ஈராக்கில் இரத்த வெள்ளம்சதாம் கொல்லப்பட்ட ஓராண்டுக்குப் பின்னால்...
ஜி. அத்தேஷ்
கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி ஈராக்கில் அதிகாலை 6 மணியளவில், அந்நாட்டின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் அமெரிக்கத் தூண்டுதலின் பேரில் தூக்கிலேற்றி படுகொலை செய்யப்பட்டார்.சர்வதேச வரலாற்றில் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக உயிரை உருவி தெருவில் எறிந்த மாவீரர்கள் கூட்டத்தில் சதாமுக்கும் ஓர் இடம் கிடைத்தது.மறுநாள் விடிந்தால் ஜனவரி முதல் நாள். முஸ்லிம்களுக்கு தியாகத் திருநாள், கிறிஸ்தவர்களுக்கு புத்தாண்டு பிறப்பு. துக்கத்தை முஸ்லிம்களுக்கும், கொண்டாட்டத்தை கிறிஸ்தவர்களுக்கும் கொடுத்துவிட்டதாக மதவெறிபிடித்த ஜார்ஜ் புஷ் மகிழ்ந்திருக்கக் கூடும். ஆனால் முஸ்லிம்கள் மட்டுமல்ல, உலகம் தழுவிய சாமானிய கிறிஸ்தவ மக்களும் கூட இதை அநீதி என்றார்கள்.இன்று ஓராண்டு நிறைவடைந்தாலும், அந்த படுகொலையின் வடு மறையவில்லை. ஆக்கிரமிப்பாளர்களை எதிர்க்க ஒன்றிணையுங்கள் என்பதும், ஓரிறை ஒப்புதலுக்கான உறுதி மொழியை உரைத்தது சதாமின் கடைசி வார்த்தை களாக இருந்தன. ஈராக்கில் ஆக்கிர மிப்பாளர்களை அழைத்து வந்தவர்கள், சதாமை தூக்கிலிட்டதாக நினைத்திருக்க கூடும். ஆனால் தூக்கில் தொங்கியது ஈராக்கின் தன்மானம், தன் நலம், தன்னாளுமை ஆகியன.பொய்களால் புனைந்துரைக்கப்பட்ட ஓர் குற்றச்சாட்டின் கீழ் ஈராக்கின் தன்னாளுமை பிடுங்கி எடுக்கப்பட்டதை யும் சதாமின் உயிர் தூக்கில் தொங்க விடப்பட்டதையும், உலகம் தன் போக்கில் மறந்திருக்கக் கூடும். ஆனால் விடிகிற ஒவ்வொரு பொழுதும் ஈராக்கியனின் வாழ்வும், எதிர்கால நம்பிக்கையும் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விலை வீழ்ச்சி அடைந்த சந்தைப் பொருள் போல மக்களின் உயிர்கள் அன்னியப் படையினரால் கொத்து கொத்தாக எடுத்துக் கொள்ளப்படு கின்றன.மீந்து போனதை கழிவுத் தொட்டி யிலே கொட்டுவது போலவும் பிணங்கள் அள்ளி அப்புறப்படுத்தப்படுகின்றன.சதாம் ஆட்சியில், ஐ.நா விதித்திருந்த பொருளாதார தடைகளால் உணவும், மருந்தும் இன்றி மக்கள் வதைப்பட்டனர். அந்த அவலத்தை காணமுடியாமலும் வதையிலிருந்து விடுதலையளிக்கவும் அமெரிக்கா நேரடி களப்பணியாற்றி, கொலை செய்து வருகிறது. கொல்லு கிறவனுக்கு ஓர் உந்து சக்தி வேண்டும். அதனால் கிறிஸ்தவத்தின் மீது நிறுவனப் பற்றும் முஸ்லிம்களது இருத்தலின் மீது வெறுப்புணர்வும் கொண்டவர்கள் ஆயுதப் படைகளாக ஈராக்கில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.ஈராக்கின் பாதுகாப்புக்காக அனுமதிக் கப்பட்டிருக்கும் தனியார் படை தான், 'பிளாக் வாட்டர்ஸ்' இந்நிறுவனத்தின் தலைவர் எரிக்பிரின்ஸ் தீவிர கிறிஸ்தவ வலதுசாரியாவார். புஷ்ஷின் குடியரசு கட்சிக்கு தேர்தல் நிதியை அள்ளித் தந்ததற்கு கைமாறாக தனியார் படை ஒப்பந்தம் எரிக் பிரின்ஸ்சுக்கு கிடைத்தது. முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி கோபர் பிளர்க் இந்நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். இவர்தான் முன்னாள் உஸாமா பின்லேடன் தேடுதல் வேட்டை யில் ஈடுபடுத் தப்பட்டார். அதிகார வர்க்கத்துடன் பிளாக் வாட்டர் நிறுவனத் துக்கும் இருக்கும் தொடர்பு கோபர் பிளாக் அதன் தலைவராக இருப்பதில் விளங்கு கிறது.சென்ற ஆண்டு பிளாக் வாட்டர் நிறுவனத்தைச் சேர்ந்த படை ஊழி யன் ஈராக்கின் துணை அதிபரின் பாதுகாவ லரை கிறிஸ்துமஸ் கொண் டாட்டத்தின் போது சுட்டுக் கொன்றான். இக்கொலை யாளி மீது ஈராக்கில் கைதோ, வழக்கோ இல்லை. உடனே அவன் அமெரிக்கா வுக்கு திருப்பி அனுப்பப்பட்டான்.அவனை வேலையை விட்டு நீக்கியது தான் அவனது குற்றத்திற்கான நடவடிக்கை என்கிறது பிளாக் வாட்டர்ஸ். இன்னொரு சம்பவத்தில் தங்களின் வாகனம் அருகே பயணித்த குற்றத்திற்காக ஒட்டுனர் ஒருவரை சுட்டுக் கொன்றனர். கடந்த பிப்ரவரி 4ல் ஹானா அல் அமீசி எனும் ஈராக் செய்தியாளர், பிப்ரவரி 7ல் ஈராக் அரசு தொலைக் காட்சியாளர்கள் என பல பொதுமக்கள் அற்ப காரணங்களுக்காகவெல்லாம் காக்கை குருவிகளை சுடுவதைப் போல் சுட்டுக் கொன்றுள்ளனர்.கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி பாக் தாத்தை ஒட்டிய நெரிசல் மிக்க மன்சூரில் உள்ள நிசௌர் சதுக்கத்தில் பொதுமக்கள் மட்டும் புழங்கக்கூடிய அவ் வீதியில், அந்த வாகனம் நுழைந்ததும் மக்கள் நடமாட்டத்தை நிறுத்திவைக்க உள்ளூர் காவல்துறை அவசர அறிவிப்பு செய்கிறது. காவல்துறை அறிவிப்பை தொடர்ந்து ஏற்பட்ட களேபரத்தினூடே ஈராக்கியர்களை ஏற்றி வந்த ஒரு பேருந்து, தடையைக் கவனிக்காமல் வழக்கமாக நகரத் தொடங்குகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்வாகனம் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. கையெறி குண்டுகள் வீசப்பட்டன. அந்த வாகனத்தில் அல்காயிதாவினரோ, தாலிபான்களோ வரவில்லை. பச்சிளம் குழந்தைகளும், இளம் பெண்களும் அதில் அடங்குவர்.பிளாக் வாட்டர்ஸ் இந்த ஆண்டு மட்டும் 52 துப்பாக்கிச் சூடுகளை நடத்தி யிருக்கிறது. கடந்த இரண்டாண்டு களில் 195 முறை இது மாதிரியான படுகொலை களை நடத்தி யுள்ளது. அமெரிக்க நிர்பந்தத் தாலும், அமெரிக்கப் படையினருக்கு இருப்பதை போன்ற பாதுகாப்பு சட்டம் இந்த கூலிப் படையினருக்கு இருப்பதாலும் இக்குற்ற வாளி கள் மீது நடவடிக்கை எடுக்க வழி ஏதும் இல்லை. 'இப்ர்ர்க் நன்ய்க்ஹஹ்' இரத்த ஞாயிறு என வர்ணிக்கப்படும் இந்தச் சம்பவத்தை உலக ஊடகங்கள், கவனம் ஈர்க்கும் வண்ணம் அம்பலப்படுத்த வில்லை. ஈராக் மக்கள் மத்தியில் எழுந்த கொந்தளிப்பை கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்கும் 32 கோடி ரூபாய் இழப்பீடாகத் தர வேண்டும் பிளாக் வாட்டர்ஸ் நிறுவனம் உடனே வெளியேற வேண்டும் என்றும் பிரதமர் நூரி அல் மாலிக்கி நிபந்தனை விதித்தார். இக்கூலிப்படையினரைப் பாதுகாக்க 2004ல் தலையாட்டி அரசு உருவாகும் சில நாட்களுக்கு முன்னரே 'ஆணை எண்.17' என்றதொரு புதிய சட்டத்தினை ஈராக்கில் இடைக்கால நிர்வாகியாக இருந்த பால் பிரிமர் உருவாக்கினார்.'சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை' என்ற அமெரிக்க தன்னார்வ நிறுவனத்திற்காக கூலிக்கு அமர்த்தப் பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் ஒன்று, பொதுமக்கள் பயணம் செய்த கார் ஒன்றினை சுட்டு இரண்டு ஈராக்கிய பெண்களை கொன் றுள்ளது.கூலிப்படையினருக்கு பாதுகாப்பு வழங்கும் 'ஆணை எண்.17'ஐ திரும்ப பெற வேண்டும் என்று பொம்மை அரசு முதலில் நிர்பந்தம் விதித்தாலும், அமெரிக்க அரசின் நிர்பந்தத்திற்கு பணிந்து, அமெரிக்கா விரும்பினால் தளர்த்த முடியும் அமெரிக்கா அதனை செய்ய வேண்டும் என கெஞ்சும் நிலைக்கு இறங்கியுள்ளது.ஈராக் முழுக்க அமெரிக்க கூட்டணிப் படையுடன் 180 ஒப்பந்த நிறுவனங்களின் கூலிப்படையினரும் இறக்கி விடப்பட் டுள்ளனர். ஏற்கெனவே 1,35,000 அமெரிக்கப் படையினரால் அல்லப்படும் ஈராக் மக்கள் மேலும், 1,80,000 தனியார் கூலிப்படையினரையும் எதிர் கொண்டு வாழ்கின்றனர். அமெரிக்க ராணுவத்தினர் 3,900 பேரும், கூலிப்படையினரில் 1000க்கு மேற்பட்டவர்களும் கொல்லப் பட்டுள்ளனர். கூலிப்படையில் மட்டும் 12,000 பேர் படுகாயம் பட்டிருக்கின்றனர்.அதேநேரம் சதாமின் ஆட்சி அகற்றப்பட்டது முதல் சதாம் கொல்லப் படும் வரை, ஈராக் மக்கள் 6 லட்சம் பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால் சதாம் கொல்லப்பட்ட பின்னர் அந்த எண்ணிக்கை 11 லட்சமாக உயர்ந்திருக் கிறது. முதலாளித்துவ மேலாண்மை வெறிபிடித்த அமெரிக்க அரசு கூட்டம் கூட்டமாக ஈராக்கியர்களை கொன்று குவித்து வருகிறது.எந்த மக்களை சதாமிடம் இருந்து காப்பற்றுவதாக அமெரிக்காவும் அதன் எடுபிடி அரசுகளும் கூறிவந்ததோ, அதே மக்களைத்தான் இன்று குவியல் குவியலாக கொன்று குவிக்கிறார்கள். சதாமை பழி தீர்ப்பதற்காக எதிரிகள் எந்த அமெரிக்காவை நண்பனாகக் கருதினார் களோ அதே அமெரிக்காவின் மிரட்ட லுக்கு முன் கைகட்டி நிற்கிறார்கள்.ஆம் தூக்கு மேடையில் நின்று கொண்டு சதாம் சொன்ன வார்த்தைகள் உண்மையானவை. ''ஒருநாள் உங்கள் செயலுக்காக வருந்துவீர்கள் ஆக்கிர மிப்பு அமெரிக்காவை விரட்ட ஒன்று படுவீர்கள்''.
நன்றி :http://www.tmmkonline.org/