள் கண்டு கொள்வதே இல்லை. படுமோசமான, வெளிப்படையான வஞ்சகம், கபடம் என்று நான் இதைப் பார்க்கிறேன். துனீசியா, மொராக்கோ, எகிப்து போன்ற சர்வாதிகார ஆட்சி முறைகளில் மட்டுமின்றி, ஃபி்ரான்ஸ், ஹாலந்து, பிரிட்டன் போன்ற மேற்கத்திய ஜனநாயக அரசுகளிலும் ஹிஜாப், நிகாப் அணியும் பெண்களுடைய உரிமைகள், வேலை, கல்வி ஆகியவற்றில் இன்று மறுக்கப்படுகின்றன. நான் இன்னும் ஒரு பெண்ணியவாதிதான். ஆனால் முஸ்லிம் பெண்ணியவாதி. நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவர்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்தெடுத்து மனித குலத்துக்கு வழிகாட்டக் கூடியவர்களாக மறுபடியும் ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நல்லன எல்லாவற்றையும் செய்ய வேண்டும். தீயன விலக்க வேண்டும். எல்லாத் தீமைகளையும் விலக்க வேண்டும். கெடுதியான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நிகாப் அல்லது ஹிஜாப் அணியும் நமது உரிமைக்காகப் போராட வேண்டும். நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக. அதே சமயம், ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், இதன் அர்த்தம் என்ன, ஏன் இது நமக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது என்பனவற்றை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.நிகாப் அணியும் பெண்களில் பலர் மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து மீண்டு வந்தவர்கள். அதில் சிலருக்குத் திருமணம்கூட ஆகவில்லை. இன்னும் பலருக்கும் நிகாப் அணிவதற்கு குடும்பம் அல்லது சுற்றத்தின் ஆதரவு இல்லை. இது நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தேர்வாகும். இதை விட்டுக் கொடுக்க நாம் தயாராக இல்லை. உலகெங்கிலும் உள்ள எல்லா ஊடகங்களிலும், தொடர்புச் சாதனங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஸ்டைல் என்ற பெயரில் அணிவதற்கு வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாப், அதன் சிறப்புகள், அதை அணிவதால் எனக்குக் கிடைத்ததுபோல, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, சந்தோஷம் ஆகியன பற்றி பெண்கள் அறிந்து கொள்வதற்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் சொல்வேன். விடுதலையின் குறியீடாக எனக்கு நேற்றுவரை பிகினி இருந்தது. ஆனால் உண்மையில் என் ஆன்மிகத்திலிருந்தும், மரியாதைக்குரிய ஒரு மனுஷி என்பதிலிருந்தும் தான் அது என்னை விடுவித்திருந்தது. சௌத் பீச்சில் என் பிகினியையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையும் கண்ணியமும் உள்ள ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதிலும்தான் எனக்கு அதிக மகிழ்ச்சி இருக்கிறது. அதனால்தான் நான் நிகாப் அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என்னைவிட்டுப் பிரிக்க முடியாத அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் செய்வேன். இன்று,பெண் விடுதலையின் புதிய குறியீடு நிகாப்தான். ஹிஜாப் கொடுக்கும் இஸ்லாமிய கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்முறையைத் தேர்வு செய்யும் பெண்களுக்கு நான் சொல்வது இதுதான்: நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை.


Sunday, January 20, 2008

மனித விரோதச் செயல்பாடுகளைக் கொண்ட தீவிரவாதிகளின் அடையாளங்கள் என்னென்ன?

மனித விரோதச் செயல்பாடுகளைக் கொண்ட தீவிரவாதிகளின் அடையாளங்கள் என்னென்ன? இவ்வாறு ஒரு கேள்வியைத் தர்க்கரீதியாக வைத்தால் அகராதியிலிருந்து கிடைக்கும் பதில் என்னவாக இருக்கும்? குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள், நோயாளிகள், அப்பாவிகளை அநியாயமாகக் கொலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டவர்களை மனித விரோதத் தீவிரவாதிகள் எனலாம். ஆனால், கடந்தச் சில வருடங்களில் உலகளாவிய அளவில் இந்த அகராதிப் பொருள் அராஜகவாதிகளால் மாற்றியமைக்கப்பட்டு விட்டது. ஆம், ஒரு முஸ்லிம் பெயர், நீண்ட தாடி, கரண்டைக்கு மேலே தொங்கும் கீழாடை. ஒருவரை தீவிரவாதி என முத்திரைக் குத்த இவ்வளவு போதுமானது.
தீவிரவாதிகளின் இலக்கணங்களான இப்புதிய அடையாளங்களை ஏற்றுக் கொள்ளாமல் தர்க்கரீதியிலான அகராதிப் பொருளின் படி நபர்களைக் கண்டுகொள்வதில் இன்று உலகில் ஒருசில நாடுகளில் உள்ள பகுதிகளே முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்த வரிசையில் இந்தியாவில் கல்வியறிவில் தன்னிறைவு பெற்ற மாநிலமான கேரளத்தைப் பட்டியல் இடலாம். சுதந்திரம் அடைந்த நாட்களில் இருந்து இன்று வரை கம்யூனிஸவாதிகளுக்கும் சங் பரிவார RSS கூட்டத்திற்கும் காணும் இடத்தில் வெட்டிக் கொல்லும் அளவுக்குப் பகைமை நிலை நின்ற போதிலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போன்று கேரளத்தில் மனித குல விரோதக் கூட்டமான RSS-ன் பார்வை மாறாடு போன்ற சிற்சில உதாரணங்களைத் தவிர்த்துப் பார்த்தால் மிக அதிக அளவில் முஸ்லிம்களைப் பாதித்ததில்லை எனக் கூறலாம். ஆனால் கடந்த சில வருடங்களாக, முக்கியமாகக் கேரள RSS-ன் முதல் எதிரியான கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தப் பின்னர் முஸ்லிம்களின் மீதான பார்வை தீவிரவாத விஷயத்தில் உலகமயமாக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களின் காவல்துறை, ஊடகத்துறை, நீதித்துறைகளின் முஸ்லிம்களின் மீதான மாற்றுப் பார்வையிலிருந்துத் தனித்து விளங்கிய கேரள அரசின் சமீபகாலச் செயல்பாடுகள் கல்வியறிவில் தனித்து விளங்கும் அவர்களிடையேயும் இஸ்லாத்தைக் குறித்த பயம் உள்ளூரத் தோன்ற ஆரம்பித்து விட்டதைக் காண்பிக்கின்றது. கேரள ஊடகத்துறையில் பிரபலமான ஏசியாநெட் தொலைகாட்சி கடந்த சில மாதங்களுக்கு முன் தனது முக்கியச் செய்தித் தொகுப்பாளரான ஒரு பெண்ணைக் கொண்டுத் தடை செய்யப்பட்ட இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் கேரளாவில் தற்பொழுதும் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக ரகசிய விசாரணை அறிக்கை என்றப் பெயரில் பொய்களை அவிழ்த்து விட்டுப் பரபரப்பு காட்டியது. இதற்கு ஆதாரமாக சிமியின் முன்னாள் கேரள பொறுப்பாளரின் பணியிடம் சென்று ஒரு பேட்டி எடுத்து, அதனை அவர்களின் இரகசிய செயல்பாட்டுத் தளத்திலிருந்து எடுத்ததாக பொய் கூறியது. இச்செய்தியின் அடிப்படையில் கேரள உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன், ''சிமி முன்னாள் உறுப்பினர்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான எல்லா வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன'' என்று அறிக்கை விடும் அளவில் கொண்டு வந்து சேர்த்தது. பின்னர் அதே சிமியின் முன்னாள் பொறுப்பாளர் ஏசியாநெட் செய்தி சேகரிப்பாளருடன் நடந்த உரையாடல் ஒலிப்பதிவு ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் ஏசியாநெட் கொடுத்த அறிக்கை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனவும் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணனைச் சந்தித்து இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்பிப்பேன் எனவும் சம்பந்தப் பட்டவரின் கருத்து பத்திரிக்கைகளில் வெளியானதோடு ஏசியாநெட்டால் வீசப்பட்ட சிமி அஸ்திரம் புஸ்வாணமாகிப் போனது. இந்த வரிசையில் தற்பொழுது கேரளத்தை உலுக்கும் மற்றொரு இஸ்லாமிய தீவிரவாதப் பிரச்சனை தான் காஷ்மீரைச் சேர்ந்த அல்தாப் அஹ்மத்கான் என்ற லஷ்கரே தொய்பா தீவிரவாதி கைது செய்தி. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன் கேரளாவிலுள்ள குமளி என்ற இடத்திலிருந்து அல்தாப் அஹ்மத்கான் என்ற காஷ்மீரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம், கேரள காவல்துறையினரால் தீவிரவாதி எனக்கூறி கைது செய்யப்பட்டார். கடந்த வாரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இவரின் ஜாமீன் மனுவை, "காஷ்மீரில் இவர் மீது எண்ணற்ற தீவிரவாத வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு பாகிஸ்தானின் ISI-உடன் தொடர்பு உள்ளது. ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடைய இவரை மத்திய உளவுத்துறை தேடிக் கொண்டு இருக்கும் அளவிற்கு பயங்கரமானவராவார். எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என்ற அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இவ்வளவு அதிதீவிர குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்ட இவரைக் குறித்துத் தற்பொழுது காஷ்மீரிலிருந்து வெளியாகும் செய்தி வேறு விதமாக உள்ளது. "தீவிரவாதத் தொடர்புக் குற்றம் சுமத்தி கேரள காவல்துறை குமளியில் கைது செய்து சிறையிலடைத்த காஷ்மீரைச் சேர்ந்த அல்தாப் அஹ்மத்கானின் மீது ஒரு வழக்கும் காஷ்மீரில் நிலுவையில் இல்லை எனவும் காஷ்மீர் காவல்துறையும் உளவு துறையும் இவரை தேடி வருவதாகக் கூறிய கேரளக் காவல்துறையின் குற்றச்சாட்டு உண்மையில்லை எனவும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன." நிரபராதி என்ற போதிலும் இவரை விடுதலை செய்யாததற்கான காரணம் என்ன என்ற தேஜஸ் தினப்பத்திரிக்கையின் கேள்விக்கு, "நாங்கள் செய்ய வேண்டியவை அனைத்தும் செய்து விட்டதாகவும் அவரை விடுதலை செய்யாததற்கான காரணத்தை கேரள காவல்துறையிடம் தான் கேட்க வேண்டும்" என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை IG, S.M.ஸஹாய் பதில் கூறினார். மேலும் அல்தாபின் மீது ஒரு வழக்கும் காஷ்மீரில் நிலுவையில் இல்லை என கேரளக் காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஸ்ரீநகர் காவல் கண்காணிப்பாளர் (SP) செய்யத் அஃபத் முஜ்தப கூறினார். இதற்கிடையில் மகனின் விடுதலைக்காகக் காவல்துறை மற்றும் முதலமைச்சர் குலாம் நபி ஆஸாதிடம் முறையிடப்போவதாக அல்தாபின் தந்தை அப்துல் ரஹ்மான் கான் கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் காவல்துறை IG-யின் அறிக்கையிலிருந்து அல்தாப் மத்திய மற்றும் காஷ்மீர் உளவுதுறையினர் தேடிக் கொண்டிருக்கும் அதிபயங்கரத் தீவிரவாதி என்றும் இவருக்கு எதிராக ஜம்முவில் எண்ணற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் கேரள காவல்துறை நீதிமன்றத்தில் கூறியது அனைத்தும் பொய் என நிரூபணமாகியுள்ளது. ஸ்ரீநகர் லால் பஸாரைச் சேர்ந்த அல்தாபைக் கடந்த ஜனவரி 5 -ம் தேதி கேரளக் காவல்துறை கைது செய்தது. காஷ்மீரில் எண்ணற்ற தீவிரவாத வழக்குகளில் இவருக்கு தொடர்பு உண்டு எனவும் வழக்குகளிலிருந்து தப்புவதற்காக கேரளத்தை இவர் மறைவிடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் எனவும் இவர் வெளியில் வந்தால் தேசவிரோதச் செயல்பாடுகளில் ஈடுபடுவார் எனவும் காவல்துறை நீதிமன்றத்தில் வாதிட்டதைத் தொடர்ந்து அல்தாபைக் காவல்துறை பொறுப்பில் (custody) நீதிமன்றம் விட்டது. பின்னர் பிணையில் வெளிவரத் தடைவிதித்து விய்யூர் சிறைச்சாலையில் இவரை அடைத்தது. அல்தாப் கைது செய்யப்பட்ட அடுத்தச் சில தினங்களில் கேரள உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன் வெளி மாநிலங்களில் இருந்து கேரளாவில் குடியேறியிருக்கும் அனைவரையும் காவல்துறை கண்காணிப்பில் கொண்டு வருவோம் எனவும் வெளி மாநிலங்களில் இருந்து வியாபார விஷயமாகக் கேரளம் வருவோர் அனைவரும் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் அறிவித்தார். தொடர்ந்துச் சமீப காலங்களில் தீவிரவாதிகள் கேரளத்தை மறைவிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர் எனவும் அவர்களைக் கண்டறிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். இன்ன காரணம் என ஒன்றும் கூறாமல் ஜனவரி 5 ஆம் தேதி கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அல்தாபினைக் காவல்துறையினர் கைது செய்தனர் என அவரின் தந்தை பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். "கடந்த 8 வருடங்களாக அல்தாப் குமளியில் வியாபாரம் செய்து வருகிறார். கேரளத்தைச் சேர்ந்த இரு பார்ட்னர்களும் இவருடன் வியாபாரப் பங்காளிகளாக உள்ளனர். கடந்த 8 வருடத்தில் ஒரு முறை கூட காவல்துறை அவரிடம் எந்த ஒரு விஷயத்தைக் குறித்தும் விசாரணை நடத்தவில்லை. திடீரென ஒருநாள் வந்து காஷ்மீரில் எண்ணற்ற வழக்குகளில் இவர் தேடப்படுகிறார் எனக் கூறியது வியப்பாக உள்ளது. ஒரு வழக்கில் கூட அல்தாபைக் காஷ்மீர் காவல்துறை தேடவில்லை என அறிவித்தப் பின்னரும் அவனை விடுவிக்காததன் காரணமென்ன?" என அல்தாபின் தந்தை கேள்வி தொடுத்தார். அல்தாபைக் காண்பதற்கோ பேசுவதற்கோ கேரளக் காவல்துறை எவரையும் இதுவரை அனுமதிக்கவில்லை. அல்தாபினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி அவரைக் கைது செய்து ஊடகப் பரபரப்பை ஏற்படுத்தவும் அதன் மூலம் தீவிரவாதியைக் கைது செய்து விட்டோம் என்ற பெயரில் புகழடையவுமே கேரள காவல் துறையினர் விரும்புகின்றனர் என அல்தாபின் வழக்கறிஞர் கூறினார். அல்தாப் காவல்துறையின் எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அல்தாபின் தந்தை தெரிவித்தார் தற்பொழுது கேரளத்தில் வாழும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் முக்கியமாக காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் முழு கண்காணிப்பில் காவல்துறை வைத்துள்ளது. எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றிப் பொய்க்குற்றச்சாட்டுகளைப் புனைந்து ஒரு முஸ்லிமைத் தீவிரவாதியாக்கும் மற்றவர்களின் முன்னுதாரணத்தை கல்வியறிவில் சிறந்தக் கேரளத்தைச் சேர்ந்தக் காவல்துறையும் மேற்கொள்ள ஆரம்பித்திருப்பது, மற்றவர்களைப் போன்று இஸ்லாத்தின் மீதான பயம் கேரளத்தையும் ஆட்டுவிக்க ஆரம்பித்து விட்டது என்பதற்கான தெளிவாகும். அல்தாபைக் கைது செய்யக் கூறப்பட்டக் காரணமும் நீதிமன்றத்தில் கேரளக் காவல்துறை அவரைக் கைது செய்வதற்கும் அவருக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பதற்கு அடுக்கியக் காரணங்களும் புனையப்பட்ட அப்பட்டமான பொய்கள் என காஷ்மீர் காவல்துறையின் அறிக்கையிலிருந்துத் தெளிவான பின், அல்தாபைத் தீவிரவாதியாக்க அவரின் நீண்ட தாடியும் முஸ்லிம் பெயருமே காரணமின்றி வேறென்ன?


நன்றி:http://www.satyamargam.com

Saturday, January 19, 2008

இந்தியாவிற்கு அதிக வருவாயைத் தருவது யார்?

அந்நிய செலாவணியை அதிகம் ஈட்டுவதில் சீனா, மெக்சிகோ ஆகிய முன்னணி நாடுகளை பின்னுக்குத்தள்ளி, நம்நாடு முதன்மை பெற்றுள்ளது.
உலக வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் இதைத் தெரிவிக்கிறது.வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் மூலம், இந்தியாவுக்கு ஓர் ஆண்டுக்குக்கு 25.7 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் ஒரு லட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் ஆகும். உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட சீனாவுக்கு 22.5 பில்லியன் டாலரும், மெக்சிகோவுக்கு 24.7 பில்லியன் டாலரும் அந்நிய செலாவணியாகக் கிடைக்கின்றன.
இந்தியாவிற்கு வெளிநாட்டில் பணிபுரிபவர் களின் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி மேற்கண்ட முன்னணி நாடுகளையும் முந்தி விட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் ஈட்டுகின்ற வருவாய் நாட்டின் ஒட்டுமொத்த ராணுவ செலவினைக்கு நிகரானதாகும்.
தேசிய நிதிநிலை அறிக்கையில், கல்விக்காக ஒதுக்கப்படும் தொகையை விட, வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூலம் இந்தியா ஈட்டும் தொகை 5 மடங்கு அதிகமாகும்.
வருமான வரி, மற்றும் சொத்துவரி மூலம் நாட்டுக்கு கிடைக்கும் வருவாயை விடவும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகமாகும்.வெளிநாடுகள் நம் நாட்டில் செய்துள்ள நேரடி முதலீடுகளை விடவும் இத்தொகை மூன்று மடங்கு அதிகம் என்பது வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய செய்தியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3 விழுக்காட்டிற்கு இது சமமானதாகும்.
இந்தியாவிற்குக் கிடைக்கும் அந்நிய செலா வணியை அளிப்பதில் கேரளமும், தமிழகமும் முன்னிலை வகிக்கின்றன. கர்நாடகா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகியவை முறையே அடுத்தடுத்த இடத்தை பிடிக்கின்றன. திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கல்வி மையம் நடத்திய ஆய்வில் கேரளத்தில் 25 விழுக்காடு ஊர்களில், குடும்பத்திற்கு குறைந்த பட்சம் நால்வர் வெளிநாட்டில் பணிபுரிவது தெரிய வந்துள்ளது.
இந்தியாவிலிருந்து சுமார் 10 மில்லியன் பேரும், மெக்சிகோ மற்றும் ரஷ்யாவிலிருந்து சுமார் 11.5 மில்லியன் பேரும் வெளிநாட்டில் பணிபுரிவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
அந்நியச் செலாவணியின் பெரும் பகுதி நிதியை அனுப்புபவர்கள், மருத்துவ, பொறி யியல், கணிணித்துறை ஆகியவற்றை சேர்ந்தவர்கள் அல்ல, சாதாரணக் கூலி வேலைக்காகச் சென்றவர்கள் என்பது ஆச்சர்யமான உண்மையாகும்.மேற்கண்ட தகவல்கள் உலக வங்கியால் வெளியிட்டப்பட்டவை ஆகும். சொந்தங் களைப் பிரிந்து, பிறந்த மண்ணைத் துறந்து, வெளிநாடுகளில் கடும் உடலுழைப்பை மேற் கொள்பவர்கள் தான் இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டையே ஈடு செய்கின்றனர். இவற்றில் மிகப்பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. இத்தகைய மிகப்பெரிய உதவியை சொந்த நாட்டிற்குச் செய்து கொண்டிருப்பவர்களின் நிலை இங்கு எப்படி உள்ளது?
வருவாய் தேடி, பாலைவனம் நோக்கி சிறகடித்த, விசாப் பறவைகளின் நிலை, பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. சிறப்புச் சலுகைகள் தரப்பட வேண்டிய அவர்களுக்கு, உரிய உரிமைகள் கூட மறுக்கப்படுவதை அறிந்தால் மனம் கசக்கும்.
வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. நாடுதோறும் சொந்த பந்தங்களைப் பிரிந்து தூரதேசங்களில் உழைப்பவர்களின் குடும்பங் களில் பிரச்சினை என்றால், அவர்களை அலைக்கழிப்பது, பணம் பிடுங்குவது, போன்ற மனசாட்சியற்ற செயல்களும் இங்கு அரங்கேறுவது நம் கவனத்திற்கு வருகின்றன. நாட்டிற்கு வருமானம் ஈட்டிக் கொடுப்பவர் களின் பிள்ளைகளுக்கு கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்க மற்றவர்களை விட அதிகக் கட்டணம் கட்ட வேண்டியுள்ளது.
இந்தக் குறைபாடுகள் களையப்படுவது தான் நாட்டின் நன்றியுணர்ச்சிக்கு அடையாளமாக இருக்கும்.


நன்றி:www.tmmkonline.org

Wednesday, January 16, 2008

ஆட்சியாளர்கள் சிந்திக்கட்டும்


அன்று முதல் இன்று வரை பொதுமக்களது பணத்தை சுருட்டுதல், அரசியல் சாசனத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி சிறுபான்மையினரின் உரிமைகளில் கைவைத்தல், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டு மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதித்தல் இன்னும் உங்கள் பாதங்களுக்குச் செருப்பாக இருந்து தொண்டாற்றுவோம் என்று போலி வார்த்தைகளைக் கூறி ஓட்டுக்களுக்காக மக்களை ஓட்டாண்டியாக்குதல் என்று ஆட்சியாளர்களாலும் அதிகார வர்க்கத்தினாலும் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்று ஹர்ஷத் மேத்தா என்றால் இன்று டெல்கி என்று ஆட்கள்தான் மாறுகிறார்களே தவிர மோசடிக் கலாச்சாரம் ஒழிந்தபாடில்லை.
தனி மனிதர்கள் தமது மூளையைப் பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள் என்றால் ஆட்சியதிகாரம் படைத்தவர்கள் தமது அதிகாரம் மற்றும் செல்வாக்கினைப் பயன்படுத்தி ஏமாற்றுகிறார்கள்.
மக்களிடம் நாம் இதுபற்றி பேசினால் இவங்களை எல்லாம் திருத்தவே முடியாது, என்று சாதாரணமாகப் பேசிக்கொள்ளும் அளவுக்கு ஏமாற்றுதல், மோசடி செய்தல் என்பன மக்கள் மத்தியில் பழகிப்போன ஒன்றாக மாறிவிட்டது.
ஹர்ஷத் மேத்தா என்ற பங்குச் சந்தை முகவர் 6000 கோடிக்கு மேல் வங்கிப்பணத்தை மோசடி செய்தார் என்றதும் அது மக்கள் மத்தியில் மிகப்பெரும் செய்தியாகப் பேசப்பட்டு தூக்குத்தண்டனை கிடைத்துவிடும் என்றுகூட சிலர் நினைத்தனர். ஆனால் இன்றுவரை அவர் அரசாங்க செலவில் சிறையில் பாதுகாப்பாக உள்ளார். ஆக மோசடி என்பது தொடர்ந்து நடைபெற்றாலும் அது அடுத்த சில நாட்களுக்குள் டீக்கடைகளில் பேசிக்கொள்ளும் ஒரு செய்தி என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் எந்தவிதமான எதிர் விளைவுகளும் ஏற்படுவதில்லை. எந்த அளவிற்கு அவர்கள் பழகிப் போய்விட்டார்கள் என்பதைக் கண்டுகொள்ள கடந்த சில ஆண்டுகளாய் நடந்துவரும் ஊழல் மற்றும் மோசடிகளை சற்று உற்று நோக்குவோம்.
குறுக்கு வழியில் சம்பாதித்து கோடீஸ்வரராக வேண்டும் என ஆசைப்படுபவர்கள் உடனே ஆரம்பிக்கும் தொழில் பைனான்ஸ் கம்பெனிதான். கடந்த சில ஆண்டுகளில் இந்த ஃபைனான்ஸ் கம்பெனிகளால் ஏமாற்றப்பட்டவர்கள் ஏராளம். கடந்த 1996 லிருந்து 2000ம் வரை நிதி நிறுவனங்கள் மோசடி செய்த பணம் மட்டும் 1800 கோடி ரூபாய். கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் தங்கள் முதலீடுகளை இழந்தனர். குறிப்பாக பல முதியோர்கள் தங்கள் பிள்ளைகளின் மேல் நம்பிக்கை இழந்து தங்கள் சொத்துகள் மற்றும் ஓய்வூதியம் (Pசழஎனைநவெ குரனெ) களை போலியான வட்டி மாயையில் சிக்கி தங்கள் எதிர்காலத்தையே இழந்தனர். எத்தனையோ பேர் தங்கள் எதிர்கால திட்டங்கள் மற்றும் பெண்மக்களின் திருமணச்செலவுக்காக வைத்திருந்த நகைகளையும், பணங்களையும் இழந்து நிற்கின்றனர். இந்த இழப்பை தாங்கமுடியாமல் 30 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பார்ப்பதற்கு நம்பிக்கையான வசதியான அலுவலகங்கள், கவர்ச்சியான ஹை-டெக் விளம்பரங்கள், மங்களகரமான பெயர்கள் இதுதான் மக்களை வீழ்த்தும் சூட்சுமம். ஸ்நேகம், அனுபவ், சுதர்சன் சிட் பண்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் சுருட்டிய பணம் மட்டும் 1000 கோடிக்குமேல் கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த தொடர் மோசடிகளில் பாடம் கற்று மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டார்களா? என்றால் இல்லை. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.
தமிழ்நாடு காவல்துறை தலைமை வெயியிட்டுள்ள அறிக்கையின் படி 2000 முதல் 2004 வரை 1748 கோடியே 43 லட்சம் இந்திய ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளன. இது குறித்து கிட்டத்தட்ட 1000 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சமீபகாலமாக பத்திரிக்கைகளில் எழுதப்பட்டுவரும் போலிமுத்திரைத்தாள் மோசடியில் மட்டும் 38,000 கோடி ரூபாய் கர்நாடகம், தமிழ்நாடு குஜராத், மற்றும் மஹாராஹ்டிர மாநிலங்களில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சி.பி.ஐ கைதுசெய்துள்ள பிரதான குற்றவாளிகள் அப்துல் கரீம் டேல்கி மற்றும் சென்னை மாநகர முன்னாள் டி.ஐ.ஜி முகம்மது அலி போன்றவர்களும் இத்தகைய மாபாதக மோசடிகளில் ஈடுபட்டிருப்பதுதான் வேதனையான செய்தி. இதுசம்பந்தமாக பலரிடம் நடத்திய சோதனையில் 162 கோடிமதிப்புள்ள போலி முத்திரைத்தாள்கள் கைப்பற்றப்பட்டு நிஜாமுதீன் என்பவரையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டிய முஸ்லிம்கள் இத்தகைய மாபாதக செயல்களை செய்யத் துணிந்ததேன்??
இப்படி மக்களை ஏமாற்றுவோர் ஒருபுறம் ஏமாற்றிக்கொண்டிருக்க அரசாங்கம் என்ன செய்துகொண்டிருக்கிறது? காவல்துறையினர் ஏன் இவர்களை அலட்சியமாக விட்டார்கள்? என்று அப்பாவி பொதுமக்கள் கேள்வி எழுப்பலாம்! காரணம் இப்படி மோசடியில் சிக்கிக்கொண்டவர்கள் எளிதில் ஜாமீனில் வெளிவந்து விடுகின்றர். பின் நல்ல(?) வழக்கறிஞர்களை வைத்து காலாகாலமாக வழக்குகளை நடத்திக்கொண்டிருக்கின்றனர். மற்றொரு காரணம் ஆமை வேகத்தில் நடைபோடும் நீதித்துறை. உதாரணமாக ஆர்.பி ஃபைனான்ஸ் என்ற நிறுவனம் 2000ம் ஆண்டு ஜுலை மாதம் ஒரு லட்சம் பேரிடம் சுமார் 180 கோடி ரூபாயை மோசடி செய்ததாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும் விசாரணை தொடங்கியது 2004ம் வருடம்தான். வழக்குகளை விசாரிக்காமல் 4 ஆண்டுகள் வழக்கு நிலுவையில் இருந்தது. அப்படியே வழக்குகள் விசாரிக்கப்பட்டாலும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் பெரும் தண்டனைகளிலிருந்து தப்பிவிடுகின்றனர்.
2000 மற்றும் 2001ம் ஆண்டுகளில் பல கோடி ரூபாய் சுருட்டி மாட்டிக்கொண்ட போலிமுத்திரைத்தாள் வழக்கும் கூட இந்த நிலையில்தான் உள்ளது. இன்றுவரை வழக்குகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்குமுன் எல்வின் பேங்கர்ஸ் என்ற நிறுவனம் 27 லட்சம் மோசடி செய்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எல்வின் ஏசுதாஸ், அந்தோணி, அற்புதம், டேவிட் ராஜா மற்றும் செல்வி என்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டு வெற்றிகரமாக தீர்ப்பும் வழங்கப்பட்டது. தண்டனை என்ன தெரியுமா? 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை (அதாவது பாதுகாப்பான இடம் மற்றும் உணவு, உடை வசதிகள் இலவசம்) மற்றும் குற்றவாளிகள் ஒவ்வொறுவருக்கும் தலா 27,000 ரூபாய் அபராதம் இதில் இன்னும் ஓர் வேடிக்கை என்னவென்றால் இதே நபர்கள் மீது 97 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இன்னும் ஓர் வழக்கு நாகர்கோவில் மாஜிஸ்திரேட்டில் நிலுவையிலுள்ளது. இதுதான் இந்தியாவின் யதார்த்த நிலைமை.
இப்படி ஏற்படும் மோசடிக்காரர்களை குளிர்விடச்செய்த இத்தகைய இலேசான தண்டனைகளும் ஒர் முக்கியக் காரணம். மோசடி செய்யப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவோம். குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவோம் என்று அரசியல் தலைவர்களும், அதிகார வர்க்கத்தினரும் பாராளுமன்றத்தில் கர்சித்துக் கொண்டிருப்பது ஒருபுறம் இருந்தாலும் நாட்டை ஆளுவோரான இவர்கள் நேர்மையாக நடந்து கொண்டார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. எதிர்கட்சிகள் ஆளும் கட்சியினரை ஊழல் குற்றம் சாட்டுவது பின் எதிர்கட்சி ஆட்சியில் அமர்ந்ததும் மீண்டும் அவர்களே அந்தத் தவறைச் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது.
இத்தகைய ஊழல் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான்கள் யார் என்று வெளிநாட்டு நிறுவனம் ஒன்று நடத்திய உலகளாவிய தரவரிசையின்படி இந்தியாவிற்கு 3ஆவது இடம் கிடைத்திருக்கிறது.
இது சம்மந்தமாக தினமணி இதழில் சகோதரர் சுகதேவ் எழுதிய ஊழல் உலகம் என்ற கட்டுரையின் சிலவரிகளை மேற்கோளிடுவது பொருத்தமாக இருக்கும். ஷ… டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச ஊழல் மதிப்பீட்டு அமைப்பு கூறுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 9-ம் தேதியை ஊழல் எதிர்ப்புத்தினமாக கடைப்பிடிக்கிறது. இ;ந்த தினத்தை ஒட்டி மேற்கண்ட அமைப்பு ஊழலில் உலக நாடுகளின் தரவரிசையை ஆராய்ந்து ஓர் அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது.
உலக அளவில் அரசியல் கட்சிகள்தான் அதிக அளவில் ஊழல் புரிகின்றன என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ள அந்த அமைப்பு, இந்த வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
மொத்தம் 62 நாடுகளில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த 50,000 பேரிடம் திரட்டப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஊழல் மிகுந்துள்ள நாடுகளை அந்த அமைப்பு வரிசைப்படுத்தியிருக்கிறது. இதில் ஈகுவேட்டர், அர்ஜெண்டினா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக ஊழல் நிறைந்த அரசியல் கட்சிகளைக் கொண்ட நாடாக இந்தியா இடம் பெற்றிருக்கிறது. பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 1 முதல் 5 புள்ளிகள் வரையிலான மதிப்பீட்டு முறையை அது கடைபிடித்திருக்கிறது. அதாவது ஒரு புள்ளிக்கு நெருக்கமாக இருந்தால் ஊழல் குறைவு ஒரு புள்ளியிலிருந்து இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்து புள்ளியை நோக்கிச் செல்லச் செல்ல ஊழல் அதிகம் என்று பொருள். அரசியல் கட்சிகள் ஊழலில் இந்தியா 4.6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. பரிபூரண ஊழலுக்கு இந்தியா நெருக்கமாக வந்துவிட்டது. அதாவது ஐந்து புள்ளி என்பது தொட்டுவிடும் தூரம்தான்!
உலக அளவில் அரசியல் கட்சிகளுக்கு அடுத்து ஊழல் நிறைந்த துறைகளின் வரிசையில் நாடாளுமன்றம், காவல் மற்றும் நீதித் துறைகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தியாவின் ஊழல் படிநிலையும் கிட்டத்தட்ட இதே வரிசையில் தொடர்கிறது. ஒரு சின்ன மாற்றம் மூன்றாவது இடத்திற்குப்பதிலாகக் காவல்துறை நான்காவது இடத்துக்கு அதாவது நீதித் துறைக்குப் பின்னால் வருகிறது. இந்த இறக்கத்தில் காவல்துறையை சற்றே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
அரசியல் கட்சிகளிலிருந்து மத அமைப்புகள் வரை 15 துறைகள் அல்லது பிரிவுகள் இந்த ஊழல் பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் புள்ளிகள் பெரும்பாலும் மூன்றுக்கும் நான்குக்கும் மேலாகத்தான் இருக்கின்றன. மீடியாவும் இந்தப் பட்டியலுக்கு விதிவிலக்கல்ல. மீடியாவில் இந்தியாவின் ஊழல் 2.7 புள்ளிகள். அதாவது இந்திய ஊடகங்களிலும் கணிசமாக ஊழல் நிறைந்திருக்கிறது என்று அர்த்தம். 2 புள்ளிகளுக்குக் குறைவாக இந்தியா பெற்றிருக்கும் ஒரே துறை ராணுவம் மட்டுமே. கெடுபிடிகள் அதிகம் இருந்தால்தான் நியாயம் ஓரளவுக்கேனும் காப்பாற்றப்படும் போலும். மத அமைப்புகளின் ஊழல் கணக்கு 2.7 புள்ளி தன்னார்வ சேவை அமைப்புகள் என்ற பெயரில் புற்றீசல் போல பெருகியிருக்கும் என்.ஜி.ஓக்கள் வட்டாரத்தில்கூட ஊழலுக்குக் குறைவில்லை. 2.7 புள்ளி. நல்ல சேவை!.
டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் நடத்திய இந்த ஊழல் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 45 சதவிகிதம் பேர் அடுத்த மூன்றாண்டுகளில் ஊழல் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்று கவலையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகளின் ஊழலைப் பொறுத்தவரையில் வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் என்று எந்தப் பாரபட்சமும் இல்லை. வளம் நிறைந்த நாடுகளான அமெரிக்காவும் பிரிட்டனும்கூட அரசியல் கட்சிகளின் ஊழலில் நான்கு புள்ளிகளுக்கு நெருக்கமாக இருக்கின்றன. இந்த விஷயத்தில் இரண்டு புள்ளிகளுக்குக் குறைவாக அதாவது அரசியல் கட்சிகளின் ஊழல் மிகக் குறைவாக இருக்கும் ஒரே நாடு சிங்கப்பூர் மட்டுமே. அங்கே சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றபடி ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் வளர்ச்சி பெற்ற நாடுகளைவிட வளரும் நாடுகளிலேயே ஊழல் அதிகம். வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் ஏற்கனவே திணறிக் கொண்டிருக்கும் இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு ஊழல் மிகப் பெரும் தடையாக இருக்கிறது.
அரசியல் கட்சிகள்தான் ஊழலின் பயிற்சி; களமாக இருப்பதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இங்கே ஆளாளுக்குத் தனிக்கட்சி திட்டத்துடன் வலம் வருவதற்கான காரணம் இப்போது புரிகிறது. விவரமான பார்ட்டிகள்!லஞ்சம் கொடுத்தாவது காரியத்தை முடிப்பவர்களைத்தான் சாமர்த்தியசாலி, திறமைசாலி என்றெல்லாம் பட்டம் சூட்டி இந்தச் சமூகம் கொண்டாடுகிறது. நேர்மையான வழியில் சென்று காரியத்தைச் சாதிக்க முடியாமல் போனால் சமூகக் கண்ணோட்டத்தில் அந்த மனிதன் தோற்றுப் போனவனாக ஆகிவிடுகிறான். பெரும்பாலானோர் தோற்க விரும்புவதில்லை.
சட்ட விரோதமாகக் குவித்த பணத்தில் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாகிக் கூச்சமில்லாமல் பலர் வலம் வருகிறார்கள். பொதுமதிப்பீட்டில் அவர்கள் ஜெயித்துக் காட்டியவர்கள்! அவர்களிடையே குறைந்தபட்சம் குற்ற உணர்வைக் கூட ஏற்படுத்த இயலாத சரித்திர சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.(நன்றி : தினமணி, டிசம்பர் 12, 2004)
எனவே ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கத்தினரும் சிந்திக்கட்டும். மறுமையை நம்பியிருக்கின்ற முஸ்லிம்கள் இத்தகைய மாபாதகச் செயல்களிலிருந்து முற்றாக விலகிக் கொள்ள வேண்டும்.
எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் (அல்-குர்ஆன், 3:161)
மேலும் ஆட்சியாளர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு அடியானுக்கு அல்லாஹ் ஆட்சி அதிகாரத்தை கொடுத்திருக்கிறான் அவன் அவர்களது நலனை காக்கவில்லை என்றால் அவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார். (ஆதாரம் : புகாரி)
எனவே பொதுமக்கள் சிந்திக்கட்டும். அவர்கள் சுருட்டிக்கொண்டே செல்லட்டும் என்று மக்கள் தங்களது வாயில் பூட்டுக்களிட்டவாறு இருந்துவிடக்கூடாது. தலைவர்களை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமை கொடுக்கப்பட்டுள்ள நாம் ஆட்டு மந்தைகளாக இருந்து விடாமல் தேர்தல் களங்களில் நமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். மோசடி செய்பவர்கள் உடனுக்குடன் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்று மக்களும், அரசும் உறுதியுடன் இருக்க வேண்டும்.
ஊழல் செய்யும் ஆட்சியாளர்களை பாரபட்சமின்றி பதவியிலிருந்து அப்புறப்படுத்திட வாக்குகளை அழிக்காது முறையாகப் பயன்படுத்தவேண்டும். தலைவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை விட்டொழிப்போம். சினிமாவில் காணும் இந்தியன் தாத்தாவை நிஜவாழ்வில் தேடி கால் தளர்ந்து களைப்படைவதை விட்டுவிட்டு ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் மற்றும் மோசடிப் பேர்வளிகளுக்கு எதிராய் ஜனநாயக முறையில் போராடுவோம். இது மக்கள் பணத்தை சுருண்டுவோருக்கு பாடமாக அமையட்டும். இன்ஷாஅல்லாஹ்.


நன்றி:http://www.islamkalvi.com/


Monday, January 14, 2008

என்னைக் கொன்று விடுவார்கள் தெஹல்கா செய்தியாளர் திடுக்கிடும் தகவல்

இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையாளர்களின் நேரடி வாக்கு மூலங்களை உலக அரங்கில் அம்பலப்படுத்திய தெஹல்கா செய்தியாளர் ஆசிஸ்கேதானுக்கு சங் பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இத்தகவலை ஆசிஸ் கெதான் A.F.P. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார். படுகொலைகளையும் பாலியல் வக்கிரங்களையும் இழைத்தவர்களும், சராசரி குஜராத்திகளும் கூட நடந்த பாதகச் செயல் குறித்து வெட்கப்படுவதாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு குஜராத்தியின் மனதிலும் விஷம் நிறைந்திருக்கிறது என்று வேதனை தெரிவித்த ஆசிஸ் கேதான் தன்னை கொலை செய்ய இரண்டு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சுற்றி வளைத்தது. நான் இரண்டு வாகனங்களில் உள்ளவர்களையும் நேரடியாகப் பார்த்தேன் நுண்ணிய காமெராக்களால் நான் படம் பிடித்து வேன் என எண்ணியதாலோ எண்ணவோ அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள்.
நான் என கடமையைச் செய்தேன் அது சிலருக்கு கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. அந்த சமூக விரோதிகள் தொலைபேசி வழியாகவும் ஈலிமெயில் மூலமாகவும் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். கொலையாளிகளின் பட்டியலில் என்பெயர் உள்ளது. நான் கொல்லப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது என மனம் வெதும்பி A.F.P. என்ற வெளி நாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ஆசிஷ் கேதான்.

Sunday, January 13, 2008

தற்கொலை தீர்வாகுமா?

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. சிலரின் வாழ்க்கை வசந்தம் வீசும் இன்பப் பூஞ்சோலையாகிறது, சிலரது வாழ்க்கையோ வறுமையும், துன்பமும் சுழன்று தாக்க வாழ்க்கையே சோகமாகி சுட்டெரிக்கும் பாலைவனமாக மாறிவிடுவதும் உண்டு. ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான், தனக்கு பிரச்சினையே வரக்கூடாது மற்றும் உலகின் சகல சுகமும் ஒருங்கே பெற்று இன்பத்தில் உலா வரவேண்டும் என்று, அதுதான் மனித இயல்பும்கூட. வெளி உலகில் வீராப்பு பேசும் எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை வந்துவிட்டால் உள்ளங்கள் உடைந்து கதறி கண்ணீர் சிந்தி நம்மால் இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் தடுக்கப்பட்ட செயலைச் செய்யவும் துணிந்து விடுகின்றனர்.பல இலட்ச மனித உயிர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலன் ஹிட்லர் கூட இறுதியில் தோல்வியை தாங்கமுடியாமல் மனம் உடைந்து உணவுக் கிடங்கில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சரித்திரம் நமக்கு உணர்த்துகிறது. அன்றாடம் பத்திரிக்கைளை புரட்டினால் இளம்பெண் தற்கொலை, காதல் ஜோடிகள் தற்கொலை, கள்ளக் காதலினால் தற்கொலை, கடன் தொல்லை தாங்க முடியாமல் தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை, பரிட்சையில் தோல்வியடைந்ததால் பள்ளி மாணவ-மாணவி தற்கொலை... என்று வகைவகையான தற்கொலை செய்திகள் ஏழை-பணக்காரர், ஆண்-பெண், சிறியவர்-பெரியவர் என்ற பேதமின்றி நடந்தேறுவதை காண முடிகிறது. இந்திய சுகாதார நிறுவனம் நடத்திய புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் ஒரு தற்கொலை இறப்பு நிகழ்கிறது, அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 240 இறப்பு தற்கொலையாய் நிகழ்கின்றன. இந்தியாவிலேயே மிக அதிகமானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலம் கேரளம் ஆகும். உலக தற்கொலை எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு பத்தில் ஒரு பங்கு ஆகும் (1/10). இது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் இந்த தற்கொலை இறப்புக்கள் விலைவாசி போல் ஏறிக்கொண்டேதான் போகின்றன.ஏன் இந்த கோழைத்தனம்? உயிரை மாய்த்துக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா? இவர்கள் நினைக்கின்றார்கள் பிரச்சினைகள் தனக்கு மட்டும்தான் வருகிறது. உலகிலேயே யாருக்கும் வராத தர்ம சங்கடம் ஏன் தனது வாழ்க்கையில் வந்துவிட்டது என்று மனம் உடைந்துதான் இத்தகைய முடிவை எடுக்கின்றார்கள். பிரச்சினைக்கு தீர்வு தற்கொலைதான் என்றால் இன்று உலகில் ஒருவரும் உயிர்வாழ முடியாது ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கின்றது, இருக்கும். ஏழைக்கு பணப்பிரச்சினை என்றால் பணக்காரருக்கு உடல் பிரச்சினை. சிலருக்கு பெற்ற மக்களால் பிரச்சினை என்றால் சிலருக்கு மக்களை பெற்றெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கங்கள், இவ்வாறாக ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உட்பட்டவனாகவே வாழ்கின்றனர். இன்னும் சோகங்களையும், கஷ்டங்களையும், ஏக்கங்களையும், ஆசைகளையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டு உதட்டில் புன்னகை சிந்தும் எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆக, பிரச்சினை என்பது தற்கொலை செய்பவருக்கு மட்டுமல்ல, ஊர் முழவதும், நாடு முழவதும் ஏன்! உலகம் முழவதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.பிரச்சினைகளும், கஷ்டங்களும்... தான் விரும்பினால் வருவதோ விரட்டினால் ஓடிவிடுவதோ அல்ல மாறாக, இறைவனின் ஏற்பாட்டின்படிதான் வருகின்றன. இதைப் புரியாமல் ஏன் இந்த தன்வதைகள் என்று இவர்கள் சிந்திப்பதில்லை. பிரச்சினைகளை சந்திக்கவே நேரமில்லை எனில் சிந்திக்க நேரமேது? என்கின்றனர். உலகளாவிய இந்த தற்கொலை செயலை தடுக்க மாற்று வழிதான் என்ன? அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைதான் என்ன? ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டால் பிரேதப் பரிசோதனை என்று நாட்கள் நகரும் பின் சில தடயங்கள் கிடைத்துவிட்டன இந்த தற்கொலைக்கு காரணம் என ஒருவர் கைது செய்யப்படுவார் ஆனால் தற்கொலை செய்து கொண்டவருக்கு இதனால் என்ன பயன்?

கடந்த வருடம் ஆந்திரா, கர்நாடாக மாநில விவசாயிகள் விளைச்சல் இல்லாமல் வறுமையில் தற்கொலை செய்து கொண்ட பின்னர் அரசு அவர்களுக்கு மானியம் அறிவித்தது ஆக, அரசு மேற்கொள்வதெல்லாம் வெறும் கண்துடைப்பதான். உண்மையில் இதற்கு தீர்வு என்ன? தற்கொலை என்ற இந்த இரத்தக் கறையை நம் வாழ்விலிருந்து துடைக்க விரட்ட வேறு வழியே இல்லையா?.தெளிவான மார்க்கம் கொடுக்கப்பட்டுள்ள நம் முஸ்லிம் சமுதாயம் கூட இந்த ஹராமான செயலில் ஈடுபடத்தான் செய்கின்றனர். நாடு விட்டு நாடு சம்பாதிக்க வந்தவர்கள் கூட ஊரில் தன் குடும்பப் பிரச்சினைகளின் காரணத்தால் பூட்டிய அறைகளில் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் அவலங்கள் பிழைக்க வந்த இந்த பூமியிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நம் சமுதாயத்திற்கே ஏன் இந்த நிலைமை. தனது உள்ளச் சுமைகளை நீக்க வேறு வழியே இல்லை என்று ஏன் இவர்கள் நினைத்துக் கொண்டார்கள். மார்க்கம் தெரியவில்லை. நாம் படைக்கப்பட்டதின் நோக்கம் புரியவல்லை. மாமறை கூறும் உன்னத வாழ்வியல் தத்துவங்களில் இருந்து இவர்கள் படிப்பினை பெறவில்லை.இறைவன் தன் திருமறையில் ... "நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம், ஆனால் பொறுமையுடையேர்க்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக!" (அல்குர்ஆன் 2:155)மனிதன் என்று பிறந்துவிட்டால் அனவது வாழ்வில் பலவேறு வழிகளில் இறைவன் சோதனை செய்வான் என்பதை இஸ்லாம் உணர்த்துகிறது. இம்மையின் சொற்ப கஷ்டங்களை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு மறுமையில் நிரந்தரமாய் சுவர்க்கத்தை இழக்க வேண்டுமா? சொல்லுங்கள் என் அன்பு சகோதர-சகோதரிகளே!"உங்களுக்கு முன் சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமையும், பிணியும் பீடித்தன, தூதரும் அவருடன் விசுவாசம் கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும் என்று கூறும்வரை அலைக்கழிக்கப்பட்டனர்" தெரிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் உதவி மிகச் சமீபத்தில் இருக்கின்றது (அல்குர்ஆன் 2:214) என்று மறுமையை நேசித்த உறுதியான ஈமான் கொண்டவர்கள் அனுபவித்த சோதனைகளை எடுத்துக் கூறி வல்ல இறைவன் உபதேசம் செய்கின்றான். மேலும் அவனது உதவியை சமீபத்தில் பெறவேண்டுமென்றால் சோதனை ஏற்பட்டுவிட்டால் துவண்டு போய்விடக் சுடாது. தொழுகைகயைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு தீமை ஏற்பட்டு விட்டதென்றால் அதற்கு பின்னால் இறைவன் ஒரு நன்மையை நாடி இருக்கிறான் என்று ஆறுதல் கொள்ள வேண்டும்."ஒவ்வொரு கஷ்டத்துடனும் ஒரு இலேசும் இருக்கின்றது" (அல்குர்ஆன் 94:6) என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டால் எவ்வளவு பெரிய கஷ்டம்-துன்பம் வந்தாலும் அதை வென்று சுவனத்தின் வாரிசுகளாகலாம்.மேலும் உயிர் என்பது அல்லாஹ்வின் உடைமை ஒரு மனிதனை எப்படி அவன் உருவாக்கி உயிரூட்டினானோ அதுபோல அவ்வுயிரை எடுக்கும் உரிமையும் அவனுக்கே உண்டு. இறைவனின் உடைமையை தனதாக்கிக் கொள்ள மனிதனுக்கு எவ்வித உரிமையும் இல்லை அவ்வாறு செய்பவர்களுக்கு சுவர்க்கம் ஹராமாகிவிடும்.உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களில் ஒரு மனிதருக்கு காயம் ஏற்பட்டது அவன் பதறினான், ஒரு கத்தியை எடுத்து தன் கையை அதனால் அறுத்து கொண்டான்! உதிரம் நிற்காமல் இருந்தான்! - என் அடியான் தன் உயிரைக் கொண்டு என்னிடம் அவசரப்பட்டு விட்டான்! அவனுக்கு சுவர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜுன்துப் இப்னு அப்துல்லாஹ், நூல்: புகாரி.எனவே தற்கொலை செய்துக் கொள்வதினால் இவ்வுலக பிரச்சினைகள் வேண்டுமானல் தீருமே ஒழிய, மறுமையில் அவனுக்கு பெரும் தண்டனை காத்திருக்கின்றது என்பதை ஒவ்வொரு இதயங்களும் மறந்துவிடக் கூடாது."எவர் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரோ அவர் நரகத்தில் எப்பொழுதும் உயரமான இடத்திலிருந்து விழுந்து கொண்டே இருப்பார், எவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாதோ அவரது கையில் விஷம் இருக்கும் அதை நரகத்தில் எப்போதும் குடித்துக் கொண்டே இருப்பார், எவர் இரும்பு ஆயுதத்தை கொண்டு தற்கொலை செய்து கொண்டாரோ அவர் கையில் அந்த இரும்பு ஆயுதம் இருக்கும் அதைக் கொண்டு எப்போதும் நரகில் தன் வயிற்றை கிழித்துக் கொண்டே இருப்பார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி), நூற்கள்: அஹமது, அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா.எனவே மறுமையில் பெரும் வேதனை காத்திருக்கின்றது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் பிரச்சினைகள் நமக்கு ஏற்பட்டுவிட்டால் தற்கொலை செய்து கொள்ளும் கோழைகளாக நாம் இருக்கக் கூடாது."அல்லாஹ்வை நினைவு கூறுவதின் மூலம் உள்ளங்கள் அமைதியடைகின்றன" (அல்குர்ஆன் 13:28) என்பதை நினைவில் கொண்டு கஷ்டங்கள் ஏற்படும் போது தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வராமல் இது எனது இறைவனின் ஏற்பாடு, அவன் அருளாளன் இதற்கு பின் அவன் எனக்கு ஏதோ நன்மையை தருவான் என்று ஆறுதல் கொள்ள வேண்டும். தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களை நீக்கக் கோரி இறைந்து இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்தினை செய்தால் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி உறுதி.

நன்றி:http://www.islamkalvi.com

பகுத்தறிவு தீர்ப்பளிக்கிறது

நாம் வாழும் இந்த பூமியில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வாழ்ந்து மடிந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இவர்களிடையே நிறத்தால், குணத்தால், அறிவால், மொழியால், உடல் அமைப்பால் இப்படி எத்தனையோ வித்தியாசங்கள் காணப்படுகின்றன. எவ்வளவுதான் வித்தியாசங்களையும் வேறுபாடுகளையும் மனிதர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டாலும் இவர்கள் எல்லோருடைய மூலப்பொருளும் ஒன்று தான். அந்த மூலப்பொருளான இந்திரியத்தில் எந்தவித வேறுபாட்டையும் காணமுடியாது. எல்லோருடைய இரத்தமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. மனிதன் என்ற வட்டத்திற்குள் தான் எல்லோரும் இருக்கிறார்கள்.
மனிதன் தோன்றிய வரலாற்றை தலைமுறை தலைமுறையாக ஆராய்ந்து பார்த்தால் கடைசியாக ஒரே ஒரு மனிதனைத்தான் போய் அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த அடிப்படையில் பார்க்கும் போது அகில உலகத்திலுள்ள அத்தனை மனிதர்களும் ஒரே ஒரு தாய் தந்தையிலிருந்து வந்தவர்கள் தான் என்பதை சாதாரண அறிவுடையவர்களும் உணர முடியும்.
எல்லா மனிதர்களும் ஒரு தாய் மக்களே, எல்லோரும் சகோதரர்களே, மனிதர்கள் என்ற அடிப்படையில் எல்லோரும் சமம். அவர்களிடையே எந்தவித பாகுபாடும் கிடையாது. ஒருவருக்கொருவர் மனிதநேயத்தோடும் அன்போடும் பாசத்தோடும் வாழவேண்டும்.இந்த உண்மையை 1400 வருடங்களுக்கு முன்னரே பரிசுத்தக் குர்ஆனில் இவ்வாறு இறைவன் கூறுகிறான்.மனிதர்களே! ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்து தான் உங்கள் எல்லோரையும் நாம் படைத்தோம். (அல்குர்ஆன் 49:13)
மனிதர்களே! ஒரே ஆத்மாவிலிருந்து உங்கள் எல்லோரையும் படைத்து, வளர்த்து, காத்து, பரிபாலித்து, இரட்சிக்கின்ற இறைவனை மட்டும் அஞ்சிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 4:1)
அந்த இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். (அல்குர்ஆன் 4:36)
அந்த இறைவனாகிய அல்லாஹ் ஒருவன்தான். அவன் தேவையற்றவன். அவன் யாரையும் பெறவுமில்லை. யாராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகர் யாருமில்லை. (அல்குர்ஆன் 112:1-5)
மனிதனுக்கு மேலாக ஒரு சர்வ வல்லமை பெற்ற மிகப்பெரிய சக்தி ஒன்று உண்டு என்று பகுத்தறிவு உணர்த்துகிறது. ஆன்மீகத்தை நம்புகின்ற அனைவருமே இதனை இறைவன் என்று ஒப்புக்கொள்கின்றனர். சிந்தனையை சற்று ஆழமாகச் செலுத்தும் போது இறைவனைப் பற்றி உள்ளம் கேள்விகள் பல எழுப்புகின்றன.
யார் இந்த இறைவன்? அவன் ஒருவனா? இருவர்களா? மூவர்களா? அல்லது அதற்கு அதிகமானோரா? இறைவன் என்பவனின் குணாதிசயங்கள் என்னென்ன? அவனுடைய பண்புகள் என்ன? அவனைப் பார்க்க முடியுமா? அவனுடைய சக்திகள்தான் என்ன? அவன் குறிப்பிட்ட நாட்டிற்கு, குறிப்பிட்ட மக்களுக்கு, குறிப்பிட்ட பூமிக்கு மட்டும் தான் இறைவனா? அல்லது எல்லோருக்கும், எல்லா நாட்டவருக்கும், எல்லா உயிரினங்களுக்கும், எல்லா கிரகணங்களுக்கும் அவன் ஒருவன்தான் இறைவனா? என்பன போன்ற கேள்விகள் பல எழுகின்றன.
மனிதனுக்குறிய சிறப்பம்சமே பகுத்தறிவு தான். எனவே இந்த பகுத்தறிவை நாம் பயன்படுத்தி மேற்கண்ட கேள்விகளுக்கு விடைகளை நாம் கண்டறியலாமே! பகுத்தறிவை நாம் பயன்படுத்தும் போது இறைவன் எத்தனை என்ற கேள்விக்கு முதலில் விடை கிடைக்கின்றது. ஒன்றிற்கு மேற்பட்ட கடவுள்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொன்றை நினைக்க, அதனை செயல்படுத்த விரும்பினால் - ஒரு கடவுள் ஒருவரை தண்டிக்கவும் மற்றொரு கடவுள் அவரை மேம்படுத்தவும் முனைந்தால்-முடிவு?! எனவே பகுத்தறிவு சொல்கிறது ஒரே அதிகார மையம், ஒரே சக்தி, ஒரே இறைவன்.
மனிதனைப் போன்றே கடவுளும் இருந்தால், மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் வேறுபாடு இல்லாமல் போய்விடுமே!? நமக்குறிய பலவீனங்கள் அவரிடமும் இருந்துவிடுமே!? எனவே இறைவன் நம்மிடமிருந்து மாறுபட்டுத்தான் இருக்க வேண்டும் என்று நமது பகுத்தறிவு கூறுகிறதல்லவா? தயவு செய்து சிந்தனையை செலுத்துங்கள்.
1) நாம் உணவு உட்கொள்கிறோம். எனவே இறைவன் உணவு உட்கொள்ளாதவனாக இருக்க வேண்டும். மேலும் அவன் நமக்கு உணவு அளிப்பவனாக இருக்க வேண்டும். 2) நாம் பிறரிடத்தில் தேவையுடையவராக இருக்கிறோம். இறைவன் எவரிடமும் தேவையற்றவனாக இருக்கவேண்டும். 3) நாம் தாயின் வயிற்றில் பிறக்கின்றோம், எனவே இறைவன் தாய், தந்தை இல்லாதவனாக இருக்க வேண்டும். அவன் யாராலும் பெறப்படாதவனாகவும் யாரையும் பெற்றெடுக்காதவனாகவும் இருக்க வேண்டுமல்லவா? 4) நமக்கு மரணம் உண்டு, எனவே இறைவன் மரணமடையாதவனாக - நித்திய ஜீவனான- இருக்க வேண்டும். 5) நாம் ஓய்வு எடுக்கின்றோம். உறங்குகின்றோம். உழைப்பிற்குப் பிறகு நமக்கு களைப்பு ஏற்படுகிறது. நமக்கு மாற்றமாக இறைவன் ஓய்வு தேவையற்றவனாக, உறங்காதவனாக, களைப்பற்றவனாக இருக்க வேண்டும்.6) நமக்கு அழிவு ஏற்படுகின்றது. எனவே இறைவன் அழியாதவனாக (என்றும் நிலைத்தவனாக) இருக்கவேண்டும்.7) நாமும் ஏனய பொருட்களும் படைக்கப்பட்டவைகளே! எனவே இறைவன் படைக்கப்படாதவனாக அதே சமயம் அனைத்தையும் அனைவரையும் படைத்தவனாக இருக்க வேண்டும்.8) நாளை நடப்பதை நாம் அறியமுடியாது. ஆனால் இறைவன் நாளை நடப்பதை அறிபவனாக இருக்க வேண்டும். மறைவானவற்றின் மீது அவனுக்கு முழு அறிவு இருக்க வேண்டும். 9) நாம் நினைப்பதையெல்லாம் நம்மால் செயல்படுத்த முடியாது. எனவே இறைவன் (நமக்கு மாற்றமாக) அவன் நினைத்ததை முடிப்பவனாக இருக்கவேண்டும்.இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட இறைவன் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பகுத்தறிவு எப்படி எதிர்பார்க்கிறது?!
இறைவன் கருணையாளனாக, அன்பானவனாக இருக்கவேண்டும். நாம் நன்மை செய்தால் நமக்கு பரிசளிக்கவும் நாம் தீமை செய்தால் நம்மை தண்டிக்கும் குணங்களைப் பெற்றிக்க வேண்டும். செய்த தீமைகளுக்கு மனம் வருந்தினால் நம்மை மன்னிக்கும் குணம் உடையவனாகவும் இருக்கவேண்டும். நமக்கோ பாதுகாப்புத் தேவைப்படுகிறது. எனவே இறைவன் பாதுகாப்புத் தேவைப்படாதவனாக அதேநேரம் நமக்கு பாதுகாப்பு அளிப்பவனாக இருக்க வேண்டும்.
அவன் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கோ, மொழியினருக்கோ, ஜாதியினருக்கோ, நாட்டினருக்கோ மட்டும் இறைவனாக இல்லாமல் மனித குலம் முழுமைக்கே இறைவனாக இருக்கவேண்டும். நம் தோற்றத்தையோ, மொழியையோ, குலத்தையோ பார்க்காமல் நம் உள்ளத்தை - நம் செயல்களை பார்ப்பவனாக, எடை போடுபவனாக- இருக்க வேண்டும். தீமை செய்து, அட்டூழியம் செய்து மனித உரிமைiளை மீறுபவர்களுக்கு அவர்கள் இறந்து விட்டாலும் கூட, பின்பு எழுப்பி விசாரணை செய்து தண்டனையளிப்பவனாக இருக்கவேண்டும். எந்நிலையிலும் நீதி தவறாதவனாக இருக்க வேண்டும். நம்மைப் படைப்பவனாக, பரிபாலிப்பவனாக இருக்கவேண்டும். நமக்கு நேர்வழி காட்டுபவனாக இருக்கவேண்டும். நமக்கு ஒரு தெளிவான வாழ்க்கைத் திட்டத்தை வகுத்துத் தருபவனாக இருக்கவேண்டும். இவ்வாறு இறைவனைப் பற்றிய சிந்தனையை பகுத்தறிவு விவரிக்கிறது.இப்படி பகுத்தறிவுக்கு மாற்றமில்லாத ஒரே ஒரு இறைவனைத்தான் இஸ்லாம் அறிமுகம் செய்கிறது.
இஸ்லாம் 1. இது ஒரு மதமல்ல. ஒரு அழகிய மார்க்கம்.2. இது மனிதனால் தோற்றுவிக்கப்பட்டதல்ல. இறைவனால் அருளப்பட்டது.3. சிந்தனைக்கும் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்டதல்ல. சிந்திக்கவும் பகுத்தறிவைப் பயன்படுத்தவும் தூண்டும் வற்புறுத்தும் ஒரு நெறி.4. வன்முறைக்கும் துவேசத்திற்கும் இங்கு இடமேயில்லை. மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை என்பது இதன் அடிப்படைக்கொள்கை.5. ஜாதி, இன, மொழி வேறுபாடுகள் இங்கில்லை. ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்ற முறையில் அமையப்பெற்றது. உயர்வு தாழ்வுகள், மேல்ஜாதி கீழ்ஜாதி, ஏழை பணக்காரன், அரசன் ஆண்டி, படித்தவன் பாமரன் போன்ற வேறுபாடுகளை ஓரம்கட்டிவிட்டு நல்லவன் தீயவன் என்ற அடிப்படையிலேயே அணுகும் ஒரு மார்க்கம். 6. வெறும் சடங்கு சம்பிரதாயங்களைக் கொண்டுள்ள மதமன்று. இதுஒரு அழகான முழு வாழ்க்கைத் திட்டம். 7. உலகின் மனித குலத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கும் ஒரு நீதித்திட்டம், பொருளாதாரக் கோட்பாடு, சட்ட இயந்திரம். 8. பொய், களவு, சூது, மது, விலைமாது, லஞ்சம் லாவண்யம், அடக்குமுறை, அடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை வேரோடு ஒழிக்கும் ஒரு பகுத்தறிவுப் பாசறை. 9. மனித உரிமைகளை நிலைநிறுத்தும் ஒருமிகப் பெரிய வழிமுறை. விஞ்ஞானம் இதற்கு எதிரல்ல. இஸ்லாம் ஒரு விஞ்ஞானப் பூர்வமான அணுகுமுறை மார்க்கம் தான். 10. சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலை நிறுத்தி மனிதன் மனிதனாக வாழ்வதற்கும், சாந்தி சமாதானம் அடைவதற்கும் வழிகாட்டும் வாழ்க்கைத் திட்டம் தான் இஸ்லாம்...அன்பு சகோதரர்களே!
அறிவுப்பூர்வமாக தயவு செய்து சிந்தியுங்கள். உங்கள் இறைவனைப் பற்றி நீங்களே சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் ஏன் அறிய முற்படக்கூடாது?? இஸ்லாம் தந்துள்ள அறிவுப்பெட்டகமான குர்ஆனை நீங்கள் ஏன் ஆய்வு செய்யக்கூடாது?? ஒரு முயற்சி செய்யுங்களேன்.உங்களை அன்புடனும் பணிவுடனும் அழைக்கிறோம். உங்கள் பகுத்தறிவு பயன்படட்டுமே!
அல்லாஹ்வாகிய இறைவன் அவன் ஒருவனே! அவன் எந்த தேவையுமற்றவன். அவன் யாரையும் பெறவுமில்லை. யாராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை என்று கூறுங்கள். (திருக்குர்ஆன் 112:1-5)

நன்றி: http//www.islamkalvi.com